கஷ்மீர் குறித்த பிரஷாந்த் பூஷணின் கருத்து சரியல்ல: அன்னா ஹசாரே
Page 1 of 1

ராலேகான்சித்தி:கஷ்மீர்
விவகாரம் தொடர்பாக மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் கூறியிருப்பது
தங்களது குழுவின் கருத்து அல்ல என்றும், அவ்வாறு அவர் கூறியது சரியான
கருத்தல்ல என்று அன்னா ஹசாரே விளக்கம் அளித்தார்.
அதேவேளையில், தங்கள் கமிட்டியில் இருந்து
பிரசாந்த் பூஷணை நீக்க வேண்டும் என்று அன்னா ஹசாரே ஒருபோதும் சொல்லவில்லை
என்று என்று அவரது குழு தெரிவித்துள்ளது.
பிரஷாந்த் பூஷணின் கஷ்மீர் கருத்தும்,
அதையொட்டிய நிகழ்வுகள் குறித்தும் அன்னா ஹசாரே அளித்துள்ள விளக்கத்தில்,
“காஷ்மீர் குறித்து பூஷணின் கருத்து எங்களது குழுவின் ஒட்டுமொத்த கருத்து
அல்ல. அவர் குழுவைக் கேட்டு கருத்து கூறவில்லை. அந்தக் கருத்துகள் எல்லாம்
அவருடைய தனிப்பட்ட கருத்துகளாகும். அந்த கருத்துகளுக்கு குழு பொறுப்பாகாது.
அவரது கருத்து சரியானதுமல்ல.” என்றார் அன்னா ஹசாரே.
மேலும், “இதுபோன்று நாங்கள் கருத்து
தெரிவிக்க மாட்டோம். அது எங்களுடைய கண்ணோட்டம் அல்ல. கஷ்மீர் இந்தியாவின்
ஒருங்கிணைந்த பகுதி. தொடர்ந்தும் இந்தியாவி்ல்தான் இருக்கும். எதைச்
செய்தாலும் அதை உறுதிப்படுத்தும் வகையில்தான் இருக்க வேண்டும். இந்த
விவகாரத்தில் தேவையற்ற இந்த வாதத்தை நிறுத்த வேண்டும்.” என்றார் அன்னா
ஹசாரே.
முன்னதாக, கஷ்மீர் பிரச்னையில் மக்களிடம்
பொது வாக்கெடுப்பு நடத்தி தீர்வுகாணப்பட வேண்டும் என்று பிரசாந்த் பூஷண்
கருத்து தெரிவித்திருந்தார். இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்
வகையில், உச்ச நீதிமன்றத்திலுள்ள வழக்கறிஞர்கள் அறையில், பிரசாந்த் பூஷணை
ராம் சேனை அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் மூவர் தாக்கினர். அம்மூவரும்
பின்னர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, பூஷணை தாக்கியதால் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் மூவருக்கும் நேற்று நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

Similar topics
» உடைந்து நொறுங்கும் அன்னா ஹசாரே கூடாரம்?
» அத்வானியின் ரதயாத்திரை ஒரு ஏமாற்று வேலை! அன்னா ஹசாரே
» நரேந்திர மோடி செய்தது தவறு - அன்னா ஹசாரே!
» கஷ்மீர் குறித்த அமெரிக்க வெளியுறவுத்துறையின் வரைபடம் குறித்து சர்ச்சை
» ஜன லோக்பாலை ஆதரிக்காமல் இருந்தவர்களுக்கு மீண்டும் எம்.பி.யாக வாய்ப்பு அளிக்கக் கூடாது: அன்னா ஹசாரே

Permissions in this forum:
You cannot reply to topics in this forum