பூமியின் முளைகளாக இருக்கும் மலைகள்
பூமியின் முளைகளாக இருக்கும் மலைகள்
கோள வடிவிலான இந்த பூமியின் மேற்பரப்பு (Outer Crust Of The Earth) மட்டுமே உறுதியாகவும், கடினமானதாகவும் இருக்கிறது. ஆனால், உள்பகுதியில் ஆழமாக செல்ல செல்ல அவைகள் அதிக வெப்பமுடையதாகவும், உருகிய நிலையிலும் இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள். பூமியின் மேற்பரப்பில் உள்ள இந்த இருகிய பகுதி (Outer Crust) பூமியின் மேற்பரப்பிலிருந்து 1 முதல் 10 கிலோமீட்டர் வரைதான். அதற்கு கீழே உருகிய நெருப்பு குழம்புகள் இருக்கின்றன.
இவ்வாறு பூமியின் மேற்பகுதி இறுகியும், உட்பகுதி இறுகாமல் உருகிய நிலையிலும் இருப்பதால், பூமியின் சுழற்சியின் காரணமாக மையவிலக்கு விசையால் (Centrifugal Force) பூமியின் மேற்பரப்பு நகர்ந்து இடம் பெயர்ந்தது என்று புவியியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள். இதற்கு ஆதாரமாக உலக வரைபடத்தை காட்டுகிறார்கள். உல்கம் முழுவதிலும் வளைந்தும், நெளிந்தும் இருக்கும் பூமியின் நிலப்பரப்புகளை ஒன்று சேர்த்தால் அவை கச்சிதமாகப் பொருந்திக் கொள்ளும் என்கின்றனர். பார்க்கவும் வீடியோ : The function & Movements of Mountains! (Pegs & Continental Drifts)
இதிலிருந்து நாம் விளங்கிக் கொள்வது என்னவென்றால் ஒரு காலத்தில் ஒரே துண்டாக இருந்த பூமியின் நிலப்பரப்புகள் எல்லாம் விலகி தனித்தனி துண்டுகளாகியது (Continental Drift) என்பதுதான். பூமியின் மேற்பகுதி கடினமானதாகவும், உட்பகுதி உருகிய நிலையிலும் இருப்பதால் தான் இது நடைபெற்றதாக புவியியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். இவ்வாறு இந்த நிலப்பரப்புகள் தொடர்ந்து நகர்ந்து கொண்டிருந்த வேளையில் ‘Folding Phenomena’ என்ற முறையில் நிலப்பரப்புகளில் மலைகள் தோன்ற ஆரம்பித்தன. இந்த மலைகள் பூமியின் மேற்பரப்பில் அல்லாமல் பூமிக்குள்ளும் ஆழமாகச் சென்று முளைகளாக அமைந்தன. அதனால்தான் வேகமாக நகர்ந்து கொண்டிருந்த கண்டத்தின் நிலப்பரப்புகள் அவ்வாறு வேகமாக நகராமல் நிலைநிறுத்தப்பட்டன. இவ்வாறு மலைகளை முளைகளாக நிலைநிறுத்தியதை அல்லாஹ்வும் தன் திருமறையில் பின்வருமாறு கூறுகின்றான்.
“நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா? இன்னும், மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா?” (அல்குர்ஆன்: 78:6-7)
“இன்னும் இப்பூமி (மனிதர்களுடன்) ஆடி சாயாமலிருக்கும் பொருட்டு, நாம் அதில் நிலையான மலைகளை அமைத்தோம். அவர்கள் நேரான வழியில் செல்லும் பொருட்டு, நாம் விசாலமான பாதைகளையும் அமைத்தோம்” (அல்குர்ஆன்: 21:31)
“அவன் வானங்களைத் தூண்களின்றியே படைத்துள்ளான். அதனை நீங்களும் பார்க்கின்றீர்கள். உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அதன்மேல் மலைகளை உறுதியாக நிறுத்தினான். மேலும், அதன்மீது எல்லாவிதமான பிராணிகளையும் அவன் பரவ விட்டிருக்கின்றான். இன்னும், நாமே வானத்திலிருந்து மழையை பொழியச் செய்து அதில் சங்கையான, வகை வகையான (மரம், செடி, கொடி ஆகியவற்றை) ஜோடி ஜோடியாக முளைப்பித்திருக்கின்றோம்” (அல்குர்ஆன்: 31:10)
“உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் உறுதியான மலைகளை நிறுத்தினான். இன்னும் நீங்கள் சரியான வழியை அறி(ந்து செல்)வதற்காக அவன் ஆறுகளையும் பாதைகளையும் (அமைத்தான்)” (அல்குர்ஆன்: 16:15)
மலைகள் பூமிக்குள் இவ்வாறு முளைகளாக அமைந்திருக்காவிட்டால், நாம் வசிக்க முடியாத அளவிற்கு இந்த பூமி ஆடி, அசையும் என்கின்றனர் புவியியல் வல்லுணர்கள்.
அல்லாஹ்வே முற்றிலும் அறிந்தவன்.
பார்க்கவும் வீடியோ : The function & Movements of Mountains! (Pegs & Continental Drifts)
நன்றி : http://suvanathendral.com/
» மேற்கத்திய நாடுகள் தலையிட்டால் எதிர்விளைவுகள் கடுமையாக இருக்கும்-சிரியா எச்சரிக்கை
» அன்னாவின் போராட்டமும் குழுவும் செயற்கையானது : 11 வருடங்களாய் உண்ணாவிரதம் இருக்கும் ஐரம் ஷர்மிளா
» அஃப்ஸல் குருவுக்கு மரணத்தண்டனை:எதிர் விளைவுகள் கடுமையாக இருக்கும் – ஹுர்ரியத் எச்சரிக்கை