தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இரோம் ஷர்மிளாவின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் நாடகத்தை கண்டு அழுத கொரியர்கள்

Go down

இரோம் ஷர்மிளாவின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் நாடகத்தை கண்டு அழுத கொரியர்கள்  Empty இரோம் ஷர்மிளாவின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் நாடகத்தை கண்டு அழுத கொரியர்கள்

Post by முஸ்லிம் Sat Oct 15, 2011 9:50 pm

இரோம் ஷர்மிளாவின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் நாடகத்தை கண்டு அழுத கொரியர்கள்  Irom-sharmila-doc-209x170கொல்கத்தா:ஆயுதப்படை
சிறப்பு அதிகாரச் சட்டத்தை வாபஸ் பெறக்கோரி கடந்த 11 ஆண்டுகளாக
உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவரும் இரும்பு பெண்மணியான இரோம் ஷர்மிளாவின்
வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட குரல் இல்லாத நாடகத்தை காண
தென்கொரிய சர்வதேச நாடக விழாவில் மக்கள் பெரும் ஆர்வத்துடன் அலைமோதினர்.

இம்பாலைச் சார்ந்த 15 உறுப்பினர்களைக் கொண்ட குழுவினர் ‘ஆத்ம பலம்’ என்ற நாடகத்தை அரங்கேற்றினர்.

1980-ஆம் ஆண்டு ராணுவ நடவடிக்கையின் போது
இரத்த சாட்சிகளானவர்களின் நினைவாக கொரிய நகரமான க்யாங்சூவில் சுன்சியோன்
நாடக விழா நடைபெறுகிறது. எண்பதுகளின் க்யாங்சூவில் சுஹு ஹுவானின் ராணுவ
ஏகாதிபத்தியத்திற்கு கீழ் நடந்த கொடூரமான அடக்கு முறைகளுக்கு ஒப்பானதுதான்
இந்திய ராணுவம் மணிப்பூரில் நடத்திக்கொண்டிருக்கிறது. இந்த உண்மையைத்தான்
நாடகம் வெளிச்சம்போட்டு காட்டுகிறது என இயக்குநர் சதானந்தசிங் கூறினார்.

2007-ஆம் ஆண்டில் சமாதானத்திற்கான
கியாங்சூ பரிசுக்கு இரோம் ஷர்மிளா தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். 2000-ஆம்
ஆண்டு முதல் இம்பாலில் ஜவஹர்லால் நேரு இன்ஸ்ட்யூட் ஆஃப் மெடிக்கல்
சயின்ஸில் வலுக்கட்டாயமாக திரவ உணவை மூக்கில் குழல் மூலமாக செலுத்தப்பட்ட
நிலையில் சிறை வைக்கப்பட்டுள்ளார் அவர்.

30 ஆண்டுகள் கொரியா மக்கள் அனுபவித்த
ராணுவ ஆட்சியின் பயங்கரவாதத்தில், நாடகத்தை கண்ட பலரும் அழுதனர். நாடகம்
முடிந்த பிறகும் நகரத்தைச் சார்ந்தவர்களும், பத்திரிகையாளர்களும்
நாடகத்தில் நடித்தவர்களை பாராட்ட திரண்டனர்.




இரோம் ஷர்மிளாவின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் நாடகத்தை கண்டு அழுத கொரியர்கள்  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11138
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» இரோம் ஷர்மிளாவின் போரட்டத்திற்கு ஆதரவாக நாடு தழுவிய கையெழுத்து போராட்டம் மற்றும் விழுப்புணர்வு பிரச்சாரம்
» கஷ்மீரில் இரோம் ஷர்மிளாவுக்கு ஆதரவாக போராட்டம்
» தெருக்களில் வாழும் முஸ்லிம்களுக்கு போலீசாரை கண்டு பயம்: ஸய்யித் ஷஹாபுத்தீன்
» பைப் வெடிகுண்டு வழக்கில் கைதான இஸ்மத், அப்துல் ரகுமான் நீதிமன்றத்தில் ஆஜர்! கதறி அழுத குடும்பத்தினர்
» தங்களின் மகள்களுடைய வாழ்க்கையை செவ்வனே அமைத்துக் கொடுப்பதில் காட்டுகின்ற அக்கரை போல் ஏன் உங்கள் மகன்களின் வாழ்க்கை விஷயத்திலும் அக்கரை காட்டக் கூடாது?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum