வால்ஸ்ட்ரீட் போராட்டம்: அமெரிக்காவில் ஏராளமானோர் கைது
Page 1 of 1

வாஷிங்டன்:கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக
நடக்கும் வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு போராட்டத்தில் பங்கேற்போரையும்,
ஆதரிப்பவர்களையும் கைது செய்து போராட்டத்தை அடக்கி ஒடுக்க அமெரிக்க அரசு
முயற்சி மேற்கொண்டுள்ளது.
நியூயார்க்கில் ஹார்லம் மாவட்டத்தில்
போலீஸ் ஸ்டேசனுக்கு வெளியே கண்டன பேரணி நடத்திய நூற்றுக்கும் மேற்பட்டோரை
போலீஸ் கைது செய்துள்ளது. எவ்வித காரணமுமின்றி பலரை கைது செய்ததற்கு
கண்டனம் தெரிவித்து பேரணி நடத்தப்பட்டது.
போலீஸ் ஸ்டேசனின் பணிகளுக்கு இடையூறு
ஏற்படுத்தாமல் போராட்டம் நடத்தியவர்களை சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டி
போலீஸ் கைது செய்ததாக அஸோசியேட் ப்ரஸ் தெரிவித்துள்ளது.
ப்ரின்ஸ்டன் பல்கலைக்கழக பேராசிரியர்
கர்னல் வெஸ்ட் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவார். வால்ஸ்ட்ரீட்
ஆக்கிரமிப்பு இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்ததால் வெஸ்ட் கைது
செய்யப்பட்டுள்ளார். ஆனால், பெரும்பாலோரை விடுதலைச் செய்துள்ளதாக
நியூயார்க் போலீஸ் துறை அறிவித்துள்ளது.
கலிஃபோர்னியா, ஆக்லந்து, ஒஹாயோ ஆகிய
இடங்களில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு
போராட்டத்தின் அமைப்பாளர்களில் ஒருவரான தேப்ரா ஸ்வீட்
பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிப்பதற்கு சற்று முன்பு கைது
செய்யப்பட்டார். அதேவேளையில் ஜார்ஜியா, ஃப்ளோரிடா, கொலரடோ ஆகிய இடங்களில்
நஷ்டத்தில் இயங்கிய நான்கு வங்கிகள் மூடப்பட்டுள்ளன. இத்துடன்
அமெரிக்காவில் இவ்வாண்டு மூடப்பட்டுள்ள வங்கிகளின் எண்ணிக்கை 84 ஆனது.

Similar topics
» வால்ஸ்ட்ரீட் போராட்டம்: எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவு அதிகரிக்கிறது
» அமெரிக்காவில் பரவும் போராட்டம்!
» இறுதி எச்சரிக்கையை புறக்கணித்து வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு எதிர்ப்பாளர்கள் தொடர் போராட்டம்
» அமெரிக்காவில் எதிர்ப்பாளர்கள் கேபிடல் ஹில்லில் நுழைந்து போராட்டம்
» ஈரான் மீதான நடவடிக்கைக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum