அமெரிக்காவில் எதிர்ப்பாளர்கள் கேபிடல் ஹில்லில் நுழைந்து போராட்டம்
Page 1 of 1
அமெரிக்காவில் எதிர்ப்பாளர்கள் கேபிடல் ஹில்லில் நுழைந்து போராட்டம்
வாஷிங்டன்:வேலையில்லா
திண்டாட்டம், அரசு புறக்கணிப்பு ஆகியவற்றை கண்டித்து அமெரிக்காவில்
எதிர்ப்பாளர்கள் அமெரிக்க காங்கிரசின் மாநாட்டு திடலான வாஷிங்டனில் உள்ள
கேபிடல் ஹில்லில் நுழைந்து போராட்டம் நடத்தினர்.
ஏராளமான காங்கிரஸ்(அமெரிக்க பாராளுமன்றம்)
உறுப்பினர்களின் அலுவலகங்களுக்கு தடை ஏற்படுத்திய எதிர்ப்பாளர்கள் மக்கள்
பிரதிநிதிகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
ஷிக்காகோ, போஸ்டன், ஃப்ளோரிடா, செண்ட்
லூயிஸ், கான்ஸாஸ் ஆகிய இடங்களை சார்ந்தவர்கள் கேபிடல் ஹில்லை மீட்போம் என்ற
முழக்கத்துடன் போராட்டத்தை நடத்தினர். வேலைவாய்ப்பு மசோதாவை உடனடியாக
நிறைவேற்றவேண்டும், கார்ப்பரேட்டுகள் மீது சுமத்தும் வரியை ஒரு சதவீதம்
அதிகரிக்கவேண்டும் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்ற அமெரிக்க காங்கிரஸ் அவசர
நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என எதிர்ப்பாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மக்களின் பிரதிநிதிகள்தாம் காங்கிரஸின்
உறுப்பினர்கள் என்பதை நினைவூட்டிய எதிர்ப்பாளர்கள், மசோதாவை நிறைவேற்ற
நடவடிக்கை எடுக்கவில்லை எனில் நாடு முழுவதும் போராட்டம் பரவும் என
எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Similar topics
» அமெரிக்காவில் பரவும் போராட்டம்!
» வால்ஸ்ட்ரீட் போராட்டம்: அமெரிக்காவில் ஏராளமானோர் கைது
» ஈரான் மீதான நடவடிக்கைக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்
» இறுதி எச்சரிக்கையை புறக்கணித்து வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு எதிர்ப்பாளர்கள் தொடர் போராட்டம்
» துனீசியா:முகத்தை மறைக்க தடையை எதிர்த்து நடந்த போராட்டம் -போலீஸாருடன் எதிர்ப்பாளர்கள் மோதல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum