துனீசியா:முகத்தை மறைக்க தடையை எதிர்த்து நடந்த போராட்டம் -போலீஸாருடன் எதிர்ப்பாளர்கள் மோதல்
Page 1 of 1
துனீசியா:முகத்தை மறைக்க தடையை எதிர்த்து நடந்த போராட்டம் -போலீஸாருடன் எதிர்ப்பாளர்கள் மோதல்
துனீஸ்:பெண்கள்
முகத்தை மறைப்பதை தடைச் செய்ததற்கு எதிராக துனீசியாவின் தலைநகரமான
துனீஸில் போராட்டம் நடத்தியவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல்
நடைபெற்றது.
துனீசின் முக்கிய பல்கலைக்கழகமான
அல்மனாரில் திரண்ட போராட்டக்காரர்கள் பேரணியாக புறப்பட்டனர். பின்னர்
அவர்கள் போலீஸார் மீது கல்வீசினர். பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் உள்ள
மஸ்ஜிதை பூட்டியது மக்களின் உணர்வுகளை தூண்டிவிட்டது.
கண்ணீர் புகையை பிரயோகித்த போலீஸார்
போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது கல்வீசி தாக்கினர். தன்னார்வ தொண்டர்கள்
கூடும் மஸ்ஜித் கடந்த 2002 ஆம் ஆண்டு துனீசியாவின் வெளியேற்றப்பட்ட
சர்வாதிகாரி ஜைனுல் ஆபிதீன் பின் அலியால் பூட்டப்பட்டது. கடந்த ஜனவரி மாதம்
பின் அலி வெளியேறிய பின் மஸ்ஜித் திறக்கப்பட்ட போதிலும் மீண்டும்
பூட்டப்பட்டது.
அதேவேளையில், துனீசின் இன்னொரு பகுதியில்
அல்லாஹ்வை சித்தரிக்கும் சினிமாவை ஒளிபரப்பிய தொலைக்காட்சி நிலையத்தின்
நடவடிக்கைக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர். இவர்களை
கலையச் செய்த போலீஸார் 40 பேரை கைதுச் செய்துள்ளனர்.
Similar topics
» வாஷிங்டனில் எதிர்ப்பாளர்கள்-போலீஸ் மோதல்
» துனீசியா, எகிப்தைத் தொடர்ந்து ஈரானில் போராட்டம் !
» அமெரிக்காவில் எதிர்ப்பாளர்கள் கேபிடல் ஹில்லில் நுழைந்து போராட்டம்
» இறுதி எச்சரிக்கையை புறக்கணித்து வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு எதிர்ப்பாளர்கள் தொடர் போராட்டம்
» மோடியின் போராட்டம் நீதியின் போராட்டம் அல்ல, அது அநீதியின் போராட்டம் – சமூக ஆர்வலர் மல்லிகா சாராபாய்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum