துனீசியா, எகிப்தைத் தொடர்ந்து ஈரானில் போராட்டம் !
Page 1 of 1

ஆப்பிரிக்கா நாடான துனீசியா, மத்திய கிழக்கு நாடான எகிப்து ஆகியவற்றின் வரிசையில் ஈரானில் அரசுக்கு எதிராக கலவரத்தில் ஈடுபட்டு வருவதாக செய்தி பரவியுள்ளது.
துனிசியாவில் ஒரு வாலிபரின் தற்கொலையின் காரணமாக அதிபர் பின் அலிக்கு எதிராக பொதுமக்கள் திரண்டு போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து அவர் நாட்டை விட்டு வெளியேறினார். பின்னர் 30 ஆண்டுகளாக ஆட்சி நடத்திய எகிப்தின் அதிபர் ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தையடுத்து 18 நாள்கள் அமைதிப் போராட்டத்துக்குப் பின்னர் அவர் பதவி விலகினார்.
இந்த வரிசையில் மக்கள் போராட்டம் அல்ஜீரியா, ஏமன், ஈரான் உள்ளிட்ட இதர ஆப்பிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் பரவியுள்ளது. ஈரானில் அதிபர் அஹ்மதி நிஜாத் பதவி விலகக் கோரி அரசுக்கு எதிரானவர்கள் போராட்டம் நடத்தி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள ஆஷாதி சதுக்கத்தில் கூடிய போராட்டக்காரர்கள் அதிபருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். கண்ணீர் புகை குண்டுகளையும், ரப்பர் குண்டுகளையும் பயன்படுத்தி போலீசார் போராட்டக்காரர்களை கலைத்ததாக தெரிகின்றது.
இந்நேரம்

Similar topics
» துனீசியா:முகத்தை மறைக்க தடையை எதிர்த்து நடந்த போராட்டம் -போலீஸாருடன் எதிர்ப்பாளர்கள் மோதல்
» மோடியின் போராட்டம் நீதியின் போராட்டம் அல்ல, அது அநீதியின் போராட்டம் – சமூக ஆர்வலர் மல்லிகா சாராபாய்
» மக்கள் புரட்சி: எகிப்தைத் தொடர்கிறது அல்ஜீரியா!
» ஈரானில் 12 சி.ஐ.ஏ உளவாளிகள் கைது
» ஈரானில் விமான விபத்து: 70 பேர் பலி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum