வாஷிங்டனில் எதிர்ப்பாளர்கள்-போலீஸ் மோதல்
Page 1 of 1
வாஷிங்டனில் எதிர்ப்பாளர்கள்-போலீஸ் மோதல்
வாஷிங்டன்:’வால்ஸ்ட்ரீட்
ஆக்கிரமிப்பு இயக்கத்தின்’ கொள்கையால் ஈர்க்கப்பட்ட மக்கள் நடத்திய
போராட்டத்தை போலீசார் தடுத்ததால் நீண்ட நேரம் மோதல் ஏற்பட்டது.
அமெரிக்காவின் தலைநகரில் ஸ்மித் ஸோனியன்
தேசிய வான்வெளி-விண்வெளி அருங்காட்சியகத்தை நோக்கி அமெரிக்க ராணுவம்
நடத்திவரும் அடாவடித்தனமான ஆளில்லா விமானத் தாக்குதலை கண்டித்து 500-க்கும்
மேற்பட்ட மக்கள் போராட்டம் நடத்தினர்.
அருங்காட்சியகத்திற்கு உள்ளே நுழைய முயன்ற
போராட்டக்காரர்களை போலீஸ் தடுத்து நிறுத்தியது. வாஷிங்டன் டி.சியை
கைப்பற்ற முனையும் போராட்டக்காரர்களும், போர் எதிர்ப்பு ஆர்வலர்களும்
போராட்டத்தில் பங்கேற்றனர்.
அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானத்
தாக்குதலை தொடந்து நடத்தும் ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பிற்கு 10 வருடங்கள்
நிறைவுற்றதை தொடர்ந்து இப்போராட்டம் ஏற்பாடுச் செய்யப்பட்டிருந்தது.
போராட்டத்தில் ஈடுபட்டோரை போலீஸார்
தடுத்து நிறுத்தியதால் மோதல் உருவானது. போராட்டத்தில் கலந்துகொண்டோர் மீது
போலீஸார் பெப்பர் பொடியை வீசியதால் மக்கள் சிதறி ஓடினர் என
அருங்காட்சியகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸபெல் லாரா கூறுகிறார்.
ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
அதேவேளையில் ஆயிரக்கணக்கான ‘வால்ஸ்ட்ரீட்
ஆக்கிரமிப்பு இயக்கத்தின்’ உறுப்பினர்கள் நியூயார்க் நகரத்தின் வாஷிங்டன்
சதுர பார்க்கை நோக்கி பேரணி நடத்தினர். பொது சபை என அழைக்கப்பட்ட
மாநாட்டின் ஒரு பகுதியாக இப்பேரணி நடத்தப்பட்டது. மன்ஹாட்டனில் ஜீகோட்டி
பார்க்கிலிருந்து துவங்கிய பேரணி அமைதியாக நடந்தேறியது.
கடந்த 22 தினங்களாக எதிர்ப்பாளர்கள்
ஜூகோட்டி பூங்காவில் தங்கியுள்ளனர். மேலும் பல நகரங்களுக்கு போராட்டத்தை
பரவலாக்குவது குறித்து தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். மாணவர்களும்,
பேராசிரியர்களும், தொழிலாளர் யூனியன்களும் போராட்டத்தில் கலந்துக்கொண்டதை
அடுத்து போராட்டம் அமெரிக்கா முழுவதும் பரவலாகியுள்ளது.
Similar topics
» துனீசியா:முகத்தை மறைக்க தடையை எதிர்த்து நடந்த போராட்டம் -போலீஸாருடன் எதிர்ப்பாளர்கள் மோதல்
» சிரியாவில் மோதல்:ராணுவ நடவடிக்கையில் 41 பேர் மரணம்
» எனக்கும் அத்வானிக்கும் மோதல் இல்லை - நரேந்திர மோடி!
» இஸ்ரேல் தீவிர யூதமத பழமைவாதிகளும், போலீசாரும் மோதல்
» லிபியாவில் இறுதி கட்ட மோதல் - உள்நாட்டுக் கலகம் மூளுமா?
» சிரியாவில் மோதல்:ராணுவ நடவடிக்கையில் 41 பேர் மரணம்
» எனக்கும் அத்வானிக்கும் மோதல் இல்லை - நரேந்திர மோடி!
» இஸ்ரேல் தீவிர யூதமத பழமைவாதிகளும், போலீசாரும் மோதல்
» லிபியாவில் இறுதி கட்ட மோதல் - உள்நாட்டுக் கலகம் மூளுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum