தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

லிபியாவில் இறுதி கட்ட மோதல் - உள்நாட்டுக் கலகம் மூளுமா?

Go down

லிபியாவில் இறுதி கட்ட மோதல் - உள்நாட்டுக் கலகம் மூளுமா?  Empty லிபியாவில் இறுதி கட்ட மோதல் - உள்நாட்டுக் கலகம் மூளுமா?

Post by முஸ்லிம் Tue Mar 01, 2011 6:01 pm

டிரிபோலி : லிபியாவின் கிழக்குப் பகுதியை ஏற்கனவே கைப்பற்றிய கடாபி எதிர்ப்புப் புரட்சிப் படைகள், நேற்று முன்தினம் முக்கிய நகரங்களான ஜாவியா மற்றும் மிஸ்ரட்டாவைக் கைப்பற்றிவிட்டன. தொடர்ந்து தலைநகர் டிரிபோலியை நெருங்கிக் கொண்டிருக்கின்றன. டிரிபோலியில் எந்நேரமும் கடாபி ஆதரவு மற்றும் எதிர்ப்புப் படைகளுக்கு இடையில் இறுதிக் கட்ட மோதல் ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

பெங்காசி, அல்பைடா, டெர்ணா உள்ளிட்ட நாட்டின் கிழக்குப் பகுதிகளைக் கடாபி எதிர்ப்பாளர்கள் ராணுவத்தின் துணையுடன் கைப்பற்றினர். பெங்காசியில், முன்னாள் நீதித் துறை அமைச்சர் முஸ்தபா முகமது அப்த் அல் ஜலீல் தலைமையில் இடைக்கால அரசு உருவாக்கப்பட்டது. இதற்கிடையில் நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள, முக்கிய நகரங்களான ஜாவியா மற்றும் மிஸ்ரட்டாவில் கடாபி ராணுவம் மற்றும் எதிர்ப்புப் படைகளுக்கு இடையில் மோதல் நடந்தது. இறுதியில் ஜாவியா நகரம் எதிர்ப்பாளர்கள் கைகளில் வீழ்ந்தது. ஜாவியா நகரைச் சுற்றியுள்ள ரிபாத், கபா, ஜடோ, ரோக்பன்,ஜென்டன் உள்ளிட்ட பல்வேறு சிறு நகரங்களையும் எதிர்ப்பாளர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.

எனினும் ஜாவியா நகரின் வெளிப் பகுதியில் 2,000 ராணுவ வீரர்கள், எதிர்ப்பாளர்களைத் தாக்கத் தயார் நிலையில் உள்ளனர். மிஸ்ரட்டாவின் பெரும் பகுதியையும் எதிர்ப்பாளர்கள் கைப்பற்றி விட்டனர். டிரிபோலிக்கு வெளியே 28 கி.மீ., தூரத்தில் தற்போது எதிர்ப்பாளர்கள் நிலை கொண்டுள்ளனர். அந்நகரில் உள்ள அரசு வானொலி கட்டடம் மீது குண்டு வீசித் தாக்கிய விமானம் ஒன்றை எதிர்ப்பாளர்கள், துப்பாக்கிச் சூடு நடத்தி தாக்கினர். இதனால் அந்த விமானம் வேறு வழியின்றித் தரையில் இறங்கியது. அதில் இருந்தவர்களை எதிர்ப்பாளர்கள் சிறை பிடித்தனர்.

பெங்காசியில் உள்ள ராணுவப் பிரிவின் தலைவர் கர்னல் ரமாதான், டிரிபோலியை நெருங்கிச் செல்லும் எதிர்ப்பாளர்களுக்கு உதவத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். இதனால் டிரிபோலியில் எந்நேரமும் பயங்கர மோதல் மூளலாம். டிரிபோலியின் புறநகர்ப் பகுதியான டஜோராவில், கடாபி ஆதரவாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டிரிபோலியின் சில பகுதிகளில், பொதுமக்கள், தடுப்புகளை ராணுவ வீரர்கள் மீது தூக்கி எறிந்தனர். சிலர் ராணுவப் படைத்தளங்களைச் சூறையாடி, ஆயுதங்களைக் கைப்பற்றினர்.

இந்நிலையில், சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடந்து வரும், ஐ.நா., மனித உரிமை அமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், கடாபியை உடனடியாக லிபியாவில் இருந்து வெளியேற்றுவது குறித்து பிரிட்டன், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாட்டு வெளியுறவு அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதற்கிடையில் லிபியா மீது, ஆயுதப் பரிமாற்றம், சொத்து முடக்கம் உள்ளிட்ட பல்வேறு பொருளாதாரத் தடைகளை ஐரோப்பிய யூனியனும் நேற்று விதித்தது. லிபியாவின் மிக நெருங்கிய நட்பு நாடான இத்தாலி, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகள் கடாபி உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வலியுறுத்தியுள்ளன.

லிபியாவில் நடக்கும் மக்கள் புரட்சியின் பின்னணியில் அல் காயிதா செயல்படுவதாகவும் லிபியா மக்கள் தன்னை அளவுகடந்து நேசிப்பதாகவும் ஆகவே பதவியை விட்டு இறங்கும் பேச்சுக்கே இடமில்லை எனவும் லிபிய அதிபர் கடாபி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11138
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» எகிப்து:முதல் கட்ட தேர்தலின் இறுதி முடிவுகள் வெளியீடு: இஸ்லாமிய கட்சிகளுக்கு 65 சதவீத வாக்குகள்
» வாஷிங்டனில் எதிர்ப்பாளர்கள்-போலீஸ் மோதல்
» சர்ச்சைக்குரிய அருங்காட்சியகம் கட்ட இஸ்ரேல் அனுமதி
» மக்காவில் நிலம் வாங்கி கட்டிடம் கட்ட இந்தியா ஆலோசனை
» எனக்கும் அத்வானிக்கும் மோதல் இல்லை - நரேந்திர மோடி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum