வன்புணர்வு சம்பவங்கள்: டெல்லிக்கு முதலிடம்!
Page 1 of 1
வன்புணர்வு சம்பவங்கள்: டெல்லிக்கு முதலிடம்!
இந்தியாவின் தலைநகரமாகிய டெல்லி
பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நகரம் என்பதை உறுதிப் படுத்தும் விதமாக,
வன்புணர்வு சம்பவங்களில் நாட்டின் 35 முக்கிய நகரங்களில் முதலிடம்
பெற்றுள்ளது.
கடந்த 2010 ஆம் ஆண்டில் டெல்லியில் "பதிவு செய்யப்பட்ட" வன்புணர்வு
வழக்குகள் மட்டுமே 414 ஆகுமாம். இதோடு ஒப்பிடுகையில் மிகப்பெரிய நகரமாகிய
பம்பாயில் 194 வன்புணர்வு வழக்குகளே பதிவாகியுள்ளன.
இன்று (வியாழன்)
வெளியிடப்பட்ட புள்ளிவிவரம் ஒன்றில் தலைநகரில் மட்டுமே 1422 பெண்கடத்தல்
சம்பவங்கள் (பதிவு செய்யப்பட்டவை) என்றும், கடந்த ஆண்டில் 35 முக்கிய
நகரங்களிலும் நடந்த பெண்கடத்தல் பதிவுகளில் இது 37.7 விழுக்காடு என்றும்
தெரியவந்துள்ளது.
புகுந்த வீட்டாரால் தொல்லைபடுத்தப்பட்டு,பதிவு
செய்யப்பட்ட சம்பவ எண்ணிக்கை, டெல்லியில் மட்டும் 1273 ஆகுமாம்.அல்லாமல்,
112 வரதட்சணை சாவுகளும் டெல்லியில் சம்பவித்துள்ளன.
மும்பையில்
பெண்கடத்தல் சம்பவங்கள் 146 ம், வரதட்சணை சாவுகள் 21ம், 312
புகுந்தவீட்டுக் கொடுமைகளும், கடந்த ஆண்டில் 'பதிவு' செய்யப்பட்டுள்ளன.
இக்குற்றங்களில் மூன்றாம், நான்காம் இடங்களை புனேயும், ஜபல்பூரும்
பெறுகின்றன.
மாநிலங்களில் அதிக அளவாக, மத்திய பிரதேசத்தில் 3132 வன்புணர்வு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தென்னிந்தியாவில் ஆந்திராவில் உச்சபட்சமாக 1362 வன்புணர்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நேரம்
Similar topics
» போலி என்கவுண்டர் கொலைகள்: உ.பி முதலிடம்
» ராணுவத்தினர் முஸ்லிம் இளம்பெண்ணை வன்புணர்வு செய்த சம்பவம் – குல்காமில் முழு அடைப்பு
» இந்தியா முதலிடம்:ஆயுதங்கள் இறக்குமதியில் சீனாவை பின் தள்ளியது!
» தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதலிடம்
» இந்திய ராணுவத்தின் வெறித்தனம்: கஷ்மீர் முஸ்லிம் இளம்பெண் வன்புணர்வு - கடுமையான நடவடிக்கை எடுக்க முதல்வர் உறுதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum