தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

போலி என்கவுண்டர் கொலைகள்: உ.பி முதலிடம்

Go down

போலி என்கவுண்டர் கொலைகள்: உ.பி முதலிடம்   Empty போலி என்கவுண்டர் கொலைகள்: உ.பி முதலிடம்

Post by முஸ்லிம் Mon Aug 08, 2011 5:58 pm

போலி என்கவுண்டர் கொலைகள்: உ.பி முதலிடம்   090110-270x170
புதுடெல்லி:இந்தியாவில் போலி என்கவுண்டர் நாடகங்கள் மூலமாக நிரபராதிகள் அதிகமாக வேட்டையாடப்படும் முதல் மாநிலம் செல்வி.மாயாவதி ஆளும் உத்தரபிரதேசமாகும். இரண்டாவது இடத்தில் மணிப்பூர் உள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில் தனிப்பட்ட காரணங்களை பாதுகாப்பதற்காக போலீஸார் உ.பியில் 120 பேரை கொலைச் செய்துள்ளனர். தேசிய மனித உரிமை கமிஷன் முன்பாக வெளிவந்த வழக்குகளின் எண்ணிக்கை மட்டுமே இவை. இவ்வாண்டு 6 பேர் இதே முறையில் கொல்லப்பட்டதாக அவர்களின் உறவினர்கள் புகார் அளித்துள்ளதாக தேசிய மனித உரிமை கமிஷன் கூறுகிறது.

கடந்த ஆண்டு 40உம், அதற்கு முந்தைய ஆண்டு 71 குடும்பங்களிலிருந்து அவர்களுடைய உற்றார், உறவினர் கொல்லப்பட்டதாக புகார்கள் கிடைத்துள்ளன என கமிஷன் தெரிவிக்கிறது.

ராணுவத்தினரின் சிறப்பு அதிகாரம் அமுலில் இருக்கும் மணிப்பூரில் கடந்த 3 ஆண்டுகளுக்கு இடையே 54 பேர் கொல்லப்பட்டனர். 2008 ஆம் ஆண்டு முதல் கடந்த ஜூன் மாதம் வரை இந்தியாவில் இத்தகைய 369 வழக்குகளை தேசிய மனித உரிமை கமிஷன் ரிப்போர்ட் செய்துள்ளது. இவற்றில் 98 வழக்குகள் மட்டுமே கமிஷனால் தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள 271 வழக்குகள் தீர்ப்பை எதிர்நோக்கி கிடப்பில் போடப்பட்டுள்ளன. பல வழக்குகளிலும் நான்கரை கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும் கமிஷன் உத்தரவிட்டிருந்தது.

பதவி உயர்வையும், விருதுகளை மோகித்தும் நிழலுக தாதாக்களுக்காகவும் நிரபராதிகளை பயங்கரவாதிகள் என்ற முத்திரையை குத்தி போலி என்கவுண்டர்களை நடத்தி கொலைச் செய்வது கஷ்மீரிலும், குஜராத்திலும் ரிப்போர்ட் செய்ப்பட்டுள்ளது. சில வழக்குகளில் குற்றவாளிகள் மீது நீதிமன்றம் நடவடிக்கைகளை மேற்கொண்டது. குஜராத்தில் சொஹ்ரபுத்தீன் ஷேக், இஷ்ரத் ஜஹான், பிரஜாபதி ஆகிய போலிஎன்கவுண்டர் வழக்குகள் உச்சநீதிமன்றத்தின் கண்கானிப்பில் உள்ளன.


போலி என்கவுண்டர் கொலைகள்: உ.பி முதலிடம்   Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11137
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» போலி என்கவுண்டர்:குற்றவாளிகளுக்கு மரணத்தண்டனை விதிக்கவேண்டும்-உச்சநீதிமன்றம்
» பாத்ரிபல் போலி என்கவுண்டர்:குற்றப்பத்திரிகை வழங்கவேண்டும் – ஃபாரூக் அப்துல்லாஹ்
» குஜராத் போலி என்கவுண்டர் விசாரணை: நீதிபதி ஷா கண்காணிப்பார்
» பாத்ரிபல் போலி என்கவுண்டர்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
» பாட்லா ஹவுஸ் என்கவுண்டர் போலி: திக்விஜய் சிங்கிற்கு ப.சிதம்பரம் மறுப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum