பாத்ரிபல் போலி என்கவுண்டர்:குற்றப்பத்திரிகை வழங்கவேண்டும் – ஃபாரூக் அப்துல்லாஹ்
Page 1 of 1

புதுடெல்லி:2000 மார்ச் மாதம்
ஜம்மு-கஷ்மீர் மாநிலத்தில் நடந்த பாத்ரிபல் போலி என்கவுண்டர் படுகொலையில்
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு குற்றப் பத்திரிகையை வழங்கவேண்டும் என
மத்திய அமைச்சர் ஃபாரூக் அப்துல்லாஹ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுக்குறித்து அவர் கூறியது:நிரபராதிகளை
சுட்டுக் கொலைச் செய்தவர்கள் ராணுவத்தினராக இருந்தாலும், சாதாரண நபர்களாக
இருந்தாலும் அவர்களுக்கு குற்றப்பத்திரிகை வழங்கவேண்டும். நிரபராதிகளை
கொலைச் செய்த பிறகு பாதுகாப்பு சான்றிதழ் கிடைத்துள்ளது என கூற முடியாது
என்று தெரிவித்தார் அவர்.
ராணுவத்தின் பிடிவாதத்தால் வழக்கு விசாரணை
கட்டத்தை எட்டாததால் உச்சநீதிமன்றம் தனது அதிருப்தியை வெளியிட்டது.
இச்சூழலில் ராணுவம் குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரணைச் செய்ய
அனுமதிக்குமா? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், ‘எந்த தரத்தைச் சார்ந்த
நபராக இருந்தாலும் தான் புரிந்த செயலுக்காக விலை கொடுத்தே ஆகவேண்டும்’ என
கூறினார் ஃபாரூக் அப்துல்லாஹ்.
2000 மார்ச் 25 ஆம் தேதி ராணுவம் ஏழுபேரை
சுட்டுக் கொலைச் செய்தது. பின்னர் ‘லஷ்கர்-இ-தய்யிபா’ இயக்கத்தைச்
சார்ந்தவர்களை மோதலில் சுட்டுக் கொலைச் செய்ததாக ராணுவம் சித்தரித்தது.
ராணுவத்தின் சிறப்பு அதிகாரத்தை வழங்கும் AFPSA அமுலில் இருப்பதால் முன்
அனுமதியில்லாமல் ராணுவ அதிகாரிகளை வழக்கில் விசாரணைச் செய்ய இயலாது என
ராணுவம் கூறுகிறது. மேலும் என்கவுண்டர் போலி அல்ல என கூறுகிறது.
அதேவேளையில், பாத்ரிபல் போலி
என்கவுண்டரில் உச்சநீதிமன்றத்தின் விமர்சனம், ஜம்மு-கஷ்மீர் மாநிலத்தில்
இருந்து AFPSA சட்டத்தை வாபஸ் பெறுவதற்கான கோரிக்கைக்கு வலு சேர்ப்பதாக
முதல்வர் உமர் அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார்.
12 ஆண்டுகளுக்கு பிறகும் நீதி கிடைக்காதது
மூலம் நிரூபணமாவது என்னவெனில் நீதி கட்டமைப்பின் கோர முகமாகும் என உமர்
அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார்.

Similar topics
» பாத்ரிபல் போலி என்கவுண்டர்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
» போலி என்கவுண்டர் கொலைகள்: உ.பி முதலிடம்
» போலி என்கவுண்டர்:குற்றவாளிகளுக்கு மரணத்தண்டனை விதிக்கவேண்டும்-உச்சநீதிமன்றம்
» குஜராத் போலி என்கவுண்டர் விசாரணை: நீதிபதி ஷா கண்காணிப்பார்
» குஜராத் போலீஸ் 2002-ஆம் ஆண்டு முதல் நடத்திய 20-க்கும் மேற்பட்ட போலி என்கவுண்டர் படுகொலைகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum