குஜராத் போலி என்கவுண்டர் விசாரணை: நீதிபதி ஷா கண்காணிப்பார்
Page 1 of 1

புதுடெல்லி:போலி என்கவுண்டர்கள் குறித்து
விசாரணை நடத்த குஜராத் அரசு உருவாக்கியுள்ள சிறப்பு குழுவின் விசாரணைக்கு
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.பி.ஷா கண்காணிப்பாளராக பணியாற்றுவார்.
2002 ஆம் ஆண்டு முதல் குஜராத்தில் நடந்த
போலி என்கவுண்டர்கள் குறித்து விசாரணை நடத்தவேண்டும் என கோரி எழுத்தாளர்
ஜாவேத் ஹபீப், பி.ஜி.வர்கீஸ் ஆகியோர் அளித்த மனுவை பரிசீலிக்கவே குஜராத்
அரசு உச்சநீதிமன்றத்திற்கு இதனை தெரிவித்துள்ளது. இவ்வழக்கின் இறுதி
விசாரணை வருகிற 2012 ஜனவரி மாதம் நடத்த நீதிபதிகளான அஃப்தாப் ஆலம், தேசாய்
ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தீர்மானித்துள்ளது. வழக்கு விசாரணையின்
முன்னேற்றத்தை குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கலாம் என
குஜராத் அரசுக்காக வாதாடிய ரஞ்சித் குமார் தெரிவித்தார்.
2002-ஆம் ஆண்டு சமீர் பத்தானை கொலைச்செய்த
அதே கும்பல்தான் 2005-ஆம் ஆண்டில் சொஹ்ரபுத்தீன் ஷேக் மற்றும் அவரது மனைவி
கெளஸர்பீயை கொலைச் செய்துள்ளனர் என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
போலி எனகவுண்டர்கள் தொடர்பாக இன்ஸ்பெக்டர்
ஜெனரல்(எஸ்.ஸி, எஸ்.டி மனித உரிமை பிரிவு) தீர்த ராஜ் தயார் செய்த 20
பக்கங்களை கொண்ட விசாரணை அறிக்கையில் முதல்வர் மோடியின் அலுவலகத்தில்
பணியாற்றும் ஒரு நபர், அன்று துணைக் கமிஷனராகவும், இன்று டி.ஜி.பியாகவும்
பணியாற்றும் பி.பி.பாண்டே ஆகியோர் இணைந்து போலி என்கவுண்டர் படுகொலைகளை
நிகழ்த்திய வன்சாரா மற்றும் அவரது குழுவினரை பாதுகாத்ததாக
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள
மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மனுதாரர்களுக்காக பிரசாந்த் பூஷண், நித்யா
ராமகிருஷ்ணன் ஆகியோர் ஆஜராகினர்.

Similar topics
» குஜராத் போலீஸ் 2002-ஆம் ஆண்டு முதல் நடத்திய 20-க்கும் மேற்பட்ட போலி என்கவுண்டர் படுகொலைகள்
» போலி என்கவுண்டர் கொலைகள்: உ.பி முதலிடம்
» போலி என்கவுண்டர்:குற்றவாளிகளுக்கு மரணத்தண்டனை விதிக்கவேண்டும்-உச்சநீதிமன்றம்
» பாத்ரிபல் போலி என்கவுண்டர்:குற்றப்பத்திரிகை வழங்கவேண்டும் – ஃபாரூக் அப்துல்லாஹ்
» பாத்ரிபல் போலி என்கவுண்டர்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum