16 வருடங்களில் இந்தியாவில் இரண்டரை லட்சம் விவசாயிகள் தற்கொலை
Page 1 of 1
16 வருடங்களில் இந்தியாவில் இரண்டரை லட்சம் விவசாயிகள் தற்கொலை
புதுடெல்லி:16
வருடங்களில் இந்தியாவில் இரண்டரை லட்சம் விவசாயிகள் தற்கொலை
செய்துக்கொண்டதாக நேசனல் க்ரைம் ரிக்கார்ட்ஸ் பீரோவின் புள்ளிவிபரம்
தெரிவிக்கிறது. இது 1995 ஆம் ஆண்டு முதல் 2010 வரையிலான புள்ளிவிபரமாகும்.
இக்காலக்கட்டத்தில் 50 ஆயிரத்திற்கு
மேற்பட்ட விவாயிகளின் தற்கொலை நடைபெற்றது பணக்கார மாநிலம் என கருதப்படும்
மஹாராஷ்ட்ராவிலாகும். இதனை தவிர கர்நாடகா, ஆந்திரபிரதேசம், சட்டீஷ்கர் ஆகிய
ஐந்து மாநிலங்களிலும் அறிக்கையில் கூறப்பட்டுள்ள தற்கொலைகளில் மூன்றில்
இரண்டு பகுதியும் நிகழ்ந்துள்ளது.
1995-ஆம் ஆண்டு முதல் 2002-ஆம் ஆண்டுவரை
1,21,157 விவசாயிகள் வறுமை, பட்டினியின் மூலமாக தற்கொலைச்செய்துள்ளனர்.
2003-ஆம் ஆண்டு முதல் 2010 வரையிலான காலக்கட்டத்தில் 1,35, 755 பேர்
தற்கொலைச்செய்துள்ளனர். அதேவேளையில், கடந்த சில வருடங்களாக தற்கொலை
குறைந்துவருவதாக புள்ளிவிபரம் கூறுகிறது.
2009-ஆம் ஆண்டு 17,368 விவசாயிகளும்,
2010-ஆம் ஆண்டு 15,964 விவசாயிகளும் தற்கொலைச்செய்துள்ளனர். சட்டீஷ்கர்,
மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் விவசாயிகளின் தற்கொலை போதுமான அளவு
குறைந்ததுதான் இதற்கு காரணமென சுட்டிக்காட்டப்படுகிறது.
Similar topics
» இந்தியாவில் 49.84 லட்சம் குழந்தை தொழிலாளர்கள்
» இந்தியாவில் போலியோ இல்லாத ஆண்டு 2011: ஐ.நா!
» பொருளாதார நெருக்கடி:ஐரோப்பாவில் தற்கொலை அதிகரிப்பு
» 147வது மாடியிலிருந்து குதித்த தமிழர்: புர்ஜ் கலீபா காணும் முதல் தற்கொலை
» இந்தியாவில் 180 மில்லியன் முஸ்லிம்கள்– யு.எஸ். கணிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum