இந்தியாவில் 49.84 லட்சம் குழந்தை தொழிலாளர்கள்
Page 1 of 1
இந்தியாவில் 49.84 லட்சம் குழந்தை தொழிலாளர்கள்
புதுடெல்லி:இந்தியாவில்
49.84 லட்சம் குழந்தை தொழிலாளர்கள் இருப்பதாக தொழில்துறை அமைச்சர்
மல்லிகார்ஜூன் கார்கே மக்களவையில் அறிவித்தார். ஆனால், சிறுவர்
தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
2001-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில்
ஐந்து வயதிற்கும், பதினான்கு வயதிற்கும் இடையேயான 1.26 கோடி சிறுவர்கள்
குழந்தை தொழிலாளர்களாக இருந்தனர். 2004-05 ஆம் ஆண்டு நேசனல் சாம்பிள் சர்வே
ஆர்கனைசேசன் நடத்திய ஆய்வில் இது 90.75 லட்சமாக குறைந்தது. ஆனால், 2009-10
ஆம் ஆண்டு நடத்திய ஆய்வில் 49.84 லட்சம் சிறுவர்கள் பணியில்
ஈடுபடுத்தப்படுவதாக கார்கே கூறினார்.
கல்வி நிலையங்களுக்கும், அரசு சாரா
நிறுவனங்களுக்கும் சிறுவர் தொழிலை ஒழிக்கும் திட்டங்களுக்காக அரசு நிதி
அனுமதித்துள்ளது என கேள்வி நேரத்தில் கார்கே பதிலளித்தார்.
Similar topics
» 16 வருடங்களில் இந்தியாவில் இரண்டரை லட்சம் விவசாயிகள் தற்கொலை
» குழந்தை கடத்தலுக்கு மரணதண்டனை !
» குழந்தை கடித்து பாம்பு சாவு
» 700 கோடியாவது குழந்தை: இன்னும் சில தினங்களில்...
» இந்தியாவில் 180 மில்லியன் முஸ்லிம்கள்– யு.எஸ். கணிப்பு
» குழந்தை கடத்தலுக்கு மரணதண்டனை !
» குழந்தை கடித்து பாம்பு சாவு
» 700 கோடியாவது குழந்தை: இன்னும் சில தினங்களில்...
» இந்தியாவில் 180 மில்லியன் முஸ்லிம்கள்– யு.எஸ். கணிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum