700 கோடியாவது குழந்தை: இன்னும் சில தினங்களில்...
Page 1 of 1
700 கோடியாவது குழந்தை: இன்னும் சில தினங்களில்...
உலகின் மொத்த மக்கள்தொகை இன்னும் சில
தினங்களில் 700 கோடியை எட்டவுள்ளது. இந்தக் கணக்கெடுப்பு, ஐ.நா.வின்
கணிப்புகளை அடிப்படையாகக் கொண்டதாகும். இம்மாதம் 31-ம் தேதி உலகின் 700
கோடியாவது குழந்தை பிறக்கவிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
உலக மக்கள்தொகை கடந்த 25 ஆண்டுகளுக்குள் 200 கோடி அதிகரித்திருப்பது இங்கே
கவனத்துக்குரியது. வளரும் மற்றும் ஏழை நாடுகளின் தான் மக்கள்தொகை
அதிகரிப்பு காணப்படுகிறது. இந்த உயர்வு காரணமாக, உலகில் வளப் பற்றாக்குறை
மிகுதியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த அதீத மக்கள்தொகை பெருக்கத்தை இந்த
உலகம் எவ்வளவு காலத்துக்கு தாங்கும் என்பதே சர்வதேச முக்கியத்துவம்
வாய்ந்த கேள்வியாகிறது.
கடந்த 60 ஆண்டுகளில், உலகின் கருத்தரிப்பு
விகிதம் பாதியாக குறைந்துள்ளது. அதாவது ஒரு பெண்ணுக்கு 5 குழந்தைகள் என்ற
விகிதத்தில் இருந்து, ஒரு பெண்ணுக்கு இரண்டரைக் குழந்தை என்ற சரசாரியாக
குறைந்துள்ளது. ஆனால், இன்றும் ஒவ்வோர் ஆண்டும் 7 கோடியே 80 லட்சம்
குழந்தைகள் பிறக்கின்றன. இதில் வளரும் நாடுகளின் பங்கு தான் மிக அதிகம்.
ஏழை
மற்றும் வளரும் நாடுகளில் வறுமை, கல்வியறிவின்மை மற்றும் விழிப்பு
உணர்வுகள் இல்லாமை போன்ற காரணங்களால் பெண்கள் பெருமளவு குழந்தைகளைப்
பிரசவிக்கின்றனர். மேலும், அந்தப் பெண்களும், குழந்தைகளும் மோசமான
சுகாதாரக் கேடுகளை எதிர்கொள்கின்றனர்.
இத்தகைய காரணங்களால், ஏழைப் பெண்களுக்கான கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை ஊக்குவிக்க வேண்டியது அவசியம் என ஐ.நா. வலியுறுத்துகிறது.
அதேவேளையில்,
உலக வளப் பகிர்வும் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக ஐ.நா. ஆய்வுகள்
கூறுகின்றன. அதாவது, உலகிலுள்ள 20 சதவீத செல்வந்தர்களிடம், உலகின் மொத்த
வருமானத்தில் 77 சதவீதம் உள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது.
உலக வளத்தை பெருக்குவதுடன், அதனை முறையாக பகிர்வதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதையே இந்தப் புள்ளிவிவரம் வலியுறுத்துகிறது.
இந்நேரம்
Similar topics
» கராச்சி கலவரம்:3 தினங்களில் 44 பேர் பலி
» ஓ.! பயங்கரவாத சைத்தானே.! உலகம் இன்னும் உன்னை நம்புதேடா..!
» குழந்தை கடத்தலுக்கு மரணதண்டனை !
» இந்தியாவில் 49.84 லட்சம் குழந்தை தொழிலாளர்கள்
» குழந்தை கடித்து பாம்பு சாவு
» ஓ.! பயங்கரவாத சைத்தானே.! உலகம் இன்னும் உன்னை நம்புதேடா..!
» குழந்தை கடத்தலுக்கு மரணதண்டனை !
» இந்தியாவில் 49.84 லட்சம் குழந்தை தொழிலாளர்கள்
» குழந்தை கடித்து பாம்பு சாவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum