தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

யுனெஸ்காவில் பாலஸ்தீனத்துக்கு நிரந்தர இடம் - அமெரிக்கா, இஸ்ரேல் எதிர்ப்பு!

Go down

யுனெஸ்காவில் பாலஸ்தீனத்துக்கு நிரந்தர இடம் - அமெரிக்கா, இஸ்ரேல் எதிர்ப்பு!  Empty யுனெஸ்காவில் பாலஸ்தீனத்துக்கு நிரந்தர இடம் - அமெரிக்கா, இஸ்ரேல் எதிர்ப்பு!

Post by முஸ்லிம் Tue Nov 01, 2011 6:17 pm

ஐக்கிய நாடுகள் சபையில் கல்வி, கலாச்சார மற்றும் அறிவியல் அமைப்பான
யுனெஸ்கா பாலஸ்தீனத்துக்கு நிரந்தர இடம் அளித்து உறுப்பினராக
அங்கீகரித்துள்ளது. யுனெஸ்காவில் நிரந்தர இடம் கிடைத்துள்ளது பாலஸ்தீன
மக்களிடையே பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




யுனெஸ்கா தலைமையகத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் இந்தியா, சீனா,
பிரான்ஸ் உள்ளிட்ட 107 நாடுகள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும், அமெரிக்கா,
இஸ்ரேல், ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 14 நாடுகள் எதிர்த்தும்
வாக்களித்தன. 52 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தன.

யுனெஸ்கா
அமைப்பு பாலஸ்தீனத்துக்கு நிரந்தர இடம் அளித்து உறுப்பினராக அங்கீகரித்ததை
அமெரிக்க மற்றும் இஸ்ரேல் கடுமையாக எதிர்த்துள்ளன. மேலும் யுனெஸ்கா
அமைப்புக்கு அளிக்கும் நிதி உதவிகளையும் நிறுத்த அமெரிக்கா முடிவு
செய்துள்ளதாகத் தெரிகிறது.






இந்நேரம்.காம்




ஃபலஸ்தீனுக்கு யுனெஸ்கோ உறுப்பினர் பதவி




யுனெஸ்காவில் பாலஸ்தீனத்துக்கு நிரந்தர இடம் - அமெரிக்கா, இஸ்ரேல் எதிர்ப்பு!  Palestine-gets-unesco-membership-2011-10-31_l-270x170

பாரிஸ்:அமெரிக்கா
மற்றும் இஸ்ரேலின் எதிர்ப்பை புறக்கணித்து ஐ.நா கலாச்சார அமைப்பான
யுனெஸ்கோ ஃபலஸ்தீனுக்கு உறுப்பினர் பதவியை வழங்கியுள்ளது. 173 நாடுகள்
பங்கேற்ற கூட்டத்தில் 107 பேர் ஃபலஸ்தீனுக்கு ஆதரவாக வாக்களித்தனர். 14
பேர் எதிர்த்து வாக்களித்தனர். 52 நாடுகள் வாக்கெடுப்பில்
கலந்துக்கொள்ளவில்லை.

ஃபலஸ்தீனின் கோரிக்கையை அங்கீகரித்தால்
யுனெஸ்கோவிற்கு அளித்துவரும் பொருளாதார உதவியை ரத்துச்செய்வோம் என
வாக்கெடுப்பிற்கு முன்பு அமெரிக்கா மிரட்டல் விடுத்திருந்தது.

ஃபலஸ்தீனுக்கு ஐ.நா உறுப்பினர் பதவிக்கான
மனுவை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் இம்மாதம் 11-ஆம் தேதி பரிசீலிக்க உள்ளது.
இந்நிலையில் யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்துள்ளது ஃபலஸ்தீன் மக்களுக்கு
நம்பிக்கையை அளித்துள்ளது. ஃபலஸ்தீனில் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை
யுனெஸ்கோவில் பதிவுச்செய்ய இது உதவும்.

இஸ்ரேல், அமெரிக்கா, கனடா, ஜெர்மனி
உள்ளிட்ட 14 நாடுகள் ஃபலஸ்தீனுக்கு யுனெஸ்கோ உறுப்பினர் பதவி வழங்குவதற்கு
எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தபொழுது பிரிட்டன் வாக்கெடுப்பில்
கலந்துக்கொள்ளவில்லை.ஆனால் பிரான்சு ஃபலஸ்தீனுக்கு ஆதரவாக வாக்களித்தது.

உலக நாடுகள் தங்களை அங்கீகரிக்கின்றனர்
என்பதன் ஆதாரமாக ஃபலஸ்தீன் மக்கள் இதனை கருதுகின்றனர் என பி.பி.சியின்
ராமல்லா பிரதிநிதி கூறுகிறார்.ஃபலஸ்தீன் மக்கள் அனுபவித்துவரும் அநீதியின்
சிறு பகுதியை நீக்கும் ஐ.நா கலாச்சார அமைப்பின் நடவடிக்கையாகும் என
ஃபலஸ்தீன் வெளியுறுவத்துறை அமைச்சர் ரியாத் அல் மாலிகி யுனெஸ்கோ
கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

ஃபலஸ்தீனின் ஐ.நா உறுப்பினர் பதவிக்கான
விண்ணப்பத்தை ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் வீட்டோ செய்வோம் என அமெரிக்கா
அறிவித்துள்ளது.யுனெஸ்கோவில் அமெரிக்காவிற்கு வீட்டோ அதிகாரமில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.

யுனெஸ்கோவின் வருடாந்திர பட்ஜெட்டில் 20
சதவீதத்தை அமெரிக்கா அளித்துவருகிறது. ஐ.நாவில் உறுப்பினர் பதவிக்கான
விண்ணப்பத்தை அளித்ததை தொடர்ந்து ஃபலஸ்தீனுக்கு அளித்துவந்த 50 கோடி டாலர்
தொகையை அமெரிக்கா ரத்துச்செய்திருந்தது.



யுனெஸ்காவில் பாலஸ்தீனத்துக்கு நிரந்தர இடம் - அமெரிக்கா, இஸ்ரேல் எதிர்ப்பு!  Logoto



யுனெஸ்கோவில் முழு நேர உறுப்பினராக பாலஸ்தீனம் தேர்வு: அமெரிக்கா கடும் கண்டனம்

யுனெஸ்கோவில் பாலஸ்தீனம் முழு நேர உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இத்துடன்
அமெரிக்கா வழங்கும் பல ஆயிரம் கோடி டொலர்களை நிறுத்தவும் முடிவு
செய்துள்ளது. ஐ.நா கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார கிளை அமைப்பான
யுனெஸ்கோவில் உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட நாடுகள் உறுப்பினராக
உள்ளன.

இதில் பாலஸ்தீனம் உறுப்பினராக கடும் முயற்சியை மேற்கொண்டு வந்தது.
இதற்கு பல நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இந்நிலையில் இங்கு நடந்த
ஓட்டெடுப்பில் பாலஸ்தீனத்திற்கு போதிய ஆதரவு(107 ஓட்டுக்கள்) விழுந்தன,
மொத்தம் இந்த அமைப்பில் 173 நாடுகள் உறுப்பினராக உள்ளன.

இந்த வெற்றிக்கு பாலஸ்தீன மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ள போதிலும்
அமெரிக்ககா மற்றும் இஸ்ரேல் கடும் அதிருப்பதியை வெளியிட்டுள்ளது.

இதன் முதல் கட்டமாக நவம்பர் மாதம் வழங்க வேண்டிய 60 மில்லியன் டொலர்
தொகையை அமெரிக்கா நிறுத்த முடிவு செய்திருப்பதாக வெள்ளை மாளிகை வட்டாரம்
தெரிவித்துள்ளது.

மேலும் ஆண்டு முழுவதும் வழங்கும் மொத்த தொகையான 80 பில்லியன் டொலர் தொகையை நிறுத்திக்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

யுனெஸ்கோவிற்கு கிடைக்கும் நிதியில் அமெரிக்கா பெருமளவில்(45 சதம் வரை)
தரும் நாடாக இருந்துள்ள வேளையில் இது பெரும் தர்மச்சங்கடத்தை
ஏற்படுத்தியிருக்கிறது.

மத்திய கிழக்கு அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் துவக்கும்
வாய்ப்புகளை இது பாதிக்கும் என்று இஸ்ரேல் தனது எதிர்ப்பு கருத்தை
வெளியிட்டுள்ளது.

மேலும் சர்வதேச சமுதாயம் அமைதி வழிமுறையை முன்னேற்ற பாதைக்கு கொண்டு
செல்லும் முயற்சிக்கு எதிராக இருக்கும் என்றும் இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சக
அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.


யுனெஸ்காவில் பாலஸ்தீனத்துக்கு நிரந்தர இடம் - அமெரிக்கா, இஸ்ரேல் எதிர்ப்பு!  Logo



முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11139
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» மேற்காசிய நாடுகளுடன் இஸ்ரேல் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் – அமெரிக்கா
» சமாதானப் பேச்சு வார்த்தைகளில் ஹமாஸை சேர்க்க இயலாது:அமெரிக்கா,இஸ்ரேல்
» ஈரான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் ஆயத்தம்: போர் சூழலை எதிர்கொள்ள தயாராகும் அமெரிக்கா
» இந்தியா, சீன நாடுகள் அமெரிக்கா மீது தாக்குதல்! அமெரிக்கா அச்சம்
» ஐ.நா: இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி: அமெரிக்காவின் நிலையில் மாற்றம் இல்லை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum