சமூக ஆர்வலர் கைது:எகிப்தில் எதிர்ப்பு வலுக்கிறது
Page 1 of 1

கெய்ரோ:வன்முறையை தூண்டினார் என குற்றம்
சாட்டி எகிப்து நாட்டு ராணுவம் கைதுச்செய்த சமூக ஆர்வலரை விடுதலைச்செய்ய
கோரி கெய்ரோவின் விடுதலை சதுக்கமான தஹ்ரீரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட
மக்கள் போராட்டம் நடத்தினர்.
பிரபல வலைப்பூ பதிவர் அலா அப்துல்
ஃபத்தாஹை நேற்று முன்தினம் எகிப்து ராணுவம் கைதுச்செய்தது.கடந்த மாதம்
ஒன்பதாம் தேதி காப்டிக் கிறிஸ்தவர்களுக்கும், ராணுவத்திற்கும் இடையே நடந்த
மோதலில் 25 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு காரணம் அப்துல் ஃபத்தாஹ் என
குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மாஸ்பெரோ கூட்டுப்படுகொலை என இது
அழைக்கப்படுகிறது. ஆயுதமேந்திய அப்துல் ஃபத்தாஹின் வீடியோ காட்சி
கிடைத்துள்ளதாகவும், இதனை அவர் ஒப்புக்கொண்டுள்ளார் எனவும் ராணுவம்
கூறுகிறது. முபாரக் ஆட்சிக்காலத்தில் 2006-இல் அப்துல் ஃபத்தாஹையும், அவரது
மனைவியையும் கைதுச்செய்தது பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.
மக்களால் தேர்வுச்செய்யப்படாத அரசுக்கு
தன்னை விசாரணை செய்ய இயலாது எனவும், அவர்களுக்கு தான் பதிலளிக்க போவதில்லை
எனவும் அப்துல் ஃபத்தாஹ் கூறுகிறார். பஹா ஸபர் என்பவரையும் ராணுவம்
கைதுச்செய்துள்ளது. முபாரக்கிற்கு பிறகு ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட
ராணுவ உயர்கவுன்சில் தலைவர் ஃபீல்ட் மார்ஷல் முஹம்மது ஹுஸைன் தந்தாவிக்கு
எதிராக மக்கள் முழக்கமிட்டனர்.
புரட்சிக்கு மக்கள் தயாராகிறார்கள் என்ற
அட்டையை மக்கள் கைகளில் ஏந்தியிருந்தனர்.ராணுவ ஆட்சியை முடிவுக்கு
கொண்டுவரவும், வலைப்பூ பதிவரை விடுதலைச்செய்யவும் அவர்கள் கோஷமிட்டனர்.

Similar topics
» இந்தியாவுக்கு நிதியுதவி: பிரிட்டனில் எதிர்ப்பு வலுக்கிறது
» சிரியாவுக்கு ஆதரவாக வீட்டோ: எதிர்ப்பு வலுக்கிறது
» சமூக இணையதளங்களுக்கு கட்டுப்பாடு: இந்தியாவுக்கு ஐ.நா பொதுச்செயலாளர் எதிர்ப்பு
» மோடியின் போராட்டம் நீதியின் போராட்டம் அல்ல, அது அநீதியின் போராட்டம் – சமூக ஆர்வலர் மல்லிகா சாராபாய்
» இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் சமூக நல்லிணக்க ரதயாத்திரைக்கு போலீஸ் தடை – நூற்றுக்கணக்கானோர் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum