1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கு: உச்சநீதிமன்ற மேல் முறையீடு மனு மீதான விசாரணை தொடங்கியது
Page 1 of 1
1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கு: உச்சநீதிமன்ற மேல் முறையீடு மனு மீதான விசாரணை தொடங்கியது
புது
டெல்லி: 1993ஆம் ஆண்டு மார்ச் 12 மற்றும் 13 ஆகிய தேதியில் மும்பையில்
நடந்த குண்டு வெடிப்பில் பலர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் 12
நபர்களுக்கு மரண தண்டனையும், 78 நபர்களுக்கு 3 ஆண்டு ஆயுள் தண்டனை
வழங்கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து குற்றம்
சாட்டப்பட்டவர்களும் மதிய புலனாய்வு துறையும், உச்ச நீதி மன்றத்தில் மேல்
முறையீடு மனுக்கள் தாக்கல் செய்தனர், அம்மனுக்கள் மீதான விசாரணை கடந்த
செவ்வாய்கிழமை தொடங்கியது. இந்த 110 மனுக்களை நீதிபதி P. சதாசிவம்
மற்றும் BS. சவ்ஹான் அடங்கிய பெஞ்ச் இந்த விசாரணையை தொடங்கியது.
இந்த மனுக்களில் குற்றவாளியாக
கருதப்பட்டு, 6 ஆண்டு சிறை தண்டனை பெற்ற திரைப்பட நடிகர் சஞ்சய் தத்தும்
அடங்குவார். இவரது மேல் முறையிட்டு மனு நிலுவையில் இருக்கும் இந்த
சமயத்தில் அவர் ஜாமீனில் வெளியே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் மதிய புலனாய்வு துறையும், இதை சஞ்சய் தத்துக்கு எதிராக இந்த மேல்
முறையிட்டு மனுவை தாக்கல் செய்யவில்லை, மேலும் அவர் சட்டவிரோதமாக
ஆயுதங்கள் வைத்து இருந்ததாக தனி நீதி மன்றம் இவருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை
வழங்கியது.
உச்ச நீதி மன்றத்தில், முதல் முறையாக
இவ்வழக்கில் தான் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், நியமிக்கப்பட்ட சிறப்பு தடா
நீதி மன்றம் அளித்த 4,000 பக்கங்கள் கொண்ட தீர்ப்பைப் பார்ப்பதற்க்காக
கணினியை உபயோகித்தார்கள். இந்த சிறப்பு நீதி மன்றம் இத்தீர்ப்பை 2007 ஆம்
ஆண்டு ஜூலை மற்றும் அக்டோபர் மாத இடைவெளியில் வழங்கியது. இத்தீர்ப்பில்
தண்டனை வழங்கப்பட்ட 12 நபர்களில் 1 நபர் வழக்கு நடைபெறும் நாட்களில்
இறந்தார்.
மற்றொரு மரண தண்டனை கைதி முகம்மது இக்பால்
என்பவரும் இறக்கவே, இவரது மேல் முறையீட்டு மனு கைவிடப்பட்டது. இந்த இருவர்
மட்டும் இல்லாது மேலும் 3 நபர்கள் இதே நிலையில் இறந்தனர். மேலும் மரண
தண்டனையை எதிர்நோக்கியுள்ள மீதம் உள்ள 10 கைதிகள் தங்கள் தண்டனை சவாலாக
எதிர்நூக்கியுள்ளனர், ஏன் என்றால் சிபிஐ அவர்களின் தண்டனை விரிவாக்கம்
கோரி, 40 குற்றவாளிகள் மீது எதிராக குறுக்கு மேல்முறையீட்டு மனு
செய்துள்ளார்.
Similar topics
» முகமது நபியைக் கேலிச்சித்திரம் வரைந்தவர் மீதான வழக்கு விசாரணை!
» காணாமல் போன இந்திய ஹஜ் பயணிகள்: விசாரணை தொடங்கியது
» பாபர் மசூதி வழக்கு: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு வக்பு வாரியம் வரவேற்பு!
» மும்பையில் மூன்று இடங்களில் குண்டு வெடிப்பு! 10 பேர் பலி!
» மும்பை குண்டுவெடிப்பு: கைதானது உண்மையான குற்றவாளிகளா?
» காணாமல் போன இந்திய ஹஜ் பயணிகள்: விசாரணை தொடங்கியது
» பாபர் மசூதி வழக்கு: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு வக்பு வாரியம் வரவேற்பு!
» மும்பையில் மூன்று இடங்களில் குண்டு வெடிப்பு! 10 பேர் பலி!
» மும்பை குண்டுவெடிப்பு: கைதானது உண்மையான குற்றவாளிகளா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum