தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மும்பையில் மூன்று இடங்களில் குண்டு வெடிப்பு! 10 பேர் பலி!

Go down

மும்பையில் மூன்று இடங்களில் குண்டு வெடிப்பு! 10 பேர் பலி!  Empty மும்பையில் மூன்று இடங்களில் குண்டு வெடிப்பு! 10 பேர் பலி!

Post by முஸ்லிம் Wed Jul 13, 2011 8:52 pm

மும்பையில் ஒபேரா ஹவுஸ், சவேரி பஜார் மற்றும் மேற்கு தாதர் உள்ளிட்ட மூன்று இடங்களில் இன்று மாலை குண்டு வெடித்ததில் 10 பேர் பலியாகியுள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அனைத்து குண்டு வெடிப்புகளும் மக்கள் நடமாட்டம் அதிகம் நிறைந்த பகுதிகளில் நடைபெற்றுள்ளது. உள்துறை அமைச்சகம் இது தீவிரவாதிகளின் தாக்குதல் என தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.

தேசிய புலனாய்வு அமைப்பு தடயங்களைச் சேகரிக்க டெல்லியில் இருந்து மும்பை விரைந்துள்ளது. ஒபேரா ஹவுசில் காரிலும், மேற்கு தாதரில் பஸ் ஸ்டாண்டிலும் சவேரி பஜாரில் மீட்டர் பாக்ஸிலும் குண்டு வெடித்துள்ளதாகத் தெரிகிறது.

இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11136
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

மும்பையில் மூன்று இடங்களில் குண்டு வெடிப்பு! 10 பேர் பலி!  Empty மும்பையில் மூன்று இடங்களில் குண்டுவெடிப்பு:21 பேர் மரணம்

Post by முஸ்லிம் Thu Jul 14, 2011 4:17 pm

மும்பை/புதுடெல்லி:மும்பையில் 3 இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 21 பேர் பலியாகினர். நகரத்தில் நெரிசல் மிகுந்த தாதர், ஓபரா ஹவுஸ், தெற்கு மும்பையில் ஜவேரி பஸார் ஆகிய இடங்களில் நேற்று மாலை 6.45 க்கும் 7.05 மணிக்கும் இடையில் இக்குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயம் கடுமையாக இருப்பதால் மரண எண்ணிக்கை உயரும் என போலீஸ் அறிவித்துள்ளது.

தெற்கு மும்பையில் தங்க-வைர வர்த்தக மையமான ஜவேரி பஸாரில் முதல் குண்டு வெடித்தது. இரண்டாவது குண்டுவெடிப்பு மத்திய மும்பையில் தாதரில் கபூதர் கானாவில் டாக்ஸி கார் வெடித்து சிதறியதாக போலீஸ் கூறுகிறது. மூன்றாவது குண்டுவெடிப்பு நடந்த சர்ணியில் ஓபரா ஹவுஸில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் குண்டுவெடிப்பிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

குண்டுவெடிப்பில் வாகனங்களும், கடைகளும் தகர்ந்தன. மனித உடல்கள் சிதறிக்கிடந்தன. பீதியடைந்த மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். காயமடைந்து இரத்த வெள்ளத்தில் மிதந்தவர்கள் உதவி கேட்டு குரல் எழுப்பிய காட்சி உள்ளத்தை பிசைவதாக இருந்தது. கடந்த 2008 நவம்பர் மாதம் நடந்த மும்பை தாக்குதலின் மனப்பதிவை ஏற்படுத்தும் விதத்தில் சுருங்கிய கால இடைவேளைகளில் மூன்று இடங்களில் நடந்த குண்டுவெடிப்பு ஏற்படுத்தியது என நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

மும்பையில் நடந்தது தீவிரவாத தாக்குதல் என மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது என தெரிவித்த ப.சிதம்பரம் இச்சம்பவத்தை என்.ஐ.ஏ விசாரணை நடத்தும் என தெரிவித்தார். என்.எஸ்.ஜி கமாண்டோக்களும், தடவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர். தேசிய புலனாய்வு ஏஜன்சியான என்.ஐ.ஏவின் அதிகாரிகள் மும்பைக்கு வர உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. டெல்லியில் உள்துறை செயலாளர் ஆர்.கே.பாட்டீலின் தலைமையில் உயர்குழு கூடி நிலைமைகள் குறித்து விவாதித்தது.

மும்பையில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததையடுத்து அனைத்து மாநிலங்களுக்கும் தீவிர பாதுகாப்புக்குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தாக்குதலின் பின்னணியில் இருப்பது யார் என்பது இதுவரை தெரியவில்லை.

குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன்சிங், பாக்.பிரதமர் யூசுஃப் ரஸா கிலானி ஆகியோர் குண்டுவெடிப்பை கண்டித்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி அளிக்க முன்னுரிமை வழங்கப்படும் என முதல்வர் பிரதிவிராஜ் சவான் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு அவர் சென்றார். மக்கள் பீதியடைய வேண்டாம் எனவும், எவ்வித அவசர சூழலையும் எதிர்கொள்ளும் விதம் பாதுகாப்பு படையினர் தயார்நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

குண்டுவெடிப்பை தொடர்ந்து மக்கள் வீடுகளிலிருந்து வெளியே வரவேண்டாம் என எஸ்.எம்.எஸ் செய்தி மூலம் போலீஸ் உத்தரவிட்டது. மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மும்பைக்கு செல்வார் என உள்துறை அமைச்சக வட்டாரங்கள் அறிவித்துள்ளன.


மும்பையில் மூன்று இடங்களில் குண்டு வெடிப்பு! 10 பேர் பலி!  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11136
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

மும்பையில் மூன்று இடங்களில் குண்டு வெடிப்பு! 10 பேர் பலி!  Empty மும்பை தொடர் குண்டுவெடிப்பு:வட்டமிடும் ஊகங்கள்

Post by முஸ்லிம் Thu Jul 14, 2011 4:22 pm

மும்பை:மும்பையில் நேற்று மாலை 3 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 21 பேர் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் இக்குண்டுவெடிப்பிற்கு காரணம் யார்? என்பதுக் குறித்து இதுவரை தெளிவாக எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை. இந்நிலையில் வழக்கம்போல் சில ஊடகங்கள் போலீஸ் தரப்பு கூறியதாக லஷ்கர் மற்றும் இந்திய முஜாஹிதீன் அமைப்புகள் காரணமாக இருக்கலாம் என ஊகங்களை வெளியிட்டுள்ளன. இதைப்போல இன்னும் பல ஊகங்களும் பரவி வருகின்றன.

2008 ஆம் ஆண்டு குஜராத் தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் என கூறி இரண்டு இந்திய முஜாஹிதீன் எனக்கூறப்படும் அமைப்பைச் சார்ந்த இரண்டு பேர் கைதுச் செய்யப்பட்டதுதான் குண்டுவெடிப்பிற்கு காரணமாக கூறப்படும் ஊகமாகும். முஹம்மது முபீன் ஷாக்குர்கான் என்ற இர்ஃபான், அய்யூப் அமீன் ஷேக் ஆகியோர் கடந்த செவ்வாய்கிழமை ஏ.டி.எஸ்ஸால் கைதுச்செய்யப்பட்டனர். கைதுச் செய்யப்படுவதற்கு முன்பு துப்பாக்கிகள், வெடிக்குண்டுகளுடன் இவர்களை ஏ.டி.எஸ் பிடித்ததாம். இவர்கள் கைதுச் செய்யப்பட்ட மறுதினம் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததது என்பதுதான் ஊகமான செய்தி. பொதுவாக குண்டுவெடிப்பு நிகழ்ந்தபிறகுதான் கைதுச்செய்வார்கள். இச்சம்பவத்தில் குண்டுவெடிப்பு நிகழும் முன்பே இருவர் கைதுச்செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், சில வட்டாரங்கள் சுட்டிக்காட்டுவது வேறு சம்பவமாகும்.மிட் டே பத்திரிகையின் புலனாய்வு செய்தியாளர் ஜே டே கொலையின் பின்னணியில் சோட்டா ராஜன் செயல்பட்டதை மும்பை க்ரைம் போலீஸ் கண்டறிந்தது. விநோத் அஸ்ராணி, சதீஷ் காலியா உள்பட எட்டுபேரை போலீஸ் கைது செய்திருந்தது. ஆனால் ஏன் சோட்டாராஜன் ஜே டேவை கொலைச் செய்தார் என்பதை போலீஸாரால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

போலீஸ் விசாரணையில் மும்பையின் பத்திரிகையாளர்களுக்கு நம்பிக்கையில்லை. இரண்டு பத்திரிகையாளர்கள், மும்பை ப்ரஸ் கிளப், மராத்தி மொழி பத்திரிகையாளர்கள் அளித்த பொது நல மனுவில் மும்பை உயர்நீதிமன்றம் கடுமையான நிலைப்பாட்டில் உள்ளது. ஜே டே கொலையின் பின்னணியில் மும்பை போலீஸ் மீதே சந்தேகம் எழுந்துள்ளது. அவ்வாறெனில் போலீஸ் விசாரணையில் நீதி கிடைக்காது என பத்திரிகையாளர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். சி.பி.ஐ விசாரணையை அவர்கள் கோருகின்றனர்.

ஆனால் மஹராஷ்ரா அரசோ வழக்கு முடிந்துவிட்டதாகவும், சி.பி.ஐ விசாரணை தேவையில்லை எனவும் கூறுகிறது.ஜே டே கொலையின் விசாரணை சி.பி.ஐ வசம் செல்லாமல் இருக்க மஹாராஷ்ட்ரா மாநில அரசும், போலீஸும் காட்டும் அவசரம் சந்தேகங்களை பலப்படுத்துகிறது. ஜே டே கொலைவழக்கில் முதலில் சோட்டா ஷக்கீலுடன் தொடர்புடையவர்கள் எனக்கூறி நான்கு பேரை போலீஸ் கைதுச்செய்து பின்னர் விடுதலை செய்தது. இது சர்ச்சையை கிளப்பியிருந்தது.

சோட்டா ராஜன் உடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில் சதீஷ் காலியா உள்ளிட்டோரை போலீஸ் கைதுச்செய்தது என குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இக்பால் கஸ்கர் கொலை முயற்சி, ஜே டே கொலை ஆகிய வழக்குகளுடன் தொடர்புடைய சோட்டா ராஜன் கும்பலின் முக்கிய நபர்கள் எல்லோரும் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். இக்பால் கஸ்கர் கொலை முயற்சி வழக்கில் சோட்டா ராஜனின் வலது கரமான டி.கே.ராவு, உமைதுர்ரஹ்மான் ஆகியோர் முக்கிய நபர்களாவர். இன்னொரு முக்கிய நபரான விக்கி மல்கோத்ராவும் உடனடியாக சரணடைவார் என சந்தேகிக்கப்படுகிறது.

சோட்டா ராஜன் கும்பலைச் சார்ந்த சக்தி மிகுந்த நபர்கள் இருவரை திடீரென போலீஸ் கைதுச் செய்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. சோட்டா ராஜனுக்கும், உளவுத்துறைக்கும் இடையேயான தவறான உறவு சர்ச்சையை கிளப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.


மும்பையில் மூன்று இடங்களில் குண்டு வெடிப்பு! 10 பேர் பலி!  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11136
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

மும்பையில் மூன்று இடங்களில் குண்டு வெடிப்பு! 10 பேர் பலி!  Empty Re: மும்பையில் மூன்று இடங்களில் குண்டு வெடிப்பு! 10 பேர் பலி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மும்பை குண்டு வெடிப்பு வழக்கு: 2 பேர் கைது!
» மணிப்பூரில் சக்தி வாய்ந்து குண்டு வெடிப்பு
»  சம்ஜெளதா குண்டு வெடிப்பு இந்துத்துவாவினரே காரணம்: அசீமானந்த் மீண்டும் வாக்குமூலம்!
»  அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு வழக்கில் சுவாமி அசீமானந்த் கைது!
»  மக்கா மசூதி குண்டு வெடிப்பு: சுவாமி ஆசிமானந்தாவிடம் சிபிஐ விசாரணை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum