அணுசக்தி:ஈரானுக்கு எதிராக ஐ.ஏ.இ.ஏ தீர்மானம்
Page 1 of 1

ஜெனீவா:ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக
கவலைகள் அதிகரித்து வருவதாக சர்வதேச அணுசக்தி ஏஜன்சியான ஐ.ஏ.இ.ஏ தீர்மானம்
நிறைவேற்றியுள்ளது. ஈரானின் அணுசக்தியை குறித்து சர்வதேச அளவில்
எழுந்துள்ள கேள்விகளுக்கு அந்நாடு பதிலளிக்க வேண்டும் என தீர்மானம்
கோரிக்கை விடுத்துள்ளது.
ஆனால் தீர்மானம் ஐ.நா பாதுகாப்பு
கவுன்சிலுக்கு அளிக்கப்படவில்லை. ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதற்கான
முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அண்மையில் வெளியான ஐ.ஏ.இ.ஏவின் அறிக்கையில்
குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராக
குற்றச்சாட்டை எழுப்பிவரும் சூழலில் ஐ.ஏ.இ.ஏவின் அறிக்கை வெளியானது. ஆனால்,
எரிசக்தி தேவைக்காக தங்களுடைய திட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம் என
ஐ.ஏ.இ.ஏவில் ஈரானின் பிரதிநிதி அலி அஸ்கர் சுல்தானி கூறியுள்ளார். அணு
ஆயுதம் இல்லாத மேற்காசியாவை உருவாக்குவதற்கு அடுத்த வாரம் நடைபெறும்
ஐ.ஏ.இ.ஏவின் மாநாட்டை ஈரான் புறக்கணிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, ஐ.ஏ.இ.ஏவின் தலைவர் யூகியா
அமானோவை குற்றம் சாட்டும் கடிதத்தை சுல்தானி அவரிடம் ஒப்படைத்தார். ஈரான்
விஞ்ஞானிகளின் பெயரை வெளியிட்ட அமானோவின் நடவடிக்கை சரியில்லை எனவும்,
அதற்கு பிறகு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் உளவுத்துறைகள் அவர்களை
குறிவைத்துள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தங்களது
லட்சியத்தை முன்னெடுத்துச்செல்வதற்கான பலத்தையே ஐ.ஏ.இ.ஏவின் தீர்மானம்
ஈரானுக்கு அளிக்கும். ஐ.ஏ.இ.ஏவின் அறிக்கை அரசியல் தூண்டுதலாகும் என
சுல்தானி கூறியுள்ளார்.
35 நாடுகளின் பிரதிநிதிகளில் 32 பேர்
தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். கியூபாவும், ஈக்வடாரும் எதிர்த்து
வாக்களித்தபோது இந்தோனேஷியா வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளவில்லை. அணுசக்தி
தொடர்பாக கூடுதல் தெளிவு கிடைப்பதற்காக சர்வதேச குழு ஈரானுக்கு செல்லும் என
அமானோ மீண்டும் தெரிவித்துள்ளார்.
ராணுவ தேவைகளுக்காகத்தான் ஈரானின்
அணுசக்தி திட்டம் என்பதற்கான ஆதாரங்கள் மேற்கத்திய நாடுகளிடம் இல்லை என
மலேசியாவின் முன்னாள் பிரதமர் மஹாதீர் முஹம்மது கோலாலம்பூரில் வைத்து
தெரிவித்துள்ளார். ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக குற்றம்
சாட்டியதுபோல தவறான வாதம்தான் ஈரான் தொடர்பாகவும் எழுந்துள்ளது என மஹாதீர்
கூறியுள்ளார்.

Similar topics
» ஈரானுக்கு எதிராக செயல்பட மேற்கத்திய நாடுகளின் உதவியை நாடும் அமெரிக்கா
» மோடிக்கு எதிராக மாயாவதி – மத்திய அரசுக்கு எதிராக ஜெயலலிதா
» அணுசக்தி:பேச்சுவார்த்தைக்கு தயார் – அஹ்மத் நஜாத்
» ஈரான் அணுசக்தி நிலையங்களை அழிக்க அமெரிக்காவிற்கு சக்தி இல்லை
» சி.ஐ.ஏ உளவாளியை விடுவிக்க ஈரானுக்கு அமெரிக்கா கோரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum