ஈரானுக்கு எதிராக செயல்பட மேற்கத்திய நாடுகளின் உதவியை நாடும் அமெரிக்கா
Page 1 of 1
ஈரானுக்கு எதிராக செயல்பட மேற்கத்திய நாடுகளின் உதவியை நாடும் அமெரிக்கா
சவுதி
அரேபியத் தூதரைக் கொல்ல தீட்டப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் ஈரான்
மத்திய வங்கி மீது தடைகளை விதிக்க மேற்கத்திய நாடுகளின் ஆதரவைத் திரட்டும்
முயற்சியில் அமெரிக்கா இறங்கியுள்ளது.அதே நேரம் ஈரான் மீதான அமெரிக்காவின் குற்றச்சாட்டு குறித்து அமெரிக்க அதிகாரிகள் சிலர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்கா, ஈரானின் மத்திய வங்கி மீது பொருளாதாரத்
தடைகளை விதித்திருக்கிறது. ஆனால் பலதரப்பு பொருளாதாரத் தடைகளை விதிப்பதில்
மேற்கத்திய நாடுகளின் ஆதரவை அமெரிக்காவால் கடந்த 20 ஆண்டுகளாகப் பெற
முடியவில்லை.
ஈரான் மத்திய வங்கி, எண்ணெய் உற்பத்தித் துறை உள்ளிட்டவற்றில் முதலீடு
செய்து வருகிறது. பலதரப்பு பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டால் ஒரு
வெளிநாட்டு நிறுவனம் ஈரான் மத்திய வங்கியுடன் இணைந்து செயல்படுவதா அல்லது
அமெரிக்காவுடன் செயல்படுவதா என முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் நேரிடும்.
அதாவது வெளிநாட்டு நிறுவனங்கள், வங்கிகள் ஈரான் மத்திய வங்கியுடனான
தொடர்பைத் துண்டிக்க நேரிடும்.
இதுகுறித்து அமெரிக்க நிதித் துறை அதிகாரி டேவிட் கோஹென் நேற்று அளித்த
பேட்டியில்,"ஈரான் மத்திய வங்கி மீது பலதரப்பு பொருளாதாரத் தடை விதிக்க
நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். விரைவில் அதைச் செய்து முடிப்போம்”
என்றார்.
இதன் மூலம் மேற்கத்திய நாடுகளின் ஆதரவைப் பெறும் முயற்சியில் அமெரிக்கா
ஈடுபட்டுள்ளது தெளிவாகியுள்ளது. அதேநேரம் ஈரான் மீதான அமெரிக்காவின்
குற்றச்சாட்டு உள்நாட்டிலேயே பலத்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
அமெரிக்க அதிகாரிகள் சிலர் இதுகுறித்துக் கூறுகையில்,"ஈரான் மீது மேலும்
தடைகளை விதிக்க அமெரிக்கா மிகத் தீவிரமாக செயல்படுவது மக்கள் மத்தியில்
சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது. மேலும் ஏற்கனவே தடைகள் விதிக்கப்பட்ட
அந்நாட்டின் மீது மேலும் தடைகள் விதிப்பது சர்வதேச உறவுகளைச்
சீர்குலைக்கும். இந்த நடவடிக்கைகள் ஒபாமாவின் அடுத்தாண்டு தேர்தலுக்காகவே
நடத்தப்படுவதாக மக்கள் கருதுகின்றனர்” எனத் தெரிவித்தனர்.
Similar topics
» அணுசக்தி:ஈரானுக்கு எதிராக ஐ.ஏ.இ.ஏ தீர்மானம்
» சி.ஐ.ஏ உளவாளியை விடுவிக்க ஈரானுக்கு அமெரிக்கா கோரிக்கை
» உஸாமா:பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்கா
» மோடிக்கு எதிராக மாயாவதி – மத்திய அரசுக்கு எதிராக ஜெயலலிதா
» இந்தியா, சீன நாடுகள் அமெரிக்கா மீது தாக்குதல்! அமெரிக்கா அச்சம்
» சி.ஐ.ஏ உளவாளியை விடுவிக்க ஈரானுக்கு அமெரிக்கா கோரிக்கை
» உஸாமா:பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்கா
» மோடிக்கு எதிராக மாயாவதி – மத்திய அரசுக்கு எதிராக ஜெயலலிதா
» இந்தியா, சீன நாடுகள் அமெரிக்கா மீது தாக்குதல்! அமெரிக்கா அச்சம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum