உஸாமா:பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்கா
Page 1 of 1
உஸாமா:பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்கா
வாஷிங்டன்:பாகிஸ்தான் ராணுவ நகரமான அபட்டாபாத்தில் ரகசிய இடத்தில் வைத்து அமெரிக்க கமாண்டோ படையினருடன் நடந்த மோதலில் அல்காயிதா போராளி இயக்கத்தலைவர் உஸாமா பின் லேடன் கொல்லப்பட்டதை தொடர்ந்து அமெரிக்கா பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பியுள்ளது என கருதப்படுகிறது.
பாகிஸ்தானின் ஆதரவு இல்லாமல், இஸ்லாமாபாத்திலிருந்து குறைந்த தூரமே உள்ள இடத்தில் கடந்த 6 வருடங்களாக உஸாமா வசித்திருப்பது தெரியாது எனக் கூறுவதை நம்ப முடியவில்லை என அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் ப்ரன்னன் தெரிவித்துள்ளார். இதனைக் குறித்து அமெரிக்கா விசாரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
இத்தகையதொரு சம்பவம் நிகழ்ந்துள்ள சூழலில் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தானுடனான ஒத்துழைப்பை மறுபரிசீலனை செய்து பொருளாதார உதவியை நிறுத்த வேண்டுமென பிரபல அமெரிக்க செனட்டர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உஸாமாவின் இருப்பிடத்தைக் குறித்து தெரியாது என பாகிஸ்தான் கூறுவது சந்தேகத்திற்குரியது என செனட்டர் சூசன் காலின்ஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். உஸாமா பாகிஸ்தானில் தங்கியிருப்பதைக் குறித்து பாகிஸ்தான் உளவுத்துறைக்கும் தெரியும் என செனட்டர் ஜோ லீபர்மென் தெரிவித்துள்ளார்.
ஆனால், உஸாமா பாகிஸ்தானில் வசித்தது குறித்து தங்களுக்கு தெரியாது என பாக்.அதிபர் ஆஸிஃப் அலி சர்தாரி வாஷிங்டன் போஸ்டில் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். உஸாமா கொலை செய்யபடுவதற்கு காரணமான ராணுவ ஆபரேசன் பாக்.-அமெரிக்கா ஒன்றிணைந்து நடத்தியது அல்ல என தெரிவித்த சர்தாரி, அமெரிக்க ராணுவத்தினர் மட்டுமே இத்தாக்குதலில் பங்கேற்றனர் என கூறியுள்ளார்.
அதேவேளையில், உஸாமாவின் கொலை அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானின் ஒருங்கிணைந்த சாதனை என அமெரிக்காவின் ஆப்கான் – பாக்.சிறப்பு பிரதிநிதி மார்க் க்ராஸ்மென் இஸ்லாமாபாத்தில் அறிவித்துள்ளார். பாக்.வெளியுறவுத்துறை செயலாளர் ஸல்மான் பஷீர், ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஜவீத் லுதின் ஆகியோருடன் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பிறகு க்ராஸ்மென் இவ்வாறு தெரிவித்தார்.
இதற்கிடையே பாகிஸ்தானில் லாகூர், பெஷாவரில் உள்ள அமெரிக்க தூதரகங்களை மறு அறிவிப்பு வரும் வரை மூட அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. தாக்குதல் பீதி காரணமாகவே இந்த உத்தரவு போடப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. இஸ்லாமாபாத்திலும் அமெரிக்க தூதரகத்தை மூட உத்தரவிட்ட போதும் பின்னர் தூதரக செய்தி தொடர்பாளர் ஆல்பர்ட்டோ ரோட்ரிக்ஸ் அதனை மறுத்தார்.
உஸாமா கொலை செய்யப்பட்டதை கண்டித்து பாகிஸ்தானின் பல இடங்களிலும் போராட்டங்கள் நடந்தன. லாகூரில் ஜமாஅத்துத்தஃவா தலைவர் ஹாஃபிஸ் ஸயீத் தலைமையில் நடந்த காயிப் ஜனாஸா (இறந்தவருக்காக மறைவான தொழுகை) நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

Similar topics
» உஸாமா:அமெரிக்கா மீது பழி சுமத்தும் பாகிஸ்தான்
» ஈரானுக்கு எதிராக செயல்பட மேற்கத்திய நாடுகளின் உதவியை நாடும் அமெரிக்கா
» மோடிக்கு எதிராக மாயாவதி – மத்திய அரசுக்கு எதிராக ஜெயலலிதா
» இந்தியா, சீன நாடுகள் அமெரிக்கா மீது தாக்குதல்! அமெரிக்கா அச்சம்
» போர் நடந்தால் பாகிஸ்தானுக்கு ஆதரவு:ஆப்கான் அதிபர் ஹமீத் கர்ஸாய்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum