உஸாமா:அமெரிக்கா மீது பழி சுமத்தும் பாகிஸ்தான்
Page 1 of 1

இஸ்லாமாபாத்:உஸாமா படுகொலைத் தொடர்பான சர்ச்சையில் அமெரிக்கா மீது பாகிஸ்தான் பழி சுமத்தியுள்ளது. உஸாமாவை வளர்த்தது பாகிஸ்தான் அல்ல. அல்காயிதா உதயமானதும் பாகிஸ்தானில் அல்ல என பாகிஸ்தான் பிரதமர் யூசுஃப் ரஸா கிலானி குற்றஞ்சாட்டினார்.
பாகிஸ்தானின் அப்போட்டாபாத்தில் ரகசிய இடத்தில் வைத்து உஸாமா பின் லேடனை படுகொலை செய்ததாக அமெரிக்கா தெரிவித்தது.இச்சம்பவம் நிகழ்ந்து ஒரு வாரம் கழித்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நேற்று கிலானி உரை நிகழ்த்தினார்.அப்போது அவர் கூறியதாவது:
பிற நாடுகளின் தவறுகளுக்கும்,முட்டாள்தனங்களுக்கும் பாகிஸ்தானை குறைசொல்லி பயனில்லை.உஸாமாவை பாகிஸ்தானிற்கோ,ஆப்கானிஸ்தானிற்கோ நாங்கள் அழைக்கவில்லை. உஸாமா,பாகிஸ்தானில் தங்கியிருக்கிறார் என்பது கண்டுபிடிக்க முடியாததற்கு காரணம் சர்வதேச உளவுத்துறைகளின் தோல்வியாகும்.
ராணுவம் மற்றும் ஐ.எஸ்.ஐயின் சேவை மகத்தானது.ஐ.எஸ்.ஐ அமெரிக்காவிற்கு வழங்கிய விபரங்கள்தாம் இறுதியில் உஸாமாவை கொல்ல காரணமானது.
எதிர்காலத்தில் அப்போட்டாபாத் மாதிரி தாக்குதல்கள் நடந்தால் பாகிஸ்தான் தக்க பதிலடியைக்கொடுக்கும்.அப்போட்டாபாத்தில் ஒருதரப்பு தாக்குதலை பாகிஸ்தான் அங்கீகரிக்கவில்லை.தனக்கு சொந்தமான ஹெலிகாப்டரை குண்டுவீசி அழிக்கவேண்டிய நிலைமை அமெரிக்காவிற்கு ஏற்பட்டதற்கு காரணம் மேற்கண்ட செயல்களுக்கான எதிர்விளைவாகும்.
உஸாமா விவகாரத்தில் கருத்துவேறுபாடு இருந்தாலும் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தான் மேற்கத்தியநாடுகளுடன் ஒத்துழைக்கும்.இவ்வாறு கிலானி உரைநிகழ்த்தினார்.

Similar topics
» இந்தியா, சீன நாடுகள் அமெரிக்கா மீது தாக்குதல்! அமெரிக்கா அச்சம்
» உஸாமா:பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்கா
» அமெரிக்கா உறவு: பாகிஸ்தான் மறு பரிசீலனை!
» தாக்குதலை அமெரிக்கா தொடர்ந்தால் எதிர்தாக்குதல் நடத்துவோம் - பாகிஸ்தான் எச்சரிக்கை
» ஈரான் எரிவாயு குழாய் திட்டம்: பாகிஸ்தான் வாபஸ் பெற அமெரிக்கா கோரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum