தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

லஞ்சமாக நாகபாம்புகள்:அலுவலகத்தை விட்டு விரண்டோடிய அரசு அதிகாரிகள்

Go down

லஞ்சமாக நாகபாம்புகள்:அலுவலகத்தை விட்டு விரண்டோடிய அரசு அதிகாரிகள்  Empty லஞ்சமாக நாகபாம்புகள்:அலுவலகத்தை விட்டு விரண்டோடிய அரசு அதிகாரிகள்

Post by முஸ்லிம் Fri Dec 02, 2011 4:33 pm

பஸ்தி(உ.பி):அரசு அலுவலகங்களில் லஞ்சம்
வாங்கும் அதிகாரிகளுக்கு பாடம் புகட்ட உத்தரபிரதேச மாநிலம் பஸ்தி
மாவட்டத்தில் வித்தியாசமான நடவடிக்கை.பாம்பாட்டியான ஹக்குல் என்பவர் தனது
கோரிக்கையை உதாசீனப்படுத்திய ரெவின்யூ அதிகாரிகளின் அணுகுமுறையில் மனம்
நொந்துபோய் நாகப்பாம்புகள் உள்பட ஒரு டஜன் பாம்புகளை ரெவின்யூ அலுவலகத்தில்
பையில் கொண்டு சென்று விட்டுள்ளார்.

பாம்புகள் அலுவலகத்தின்
நாற்காலிகளிலும், மேஜைகளிலும் ஏறி படமெடுத்து ஆட ஆடிப்போன அதிகாரிகள்
அலுவலகத்தை விட்டு விரண்டோடியுள்ளனர்.பாம்புகள் படமெடுத்து ஆடுவதை
அலுவலகத்திற்கு வெளியே மக்கள் திரண்டு ரசித்துள்ளனர்.

பாம்புகளை பிடித்து அதனை பாதுகாத்து
வருபவர் ஹக்குல்.இவற்றை பரிபாலித்து வர தனக்கு நிலம் தேவை என குடியரசு
தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு கடிதம் எழுதியிருந்தார்.இதனைத்தொடர்ந்து இவரது
கோரிக்கையை நிறைவேற்ற மாநில அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

ஆனால், ரெவின்யூ அதிகாரிகளோ
ஹக்குலிடம் நிலம் வழங்க லஞ்சம் கேட்டுள்ளனர்.இதனால் மனம் நொந்துபோன ஹக்குல்
லஞ்சம் கேட்ட அதிகாரிகளுக்கு பாடம் புகட்ட பாம்புகள் கொண்டுவந்து
அலுவலகத்தில் விட்டுள்ளார்.

பாம்பாட்டியான ஹக்குலின் புகார்
கிடைத்துள்ளதாகவும்,அவருக்கு தாமதிக்காமல் நிலம் வழங்கப்படும் என சப்
டிவிசனல் மாஜிஸ்ட்ரேட் அறிவித்துள்ளார்.தனது பாம்பு தந்திரம்
வெற்றிப்பெற்றதில் மகிழ்ச்சியில் உள்ளார் ஹக்குல்.


லஞ்சமாக நாகபாம்புகள்:அலுவலகத்தை விட்டு விரண்டோடிய அரசு அதிகாரிகள்  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11138
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்க துருப்புகள் ஈராக்கை விட்டு வெளியேற வேண்டும் – தலபானி
» இஸ்லாத்தின் கோட்பாடுகளை விட்டு விலகிச் சென்றுவிட்ட தீவிரவாதிகள்-ஒபாமா
»  எகிப்து: அதிகாரிகள் வெளிநாடு செல்ல தடை!
» குஜராத்தின் ஐ.பி.எஸ். அதிகாரிகள் சங்கத்தில் சஞ்சீவ் பட்டிற்கு ஆதரவாக தீர்மானம்
» இஸ்ரேல் தூதர், அதிகாரிகள் வெளியேற்றம், ஒப்பந்தங்கள் ரத்து : துருக்கி அதிரடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum