இந்திய வீடுகளில் 18 ஆயிரம் டன் தங்கம்
Page 1 of 1
இந்திய வீடுகளில் 18 ஆயிரம் டன் தங்கம்
புதுடெல்லி:இந்தியாவில்
உள்ள வீடுகளில் 18 ஆயிரம் டன் தங்கம் இருப்பதாக சர்வதேச ஆய்வு நிறுவனமான
மாக்வெயரின் சமீபத்திய அறிக்கை கூறுகிறது.
இது சர்வதேச தங்க இருப்பின் (global gold
stock) 11 சதவீதமாகும். இதன் மதிப்பு(worth) 950 பில்லியன் டாலராகும் (95
ஆயிரம் கோடி டாலர்). அதாவது 48.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு. இந்தியாவின்
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பாதி அளவுக்கு துல்லியமானது.
தங்கம் மற்றும் தங்கக்கட்டிகளை மிகவும்
மதிப்பான சொத்தாக இந்திய குடும்பங்கள் கருதுகின்றன. நெருக்கடியான
சூழல்களில் கூட அவர்கள் தங்கத்தை விற்காமல் பாதுகாத்து வருகின்றனர் என அந்த
அறிக்கை கூறுகிறது. தங்கத்தின் விலை உயர்வும், தங்கத்தை பயனீட்டாளர்களின்
எண்ணிக்கை அதிகரித்ததும் தங்க சேகரிப்பு அதிகரிப்பதற்கான காரணமாக
கூறப்படுகிறது.
2010 ஜனவரிக்கும் 2011 செப்டம்பருக்கும்
இடையே தங்கத்தின் விலை 64 சதவீதம் அதிகரித்துள்ளது. விலை உயர்ந்தாலும்
பயனீட்டார்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.
Similar topics
» இந்திய தூதருக்குச் சவூதியில் வரவேற்பு!
» கோடீஸ்வரனான ஐந்து வயது இந்திய சிறுவன்
» கர்நாடகா:பா.ஜ.க எம்.எல்.ஏ வீட்டில் மூன்று கிலோ தங்கம் பறிமுதல்
» வால்ஸ்ட்ரீட்டில் 10 ஆயிரம் வேலைகளுக்கு இழப்பு ஏற்படும்
» குஜராத்:சொந்த மாநிலத்தில் அகதிகளாக வாழும் 16 ஆயிரம் முஸ்லிம்கள்!
» கோடீஸ்வரனான ஐந்து வயது இந்திய சிறுவன்
» கர்நாடகா:பா.ஜ.க எம்.எல்.ஏ வீட்டில் மூன்று கிலோ தங்கம் பறிமுதல்
» வால்ஸ்ட்ரீட்டில் 10 ஆயிரம் வேலைகளுக்கு இழப்பு ஏற்படும்
» குஜராத்:சொந்த மாநிலத்தில் அகதிகளாக வாழும் 16 ஆயிரம் முஸ்லிம்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum