வால்ஸ்ட்ரீட்டில் 10 ஆயிரம் வேலைகளுக்கு இழப்பு ஏற்படும்
Page 1 of 1
வால்ஸ்ட்ரீட்டில் 10 ஆயிரம் வேலைகளுக்கு இழப்பு ஏற்படும்
வாஷிங்டன்:’வால்ஸ்ட்ரீட்
ஆக்கிரமிப்பு’ போராட்டம் அமெரிக்காவில் தொடர்ந்து நடைபெற்று வரும்
வேளையில் 2012 ஆம் ஆண்டு இறுதியில் வால் ஸ்ட்ரீட்டில் மட்டும் 10 ஆயிரம்
வேலைகளுக்கு இழப்பு ஏற்படும் என அறிக்கையொன்று கூறுகிறது.
ஊழல், வேலையில்லா திண்டாட்டம், வறுமை,
சமூக சமத்துவமின்மை, கார்ப்பரேட் ஆதிக்கம் ஆகியவற்றிற்கு எதிராக
அமெரிக்காவின் பொருளாதார மையமான வால் ஸ்ட்ரீட்டில் துவங்கிய மக்கள்
எழுச்சிப் போராட்டம் நாட்டின் இதர பகுதிகளுக்கும் பரவிய சூழலில் நியூயார்க்
சிட்டி கம்ப்ட்ரோலரின் அறிக்கையில்தான் வால்ஸ்ட்ரீட் வேலைவாய்ப்புகளில்
பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
போராட்டம் துவங்கிய பிறகு வால்ஸ்ட்ரீட் பணிகளில் 17 சதவீதம் குறைவு ஏற்பட்டதாக அந்த அறிக்கை கூறுகிறது.
இதற்கிடையே, வால்ஸ்ட்ரீட் போராட்டத்திற்கு
ஆதரவு தெரிவித்து போஸ்டனில் போராட்டம் நடத்திய 100 பேரை போலீஸார் கைது
செய்துள்ளனர் .கலைந்து செல்ல போலீஸ் உத்தரவு போட்டத்தை மீறியதால் கைது
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வால்ஸ்ட்ரீட் போராட்டத்தைத் தொடர்ந்து
அமெரிக்காவில் நூற்றிற்கும் அதிகமான நகரங்களில் போராட்டம் துவங்கியுள்ளது.
Similar topics
» முஸ்லிம்களுக்கு ஏற்படும் பாதிப்புகளின் பிரதிபலிப்பு பெண்கள், குழந்தைகளிடம்தான் தாக்கத்தை ஏற்படுத்துகிறது – NWF-ன் தமிழக தலைவர் ஃபாத்திமா தூது ஆன்லைனுக்கு அளித்த சிறப்பு பேட்டி!
» பா.ஜ.க ஆட்சியில் ரூ.43,500 கோடி இழப்பு-விசாரணை நடத்தப்படும் என நாடாளுமன்றக் கூட்டுக்குழு
» ஓர் ஆயிரம் குறை நம்மிடம் !
» இந்திய வீடுகளில் 18 ஆயிரம் டன் தங்கம்
» குஜராத்:சொந்த மாநிலத்தில் அகதிகளாக வாழும் 16 ஆயிரம் முஸ்லிம்கள்!
» பா.ஜ.க ஆட்சியில் ரூ.43,500 கோடி இழப்பு-விசாரணை நடத்தப்படும் என நாடாளுமன்றக் கூட்டுக்குழு
» ஓர் ஆயிரம் குறை நம்மிடம் !
» இந்திய வீடுகளில் 18 ஆயிரம் டன் தங்கம்
» குஜராத்:சொந்த மாநிலத்தில் அகதிகளாக வாழும் 16 ஆயிரம் முஸ்லிம்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum