ஹஸாரேக்கு ஊழல் அல்ல, காங்கிரஸ்தான் பிரச்சனை – திக் விஜய்சிங்
Page 1 of 1

புதுடெல்லி:ஊழலை ஒழிக்கவேண்டும் என்பது
அல்ல, மாறாக காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அரசியல் சூழலை உருவாக்கவேண்டும்
என்பதுதான் அன்னா ஹஸாரே, பாபா ராம்தேவ், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குழுவினரின்
நோக்கம் என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர்
திக்விஜய்சிங் கூறியுள்ளார்.
இதுக்குறித்து மேலும் அவர் கூறியதாவது:
‘பா.ஜ.கவின் உத்தரவின்படியே அன்னா குழுவினர் செயல்படுகின்றனர். தீவிரவாத
வழக்குகளில் சங்க்பரிவாரின் பங்கினை திசை திருப்ப பா.ஜ.க அன்னா ஹஸாரேயை
பயன்படுத்தி அரசியல் விளையாட்டை
நடத்துகிறது.
லோக்பால் மசோதாவுக்கு அரசியல் பதவி
அளிக்கவேண்டும் என ராகுல் காந்தி மக்களைவையில் கோரிக்கை வைத்தவேளையில்
எதிர்கட்சியினர் அதனை நகைச்சுவையாக கருதி நிராகரித்துவிட்டனர். ஆனால்,
தற்பொழுது அன்னா குழுவினர் ராகுலின் கோரிக்கையை அங்கீகரிக்கின்றனர்.
பின்னர் ஏன் அன்னா ஹஸாரே ராகுல் காந்திக்கு எதிராக திரும்புகிறார்? அன்னா
ஹஸாரே காங்கிரஸ் கட்சியை மட்டுமே குறிவைக்கிறார்.
உத்தரபிரதேசம், உத்தராகண்ட், கர்நாடகா,
சட்டீஸ்கர், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடக்கும் ஊழல்கள் எல்லாம்
அன்னா ஹஸாரே குழுவினர் காண்பதில்லை. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களும், மத்திய
அரசும்தான் அவர்களின் லட்சியம். ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை
கொண்டுவர காங்கிரஸ் கட்சி உறுதிப்பூண்டுள்ளது. இவ்விவகாரத்தில்
பின்வாங்கமாட்டோம். இவ்வாறு திக்விஜய்சிங் கூறியுள்ளார்.

Similar topics
» ஹஸாரே-ஆர்.எஸ்.எஸ் உறவு:நான் கூறியது நிரூபிக்கப்பட்டுள்ளது – திக் விஜய்சிங்
» ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு எதிரான தாக்குதல் தொடரும்-திக் விஜய்சிங் உறுதி
» ஹஸாரேயின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ் ஆதரவு
» இந்தியாவில் அதிகம் விவாதிக்கப்படுவது ஊழல்: பி.பி.சி சர்வேயில் தகவல்
» கர்நாடகா நிலபேர ஊழல்:பெரும் பகுதி ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum