உலமாக்கள் ஓய்வூதிய உயர்வு ஓட்டு வங்கிக்காகவா? - இராம.கோபாலன் கேள்வி
Page 1 of 1

தமிழக அரசு அண்மையில் உலமாக்களுக்குரிய
ஓய்வு ஊதியத் தொகையை ரூ 750 லிருந்து ரூ 1000 ஆக உயர்த்தியது. இது ஓட்டு
வங்கியை கவனத்தில் கொண்டு அறிவிக்க்பட்டுள்ளதா என இந்து முன்னணி மாநில
அமைப்பாளர் இராம.கோபாலன் ஒரு அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவருடைய அறிக்கை பின்வருமாறு -
தமிழக
முதல்வர் முஸ்லீம் மதகுருமார்களான உலமாக்கள், முல்லா, மௌல்விகளுக்கான
ஓய்வு ஊதியத்தை உயர்த்தியும், வக்ஃப் வாரியத்திற்கு வழங்கும் மானியத்தை
உயர்த்தியும், முஸ்லீம்களுக்குத் தமிழக அரசு அளிக்கும் ஹஜ் யாத்திரை
நிதியுதவியை இரட்டிப்பாக்கியும் அறிவித்துள்ளார். முதல்வரின் இந்த
அறிவிப்பு சிறுபான்மை சலுகை என்ற பெயரில் ஓட்டு வங்கியைக் கவனத்தில் கொண்டே
அறிவிக்கப்பட்டுள்ளதா? மதநல்லிணக்கத்துக்காகச் செய்யப்பட்டுள்ளதா?
இந்து
ஆலயங்கள் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. அங்கு வசூலாகும் வருமானத்தை
எண்ணவும், கணக்கிடவும், நிர்வகிக்கவும் அதிகாரிகளை அரசு நியமித்துள்ளது.
ஆனால் ஆலயத்தில் இறை சேவையில் ஈடுபட்டு தங்கள் வாழ்வை அர்ப்பணித்து வருகிற
பூசாரிகள், அர்ச்சகர்கள், குருக்கள், ஓதுவார் மூர்த்திகள்,
வாத்தியக்காரர்கள், பணியாளர்களுக்கு மிகவும் சொற்ப சம்பளமே இன்னமும்
அளிக்கப்பட்டு வருகிறது. பல கோயில்களில் ஒருசில பணியாளர்களைக் கொண்டே
பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
ஆகம முறைப்படி இருக்க வேண்டிய
கோயிலில் பணியாற்றுவோர் எண்ணிக்கையை அரசு நியமிக்க உத்தரவிட வேண்டும்.
அவர்களுக்குரிய சம்பளம், ஓய்வு ஊதியம் மற்றும் சலுகைகள் இன்றைய
விலைவாசிக்கு ஏற்ப நிர்ணயிக்க வேண்டும். கோயில் பக்தர்களுக்குச் செய்து
தரவேண்டிய வசதிகளுக்கு மாநில அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் நிதி
ஒதுக்கீட்டை அறிவித்து முடிக்க வேண்டும். கோயில் பணத்தில் இருந்து ஊர்ப்
பொதுக் காரியம் செய்யக்கூடாது. கோயிலுக்கு வரும் பக்தர்களால் தான் பல
ஊர்கள் அதிக வருமானம் பெறுகின்றன. அதற்குரிய வசதிகளைச் செய்ய உள்ளாட்சி
அமைப்புகள் முன் வரவேண்டும்.
மற்ற மதத்தினரிடம் காட்டும்
சலுகைகளையாவது கோயில்களுக்கும், கோயில்களில் பணியாற்றும் ஊழியர்களிடமும்
காட்டுங்கள் என்று கேட்கும் அவலநிலையைப் போக்கிட தமிழக முதல்வர்
முன்வரவேண்டும்”
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar topics
» உலமாக்கள் ஓய்வூதியம் உயர்வு,வக்ப் வாரியத்திற்கு ரூ3 கோடி
» அண்ணா பிறந்தநாள் அன்னதானம் - ஜெ.க்கு ராம.கோபாலன் கண்டனம்!
» உயர்வு வரும் ஒரு நாள் !
» முஸ்லிம்கள் வெறும் ஓட்டு வங்கிகளே! – நரேந்திர மோடி
» பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி ஓட்டு:காஷ்மீர் எம்.எல்.சி. தேர்தலில்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum