தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

முஸ்லிம்கள் இடஒதுக்கீடு கோரிக்கைக்கு எதிராக வி.எச்.பி பிரச்சாரம் செய்ய திட்டம்

Go down

முஸ்லிம்கள் இடஒதுக்கீடு கோரிக்கைக்கு எதிராக வி.எச்.பி பிரச்சாரம் செய்ய திட்டம்  Empty முஸ்லிம்கள் இடஒதுக்கீடு கோரிக்கைக்கு எதிராக வி.எச்.பி பிரச்சாரம் செய்ய திட்டம்

Post by முஸ்லிம் Sun Dec 18, 2011 5:38 pm

கொச்சி:பிற்படுத்தப்பட்டோர்களுக்கான (ஒ.பி
சி) 27 % இட ஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும்
என்ற மத்திய அரசின் முடிவிற்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் நடத்த
ஆர்.எஸ்.எஸ்-ன் கிளை அமைப்பான வி.எச்.பி திட்டமிட்டுள்ளதாக கடந்த
வெள்ளியன்று தெரிவித்துள்ளது.

ஹிந்து வாக்கு வங்கியை குறிவைத்து இந்த போராட்டம் நடத்தப்படுவதாக வி.எச்.பியின் சர்வதேச தலைவர் பிரவீன் தொகாடியா தெரிவித்துள்ளார்.

வி.எச்.பியின் மூன்று நாள் கூட்டம் கடந்த
வெள்ளியன்று தொடங்கியுள்ளது. இக்கூட்டத்தில் மத ரீதியிலான இட
ஒதுக்கீட்டிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே
கேரளா,ஆந்திரா, தமிழ் நாடு, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் மத
ரீதியிலான இட ஒதுக்கீடு அமலில் இருப்பதாகவும் அதை உடனடியாக திரும்ப பெற
வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மத்திய அமைச்சர்
சல்மான் குர்ஷித் சமீபத்தில் முஸ்லிம்களுக்கு 6% இட ஒதுக்கீடு வழங்கப்படும்
என்று அறிவித்திருந்தார். இதனை வி.எச்.பி முழுமையாக எதிர்ப்பதாக
தெரிவித்துள்ளார்.

மேலும் வி.எச்.பி. முஸ்லிம் மற்றும்
கிறிஸ்தவர்களுக்கு எந்த முறையில் இடஒதுக்கீடு வழங்குவதையும் எதிர்ப்பதாக
தெரிவித்துள்ளது. மேலும் தாங்கள் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு
அளிக்க நினைக்கும் மத்திய அரசின் இடஒதுக்கீட்டிற்கு எதிராக நாடு தழுவிய
போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


முஸ்லிம்கள் இடஒதுக்கீடு கோரிக்கைக்கு எதிராக வி.எச்.பி பிரச்சாரம் செய்ய திட்டம்  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11141
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» மோடிக்கு எதிராக மாயாவதி – மத்திய அரசுக்கு எதிராக ஜெயலலிதா
» காங்கிரசை எதிர்த்துத் தொடர்ந்து பிரச்சாரம் செய்வேன்: ஹசாரே மிரட்டல்!
»  பாப்ரி மஸ்ஜித்:பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய அளவிலான தீவிர பிரச்சாரம் இன்று துவங்குகிறது...
» முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு மூலம் முஸ்லிம்களை கவர ராகுல்காந்தி முயற்சி
» லோக்பாலில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு: எதிர்ப்புக்கு பணிந்தது காங்கிரஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum