ஈராக்கில் மீண்டும் ஆயுதம் தாங்கிய குழு – அமெரிக்காவின் புதிய தந்திரம்
Page 1 of 1
ஈராக்கில் மீண்டும் ஆயுதம் தாங்கிய குழு – அமெரிக்காவின் புதிய தந்திரம்
பாக்தாத்:அமெரிக்க
ராணுவம் ஈராக்கை விட்டு வெளியேறுவதில் மகிழ்ச்சி அடைந்து அமெரிக்க கொடியை
எரித்து ஈராக்கின் நகரமான ஃபலூஜாவில் சில தினளுக்கு முன்
பல்லாயிரக்கணக்கானோர் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட செய்தி அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் அமெரிக்கா தனது தூதரக
பணிகளுக்காக சுமார் பதினெட்டாயிரம் நபர்களை தெரிவு செய்ய திட்டமிட்டுள்ளது.
இதில் 3,500 முதல் 5,500 நபர்கள் ஆயுதம் தாங்கிய தனியார் காவல் படையினர்.
இந்த தனியார் காவல் படையினரும் அதன் குத்தகைதாரர்களும் அமெரிகர்களே.
இதன்மூலம் தான் வெளியேறுவது போன்று ஒரு நாடகத்தை நடத்தி மீண்டும் ஆயுதம்
தாங்கிய அமெரிக்கர்களை ஈராக்கில் நிலை நிறுத்த அமெரிக்கா முடிவு
செய்துள்ளது.
இந்த ஆயுதம் தாங்கிய காவல் படையினரை
ஈராக்கில் நிலைநிறுத்துவது ஈரானுக்கு எதிரானது என்பது சர்வதேச அரசியல்
நோக்கர்களின் கருத்தாகும். மேலும் எந்த நிலையிலும் ஈராக் ஈரானுடன் நல்லுறவு
கொள்ளாதவாறு இருப்பதையே அமெரிக்கா விரும்கிறது.
ஆக மழை விட்டாலும் தூறல் நிற்கவில்லை என்ற
கதையாக ராணுவ வீரர்களை வாபஸ் பெற்றுவிட்டு அதற்கு பதிலாக தனியார் காவல்
படையினரை பணியமர்த்துகிறது அமெரிக்கா.
Similar topics
» இஸ்ரேல் மட்டுமே மத்திய கிழக்கு நாடுகளில் அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடு – எர்டோகன்
» ஈராக்கில் 1800 கோடி டாலரை காணவில்லை
» அமெரிக்க ராணுவம் வாபஸ்: ஈராக்கில் மகிழ்ச்சி கொண்டாட்டம்
» ஈராக்கில் அண்டை நாடுகள் தலையிடக்கூடாது: ஒபாமா கூறுகிறார்
» அத்வானி ரத யாத்திரைக்கு எதிராக அன்னா ஹஸாரே குழு!
» ஈராக்கில் 1800 கோடி டாலரை காணவில்லை
» அமெரிக்க ராணுவம் வாபஸ்: ஈராக்கில் மகிழ்ச்சி கொண்டாட்டம்
» ஈராக்கில் அண்டை நாடுகள் தலையிடக்கூடாது: ஒபாமா கூறுகிறார்
» அத்வானி ரத யாத்திரைக்கு எதிராக அன்னா ஹஸாரே குழு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum