கஸ்டடி மரணம்:சஞ்சீவ் பட் மீண்டும் நீதிமன்றத்தில்
Page 1 of 1

அஹ்மதாபாத்:1990 ஆம் ஆண்டில் நடந்த
காவல்நிலைய மரண வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கவேண்டும் என கோரி மோடி
அரசால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் மீண்டும்
குஜராத் உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
1990-ஆம் ஆண்டு ஒருவர் போலீஸ் காவலில்
மரணித்தது தொடர்பான வழக்கில் தன் மீது சுமத்தப்பட்ட உத்தரவை ரத்துச்
செய்யவேண்டும். தன் மீதான அனைத்து நீதிமன்ற நடவடிக்கைகளுக்கும் தடை
விதிக்கவேண்டும் என பட் தனது மனுவில் கோரியுள்ளார்.
முன்னர் குற்றம் சுமத்துவதை
ஒத்திவைக்கவேண்டும் என கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஜாம்நகர் விரைவு
நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தற்பொழுது சஞ்சய்
பட் உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார். இம்மனுவின் மீதான விசாரணையில்
நீதிபதி ஜெ.சி.உபாத்யாய் நேற்று வாதம் கேட்டார். நீதிமன்றத்தில் விசாரணை
இன்றும் தொடரும். ஜாம்நகர் நீதிமன்ற உத்தரவிற்கு சட்ட அந்தஸ்து இல்லை
எனவும், உத்தரவு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆதாரங்களுக்கு எதிரானது
எனவும் சஞ்சீவ் பட் குற்றம் சாட்டுகிறார்.
தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களை
மறுபரிசீலனைச் செய்யவேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட வழக்கு பரிசீலனையில்
இருப்பதால் குற்றம் சுமத்துவதை ஒத்திவைக்கவேண்டும் என ஜாம்நகர் விரைவு
நீதிமன்றத்தில் சஞ்சய் பட் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், கடந்த
ஒன்பதாம் தேதி விரைவு நீதிமன்றம் பட்டின் கோரிக்கையை நிராகரித்தது.
அதேவேளையில், இவ்வழக்கில் இம்மாதம் 27-ஆம்
தேதி விசாரணை நடத்தும் நீதிமன்றம் பட் உள்பட இதர ஆறு நபர்கள் மீது குற்றம்
சுமத்தும் என கருதப்படுகிறது. குற்றம் சுமத்தப்பட்ட பிறகு மறு பரிசீலனை
கோரும் மனுவிற்கு மதிப்பில்லை. இது அரசியல் சட்ட மீறல் ஆகும் என பட் தனது
மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Similar topics
» கஷ்மீர் கஸ்டடி மரணம்: போலீசாருக்கு ரிமாண்ட்
» கஸ்டடி மரணம்:ஜம்மு-கஷ்மீர் அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
» கஷ்மீர் கஸ்டடி மரணம்:முழு அடைப்பில் மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிப்பு
» போர்க்குற்றவாளி மிளாடிச் நீதிமன்றத்தில் ஆஜர்
» குஜராத் இனப்படுகொலை:அறிக்கையை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் தாக்கல் – எஸ்.ஐ.டி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum