பெற்றோர்களிடம் இருந்து பிள்ளைகளை பிரித்த நார்வே அரசாங்கம்
Page 1 of 1

கொல்கத்தா:கொல்கத்தாவை சேர்ந்த
தம்பதியினர் நார்வேயில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு 2-½ மற்றும் 1
வயதுடைய இரு குழந்தைகள். சகரிகா-அனுருப் பட்டாச்சார்யா தம்பதிகள்
குழந்தைகளை சரியான முறையில் வளர்க்கவில்லை என்று நார்வேயின்அரசாங்கத்தால்
நடத்தப்படும் குழந்தை பாதுகாப்பு சேவை மையம் கடந்த மே-11 அன்று குழந்தைகளை
தனி வளர்ப்பு வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளனர்.
இந்த பிரச்சினை கடந்த நவம்பர்-30 அன்று
நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவர்கள் 18 வயதை அடையும் வரை தனி
வளர்ப்பு வீட்டில் வளர்க்கபடுவார்கள் என்றும், பெற்றோர்கள் வருடத்திற்கு
இரண்டு முறை ஒரு மணி நேரம் சந்திக்க அனுமதிக்கபடுவார்கள் என்று தீர்ப்பு
வழங்கப்பட்டுள்ளது.
இதனால் மனம் நொந்த அந்த பெற்றோர்கள் இந்திய அரசாங்கத்திடமும், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியிடமும் உதவி கேட்டுள்ளனர்.
“எங்களுடைய இரண்டு குழந்தைகளையும் இழந்து
நஷ்டவாளிகளாக நிற்கிறோம், நாங்கள் எங்கள் குழந்தைகளுடன் மிக சந்தோசமாக
இருந்தோம், அவர்கள் இல்லாமல் வாழ்வது மிகவும் கடினமான ஒன்று” என்று அந்த
குழந்தைகளின் தாய் சகரிகா தெரிவித்துள்ளார்.
மேலும் “அவர்கள் எந்த காரணத்திற்காக
குழந்தைகளை பிரித்து சென்றுள்ளனர் என்ற விபரம் இது வரை அறியவில்லை.
அவர்கள் இறுதியாக தெரிவித்தது, நீங்கள் ஏன் குழந்தைகளுடன் ஒரே அறையில்
உறங்குகிறீர்கள், இது கலாச்சார வேறுபாட்டை காட்டுகிறது என்று
தெரிவித்தனர். நாங்கள் ஒருபோதும் குழந்தைகளை தனி அறையில் விட்டுவிட்டு
‘குட் நைட்’ சொல்ல இயலாது” என்று அனுருப் தெரிவித்துள்ளார்.
இதேப்போல் கடந்த 2005-ஆம் ஆண்டு
குழந்தைகள் உரிமையின் மீது கவலை கொண்டு யூனியன் நேஷன்ஸ் கமிட்டி எண்ணற்ற
குழந்தைகளை அவர்களின் குடும்பத்திலிருந்து பிரித்து நார்வேயின் தனி
வளர்ப்பு வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதற்கு அவர்கள் தெரிவித்த
காரணம், குழந்தைகள் கண்டிப்பாக இயற்கையான குடும்ப சூழலில் வளர வேண்டும்
என்றும், அதற்காகவே அவர்களை தனி வளர்ப்பு வீட்டிற்கு புகலிடம் அடைய
வைக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதற்கு அனுருப் மற்றும் அவர்களின்
குடும்பத்தவர்கள் கூறும்போது; “இது குழந்தைகளின் பாதுகாப்பிற்காக செய்வது
போல் இல்லை, இது ஒரு கனவு போல் உள்ளது, நாகரீக முறையில் குழந்தைகள்
கடத்துவது போல் உள்ளது என்றும், நாங்கள் இந்திய தூதரகத்தின் உதவியையே
நாடியுள்ளோம், எங்கள் குழந்தைகளை திரும்ப பெற்று தருமாறும், இதற்காக நான்
என் வேலையை விட்டு இந்தியாவுக்கே செல்லவும் தயார்” என்று அனுருப்
தெரிவித்துள்ளார்.
குழந்தைகளின் தாத்தாவாகிய மோந்தொஸ், “நான்
என் கைகளை கட்டி உங்களிடம் பிச்சை கேட்கிறேன், என் பேரக் குழந்தைகளை
எங்களிடம் திரும்ப கொடுத்து விடுங்கள்” என்று. அனுருப்பின் மொத்த
குடும்பமும் கண்ணீர் மல்க இந்திய அரசாங்கத்தை நாடியுள்ளனர்.

Similar topics
» பலஸ்தீனர்களைப் பள்ளிவாயிலில் இருந்து விரட்டிய ஆக்கிரமிப்பாளர்கள்
» 14 முன்னாள் தாலிபான் தலைவர்களை ஐ.நா கறுப்புப்பட்டியலில் இருந்து நீக்கியது
» பூமி அச்சில் இருந்து ஜப்பான் சில அடிகள் நகர்ந்தது
» நார்வே பயங்கரவாதி குறித்த பரபரப்பு தகவல்கள்!
» முஸ்லிம்களுக்கு சிகிச்சை செய்ததால் பணியில் இருந்து நீக்கப்பட்ட செவிலியர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum