15-வது போராட்டத்தில் தோல்வியை தழுவிய ஹஸாரே
Page 1 of 1

மும்பை:வலுவான லோக்பால் மசோதாவை தாக்கல்
செய்யக்கோரி மும்பையில் 3 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினார் அன்னா
ஹஸாரே. ஆனால், மக்கள் ஆதரவில் ஏற்பட்ட வீழ்ச்சியும், தனது சொந்த கிராம
மக்களுக்கும், மத்திய குழுவிற்கும் இடையேயான கருத்து வேறுபாடும், உடல்நிலை
சீர்குலைந்ததும் அவரது 15-வது போராட்டம் தோல்வியை தழுவ காரணமானது.
அன்னா டீம்(அன்னா குழு) உருவாகும் முன்பே
ஹஸாரே 12 உண்ணாவிரத போராட்டங்களை நடத்தியுள்ளார். இப்போராட்டங்கள் வாயிலாக
மஹாராஷ்ட்ராவின் 4 அமைச்சர்கள் மற்றும் 40 அரசு அதிகாரிகளின் பதவி
பறிபோனது. தகவல் அறியும் உரிமை சட்டத்தை அமுல்படுத்தியது, இச்சட்டத்தில்
இருந்து அரசு அதிகாரிகளுக்கு விலக்கு அளிக்கும் அரசின் தீர்மானத்தை
தடுத்தது, நாற்பது ஆண்டுகள் காத்திருப்பிற்கு பிறகு லோக்பால் மசோதா
மக்களவையில் நிறைவேறியது ஆகியன ஹஸாரேயின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு
கிடைத்த வெற்றியாகும்.
மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட லோக்பால்
மசோதா வலுவானதாக இல்லை என குற்றம் சாட்டி மும்பையில் ஹஸாரே நடத்திய
உண்ணாவிரதப் போராட்டம் தோல்வியை தழுவியது. மேலும், எம்.பிக்கள் வீடுகளுக்கு
முன்னால் தர்ணா, சிறை நிரப்பும் போராட்டம் ஆகியவற்றை அன்னா ஹஸாரே வாபஸ்
பெறவேண்டிய சூழலுக்கும் தள்ளப்பட்டார்.
ஏன் ஹஸாரேயின் போராட்டம் வீரியம் இழந்தது?
அரவிந்த் கேஜ்ரிவால், கிரன் பேடி ஆகியோருடன் இணைந்து ஹஸாரேயின் போராட்டம் அன்னா டீம் போராட்டமாக உருவெடுத்தது.
கேஜ்ரிவால், கிரன்பேடி ஆகியோர் மீதான
குற்றச்சாட்டுக்கள் அவரது போராட்டத்தை வீரியமிழக்கச் செய்தது. கடந்த ஆகஸ்ட்
மாதம் டெல்லியில் ஹஸாரே நடத்திய போராட்டத்தில் மக்கள் ஆதரவு அதிகமாக
இருந்தது. நாடு முழுவதும் அவருக்கு ஆதரவு பெருகியது. ஆனால், அவருக்கு
மறைமுகமாக ஆர்.எஸ்.எஸ் ஆதரவு அளித்தது. மேலும் காங்கிரஸ் கட்சியை மட்டுமே
குறிவைத்து அன்னா ஹஸாரேயும், அவரது குழுவினரும் தாக்குதலை தொடர்ந்தனர்.
ஹரியானாவில் ஹிஸார் மக்களவை தொகுதியில்
நடந்த இடைத் தேர்தலில் அன்னா குழுவினர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக
பிரச்சாரம் செய்தனர். மோடி, எடியூரப்பா போன்ற பா.ஜ.க ஊழல் முதல்வர்கள்
குறித்து அன்னாவோ அவரது
குழுவினரோ வாயை திறக்கவில்லை. மோடியின் போலியான வளர்ச்சித் திட்டத்தை குறித்து ஹஸாரே புகழ்ந்தார்.
ஆர்.எஸ்.எஸ்ஸுடன் ஹஸாரேயின் தொடர்பு
குறித்து ‘நய் துன்யா’ பத்திரிகை ஆதாரத்துடன் செய்தியை வெளியிட்டது. மேலும்
ஹஸாரேயின் சொந்த ஊரைச் சார்ந்த மக்களுக்கும், ஹஸாரேயின் மத்தியக்
குழுவிற்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. இவையெல்லாம் மக்கள்
ஆதரவு ஹஸாரேக்கு குறைய காரணங்களாகும் என கூறப்படுகிறது.

Similar topics
» பாக்.கொடி:தோல்வியை தழுவிய ஆர்.எஸ்.எஸ்ஸின் சதித்திட்டம்?
» அன்னா ஹஸாரே மீது ஆர்.எஸ்.எஸ் கோபம்
» குவைத்:வெளிநாட்டினர் போராட்டத்தில் பங்கேற்றால் சிறையும், அபராதமும்
» ஹஸாரே குழுவில் பிளவு:2பேர் ராஜினாமா
» செய்தியாளர்களின் கேள்விகளால் திணறிய ஹஸாரே

Permissions in this forum:
You cannot reply to topics in this forum