முஸ்லிம் இளைஞர்களின் சட்ட விரோத கைது குறித்து விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவு
Page 1 of 1

புதுடெல்லி:சட்ட விரோதமாக முஸ்லிம்
இளைஞர்களை கடந்த ஆண்டு நவம்பர் இறுதியில் டெல்லி சிறப்பு காவல்துறை கைது
செய்தது குறித்து விசாரணை நடத்தி நான்கு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல்
செய்ய டெல்லி காவல்துறைக்கு தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவு
பிறப்பித்துள்ளது.
இந்த நோட்டீஸ் விவகாரம் டெல்லி
காவல்துறைக்கு பெரும் பின்னடைவு ஏற்படுத்தியுள்ளது. கைது குறித்து தேசிய
மனித உரிமை ஆணையம் டெல்லி காவல்துறை துணை ஆணையர் சரிதா விஹாரின்க்கு கடந்த
2011-ம் ஆண்டு டிசம்பர்-22 ஆம் தேதியிட்டு நான்கு வாரங்களுக்குள்
பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும் டெல்லி காவல்துறை அறிக்கை தாக்கல்
செய்த பிறகு மனித உரிமை ஆணையம் நடவடிக்கையை மேற்கொள்ளும் எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அறிக்கையின் நகல் ஒன்றை டெல்லி காவல்துறை
விஜிலன்சின் துணை ஆணையருக்கும் அனுப்ப வேண்டும் என்றும் அந்த நோட்டிஸில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
பைசல் கான் என்னும் சமூக ஆர்வலர் டெல்லி
சிறப்பு காவல்துறையின் மீது தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்ததை
தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது. கௌஹர் அஜீஸ்
மற்றும் முஹம்மத் இர்ஷாத் கான் ஆகிய இருவரையும் இந்தியன் முஜாஹிதீன் என்று
கூறி கைது செய்தனர் என்றும் மேலும் அவர்களின் கைது பற்றி அவர்களின்
குடும்பத்திற்கு பல நாட்கள் வரை தெரிவிக்கவில்லை என்றும்
தெரிவித்திருந்தார். கைது செய்யப்பட்ட 12 மணி நேரத்திற்குள் அவர்களின்
உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்று கூறும் உச்சநீதிமன்ற
வழிகாட்டுதலுக்கு இது எதிரானது என்றும் தன்னுடைய புகாரில் கான்
தெரிவித்துள்ளார்.
மேலும் தீவிர வாதிகள் என்று பொய்க்
குற்றம் சாட்டி கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக தேசிய மனித உரிமை ஆணையம்
முதன் முறையாக நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும்
டெல்லி போலீசால் நடத்தப்பட்ட இந்த மனித உரிமை மீறலை விசாரிக்கும் பொறுப்பை
டெல்லி காவல்துறையினரிடம் ஒப்படைத்திருப்பது ஏன்? என்ற கேள்வி எழுகிறது.

Similar topics
» போலி என்கவுண்டர்:பயன்படுத்திய ஆயுதங்கள் குறித்து விசாரிக்க வேண்டும் – மனித உரிமை கமிஷன்
» முஸ்லிம் நபரின் உடலை போஸ்ட் மார்ட்டம் செய்ய ஒரு மாத காலம் – தேசிய மனித உரிமை கமிஷன் நோட்டீஸ்
» போலிஎன்கவுண்டர்:முன்னாள் ஐ.பி தலைவரையும் விசாரிக்க வேண்டும் – மனித உரிமை ஆர்வலர்கள்
» குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை:ஆதாரங்கள் அழிப்பு-நீதிமன்றம் செல்லும் மனித உரிமை அமைப்பு
» பிரிட்டனில் மனித உரிமை படுமோசம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum