குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை:ஆதாரங்கள் அழிப்பு-நீதிமன்றம் செல்லும் மனித உரிமை அமைப்பு
Page 1 of 1

புதுடெல்லி:2002-ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை தொடர்பான ஆவணங்களை அழித்த நரேந்திர மோடி அரசுக்கு எதிராக நீதிமன்றத்தை அணுக மனித உரிமை அமைப்பு முடிவுச்செய்துள்ளது.
குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை தொடர்பான இண்டலிஜன்ஸ் பீரோ பதிவுகள், வயர்லெஸ் செய்திகள், தொலைபேசி உரையாடல்கள் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த ஆதாரங்களை மோடி அரசு அழித்துள்ளது. இதன் காரணமாக இனப்படுகொலை வழக்கில் அரசு,போலீஸ் மற்றும் உயர் அதிகாரிகள் தொடர்பு குறித்த ஆதாரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. இதற்கு எதிராக நீதிமன்றத்தை அணுக குஜராத் மாநிலத்தை சார்ந்த மனித உரிமை ஆர்வலரும், வழக்கறிஞருமான முகுல் சின்ஹாவின் தலைமையிலான ஜனசங்கர்ஷ் மஞ்ச் தீர்மானித்துள்ளது.
முஸ்லிம் இனப்படுகொலை தொடர்பான ஆவணங்கள் அழிக்கப்பட்டுவிட்டதாக குஜராத் அரசு தரப்பு வழக்கறிஞர் எஸ்.பி.வக்கீல் வழக்கை விசாரித்துவரும் நானாவதி கமிஷன் முன்பாக அறிவித்திருந்தார்.வாகன லாக் புக், மூவ்மெண்ட் டயரிகள் ஆகியனவும் அழிக்கப்பட்ட ஆவணங்களில் அடங்கும்.இனப்படுகொலையில் நரேந்திரமோடியின் பங்கினை நிரூபிப்பதாகும் இந்த ஆவணங்கள். குறித்த காலத்திற்கு பிறகு ஆவணங்களை அழிப்பது வழக்கம் என நானாவதி கமிஷனிடம் குஜராத் அரசு தெரிவித்திருந்தது.
ஆனால், விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட அல்லது நீதிமன்றத்தின் பரிசீலனையில் இருக்கும் வழக்குகளின் ஆவணங்களை அழிப்பதை குஜராத் போலீஸ் குறிப்பேடும், இந்திய தண்டனைச்சட்டமும் தடுத்துள்ளது.இதனைப்பொருட்படுத்தாமல் ஆவணங்களை குஜராத் அரசு அழித்துள்ளது.
குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை தொடர்பான வழக்குகள் கடந்த 2002-ஆம் ஆண்டு முதல் உச்சநீதிமன்றம், குஜராத் உயர்நீதிமன்றம், விசாரணை நீதிமன்றம் ஆகியவற்றின் பரிசீலனையில் உள்ளது. இந்த சூழலில் ஆவணங்களை அழிப்பது குற்றகரமான செயலாகும்.ஆவணங்கள் அழிக்கப்பட்ட சூழலில் இனப்படுகொலையில் உயர் அதிகாரிகளின் பங்கை நிரூபிப்பது சிரமமாகும் என குஜராத் மாநில முன்னாள் டி.ஜி.பி ஆர்.பி ஸ்ரீகுமார் தெரிவித்துள்ளார்.இனப்படுகொலை தொடர்பான டயரி ஒன்றை ஓய்வு பெறும் முன்பு உளவுத்துறை தலைவரிடம் ஒப்படைத்தேன்.பின்னர் இதனை நானாவதி-மேத்தா கமிஷன் மற்றும் உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வு குழு ஆகியவற்றிடம் அளித்தேன்.ஆனால், இதன் ஒரிஜினல் ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளன என ஸ்ரீகுமார் தெரிவித்துள்ளார்.இந்த் டயரியில் பல முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களும், ஸ்ரீகுமார் பல்வேறு புலனாய்வு குழுக்களுக்கு அளித்த பிரமாணப்பத்திரத்தில் அடங்கியுள்ளன.
புலனாய்வு ஏஜன்சிகள் பல முறை கேட்ட பிறகும் வழக்கு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க குஜராத் அரசு தயாராகவில்லை என குல்பர்க் சொசைட்டி கூட்டுப்படுகொலையில் கொடூரமாக கொல்லப்பட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி இஹ்ஸான் ஸாப்ரியின் மகன் தன்வீர் கூறுகிறார்.தன்வீரின் தாயாரின் புகாரின் அடிப்படையில் மோடி உள்பட 63 நபர்களுக்கு இனப்படுகொலையில் பங்கு குறித்த விசாரணை நடைபெற்றுவருகிறது.ஆனால், ஆவணங்கள் அழிக்கப்பட்டது இவ்வழக்கையும் பாதிக்கும்.

Similar topics
» இனப்படுகொலை ஆவணங்கள் அழிப்பு:குஜராத் போலீசிடம் விளக்கம் கேட்கும் நானாவதி கமிஷன்
» குஜராத்:மனித உரிமை கமிஷனின் அறிக்கையை சட்டசபையில் ஏன் தாக்கல் செய்யவில்லை? – உயர்நீதிமன்றம் கேள்வி
» குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை: முன்னாள் அமைச்சர் ஜடேஜாவை விசாரணை செய்ய அனுமதி
» முஸ்லிம் இளைஞர்களின் சட்ட விரோத கைது குறித்து விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவு
» முஸ்லிம் நபரின் உடலை போஸ்ட் மார்ட்டம் செய்ய ஒரு மாத காலம் – தேசிய மனித உரிமை கமிஷன் நோட்டீஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum