தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அரஃபா நோன்பு

Go down

அரஃபா நோன்பு  Empty அரஃபா நோன்பு

Post by முஸ்லிம் Thu Nov 11, 2010 2:35 pm

அரஃபா நோன்பு  5
ரமலான் மாதத்தின் கடமையான நோன்புகளைத் தவிர, வருடத்தின் மற்ற சில நாட்களில் நோன்பு வைப்பதும் இஸ்லாத்தில் வரவேற்கத்தக்க, வலியுறுத்தப்பட்ட வணக்கங்களாக உள்ளன. அவற்றில் மிக முக்கியமான நோன்புதான் 'அரஃபா நோன்பு' என்று சொல்லக்கூடிய நோன்பாகும்.




இந்த நோன்பை, இஸ்லாமிய மாதங்களில் இறுதி மாதமான துல்ஹஜ் மாதம் பிறை 9 அன்று நோற்கும்படி நபி(ஸல்)அவர்கள் நம‌க்கு ஆர்வமூட்டியுள்ளார்கள்.




அபூ கதாதா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், 


                   துல்ஹஜ் ஒன்பதாவது நாள் அன்று நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.


                         நூல்:முஸ்லிம்(2151)




இந்த அரஃபா நோன்பை, அவ்வருடம் யார் ஹஜ்ஜுக்கு செல்லாமல் இருக்கிறார்களோ அவர்கள் மட்டும்தான் நோற்கவேண்டும். ஏனெனில் அரஃபா தினத்தன்று அரஃபாவில் ஒன்று கூடியிருக்கும் ஹாஜிகள் நோன்பு நோற்பதற்கு நபி(ஸல்)அவர்கள் தடைவிதித்துள்ளார்கள்.




அரஃபா பெருவெளியில் தங்கியிருப்போர் அரஃபா நாளில் நோன்பு நோற்பதை நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் தடை செய்தார்கள் என்று அபூஹுரைரா(ரலி)அறிவிக்கிறார்கள்.              


                       நூல்: இப்னுமாஜா(1722)




'அரபா நோன்பு' - பிறை ஒன்பதிலா? அல்லது அரஃபாவில் ஹாஜிகள் கூடிய அன்றா?




நாம் எந்த ஒரு விஷயத்தையும் அல்லாஹ்வின் கட்டளையிலோ, நபி(ஸல்)அவர்களின் வழிமுறையிலோ எவ்வாறு உள்ளது என்பதை மட்டும் கவனமாக பார்ப்போமானால் இதுபோன்ற கேள்விகளுக்கே இடமில்லாமல் போய்விடும்.




இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் பிறையைக் கொண்டே நாட்கள் கணக்கிடப்படுகிறது. பிறைக் காண்பது என்பது, ஒரு இடம் அமைந்துள்ள அமைப்பு மற்றும் வானிலைகளை வைத்து இடத்திற்கு இடம் மாறுவதற்குதான் வாய்ப்புகள் அதிகமாக‌ இருக்கும் என்ற இந்த நியதி எக்காலமும் மாறாதவை. நாம் எவ்வளவுதான் விஞ்ஞானத்தில் விண்ணைத் தொட்டாலும் ஒரு நாளின் ஆரம்பத்தையும் முடிவையும் மாற்றி அமைக்கும் திறன், படைப்பினங்களாகிய‌ நமக்கில்லை. இது வல்ல நாயன் வகுத்துள்ள அமைப்பாகும்!




எனவேதான் முக்காலமும் பொருந்தக்கூடிய இம்மார்க்கத்தில் நபி(ஸல்)அவர்கள் அழகான முறையில் வழிகாட்டிச் சென்றுள்ளார்கள். ஆக, எந்த நோன்பாக இருந்தாலும் அவரவர் பகுதிகளில் பார்க்கும் பிறைக் கணக்கின் அடிப்படையில்தான் தீர்மானிக்க வேண்டும் என்ற அண்ணல் நபியவர்களின் கட்டளையை நாம் கடைப்பிடிக்கத் தவறிவிடக் கூடாது. இதோ அந்தக் கட்டளை:




"பிறையைப் பார்க்காமல் நோன்பு பிடிக்காதீர்கள். பிறையைப் பார்க்காமல் நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் (முப்பது நாட்களாக) எண்ணிக் கொள்ளுங்கள்" என்று நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் கூறினார்கள்.


          அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி);  நூல்:புகாரி(1906)




அதேபோல், பிறைப் பார்த்துதான் ஹஜ்ஜைக்கூட தீர்மானிக்க வேண்டும் என்றே இறைவனும் நமக்கு கட்டளையிட்டுள்ளான்.




பிறைகளைப் பற்றி (முஹம்மதே!)  உம்மிடம் கேட்கின்றனர். 'அவை மக்களுக்கும், (குறிப்பாக) ஹஜ்ஜுக்கும் காலம் காட்டிகள்' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன் 2:189)




மேலும் அவரவர் பகுதிகளில் பார்த்த பிறைக் கணக்கின் அடிப்படையில்தான் இரண்டு பெருநாட்களையும் மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்பதே நபிவழி என்பதையும் நாம் கவனிக்கவேண்டும்.




"நீங்கள் 'நோன்பு' என முடிவு செய்யும் நாள்தான் நோன்பாகும். 'நோன்புப் பெருநாள்' என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் நோன்புப் பெருநாளாகும். 'ஹஜ்ஜுப் பெருநாள்' என நீங்கள் முடிவு செய்யும் நாள்தான் ஹஜ்ஜுப் பெருநாளாகும்" என்று நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் கூறினார்கள்.


                   அறிவிப்பவர்:அபூஹுரைரா(ரலி); நூல்:திர்மிதீ




துல்ஹஜ் மாதம் முதல் பிறைக் கண்டதிலிருந்து 10 - ம் நாள்தான் ஹஜ்ஜுப் பெருநாளாகும். இதில் இரு வேறு கருத்துகளுக்கு இடமில்லை. ஆக, அதற்கு முந்திய ஒன்பதாம் நாள்தான் அர‌ஃபா நோன்பு நோற்கவேண்டிய நாளாகும். ஏனெனில், அரஃபா நோன்பு பற்றி வரக்கூடிய ஹதீஸ்களில் 'ஒன்பதாவது நாள்' என்று தெளிவாகவே குறிப்பிடப்ப‌ட்டுள்ளது.




"நபி(ஸல்)அவர்கள் துல்ஹஜ் ஒன்பதாம் நாள் நோன்பு வைப்பார்கள் என்று நபி(ஸல்)அவர்களின் துணைவியார்களில் சிலர் கூறினார்கள்" என்று ஹுனைதா இப்னு காலித்(ரலி)அறிவிக்கிறார்கள்.


                    நூல்கள்: அபூதாவூத், நஸாயி, அஹ்மத்




"துல்ஹஜ் ஒன்பதாவது நாள் அன்று நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்"  என்று அபூ கதாதா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


                         நூல்:முஸ்லிம்(2151)



அதேசமயம் 'ஒன்பதாம் நாள்' என்று குறிப்பிட்டு சொல்லாமல் 'அரஃபா நாள்' என்று நபி(ஸல்)அவர்கள் கூறியதாக சில ஹதீஸ்களும் காணப்படுகின்றன. அதையும் இப்போது பார்ப்போம்.




அரஃபா நாளில் நோன்பு நோற்பது அதற்கு முந்திய வருடம் மற்றும் அடுத்த வருடத்திற்கான பரிகாரமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.


             அறிவிப்பவர்: அபூகதாதா(ரலி); நூல்:முஸ்லிம்(1977)




துல்ஹஜ் பிறைப் பார்த்த ஒன்பதாம் நாள் ஹாஜிகள் அரஃபா மைதானத்தில் கூடுவதால் அன்றைய தினத்திற்கு 'அரஃபா நாள்' என்று பெயர் வந்தது. மேற்கண்ட ஹதீஸில் நபி(ஸல்)அவர்கள், 'அரஃபா நாள்' என்று கூறியுள்ளார்கள். அதே சமயம் அந்த ஒன்பதாவது நாளுக்கு 'அரஃபா நாள்' என்று பெயர் சொல்லப்பட்டாலும், நோன்பு வைப்பதைப் பொறுத்தவரை அன்றைய தினத்தில் நோன்பு வைப்பதை நபி(ஸல்)அவர்கள் எவ்வாறு நமக்கு நடைமுறைப்படுத்திக் காட்டினார்கள்?




அரஃபா நாளில் நோன்பு நோற்கச் சொன்ன நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் மக்காவுக்கு ஆளனுப்பி எந்த நாளில் ஹாஜிகள் அரஃபாவில் கூடுகிறார்கள் என்பதை விசாரித்து வருவதற்கு எந்த ஏற்பாடும் செய்யவில்லை. ஹாஜிகள் எப்போது அரஃபாவில் தங்குகிறார்கள் என்பதை அறிந்துக் கொள்ளத் தேவையில்லை என்ற அடிப்படையில்தான், மதீனாவில் காணப்பட்ட பிறையின்படி ஒன்பதாம் நாள் நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் நோன்பு நோற்றார்கள். நபிகள் நாயகம்(ஸல்)அவர்களின் காலத்தில், மக்காவில் முதல் பிறைக் காணப்பட்டவுடன் அந்தத் தகவலை ஓரிரு நாட்களில் அறிந்து வர‌ வசதிகள் இருந்தும்கூட‌ நபி(ஸல்)அவர்கள் அந்த வசதியைப் பயன்படுத்தவில்லை.




எனவே அரஃபாவில் ஹாஜிகள் தங்கும் நாள் என்பது சவூதியில் பிறைப் பார்த்த கணக்குப்படி நமக்கு எட்டாம் நாளாகக்கூட‌ இருக்கலாம். நாம் அதைப் பின்பற்றத் தேவையில்லை. 'அரஃபா மைதானத்தில் ஹாஜிகள் கூடியதை உறுதி செய்துக்கொண்டு நோன்பு வையுங்கள்' என்று எங்குமே நபி(ஸல்) அவர்கள் கட்டளையிடவுமில்லை. அதற்கு நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லை. ஆக, மதீனாவில் வாழ்ந்த நபி(ஸல்)அவர்கள் அரஃபாவில் உள்ள நிலையைப் பின்பற்றத் தேவையில்லை என்று எவ்வாறு நடைமுறைப்படுத்திக் காட்டினார்களோ, அவ்வாறுதான் நாமும் நடைமுறைப்படுத்த வேண்டும். அதாவது, நாம் பிறைப் பார்த்த கணக்குப்படிதான் ஒன்பதாம் நாளில் அரஃபா நோன்பை நோற்க வேண்டும்.




ஆக‌வே, நபிவழியின் அடிப்படையில் இந்த அர‌ஃபா நோன்பை நோற்று அண்ணல் நபியவர்கள் கூறிய அந்த நன்மையை நாமனைவரும் அடைய எல்லாம் வல்ல ரஹ்மான் அருள்புரிவானாக!

நன்றி : http://payanikkumpaathai.blogspot.com/
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11136
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

அரஃபா நோன்பு  Empty Re: அரஃபா நோன்பு

Post by முஸ்லிம் Thu Nov 03, 2011 10:26 pm

அரஃபா நோன்பு அவசியம் கருதி மீள்பதிவு

முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11136
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum