குவைத்தில் அமெரிக்க படை எண்ணிக்கை அதிகரிப்பு
Page 1 of 1

குவைத் சிட்டி:ஈரான் மீது தடைகளை
திணிப்பது ஒரு புறம் நடந்துகொண்டிருக்கவே அந்நாட்டின் மீது தாக்குதல்
நடத்துவதற்கும் அமெரிக்கா தயாராகி வருகிறது. குவைத்தில் அமெரிக்க
படையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது. குவைத்திற்கு கூடுதல்
ராணுவத்தினரையும்,ஆயுதங்களையும் அனுப்பப் பட்டு வருவதாக அமெரிக்க ஊடகங்கள்
செய்தி வெளியிட்டுள்ளன.
ஈராக்கில் வாபஸ் பெற்ற ராணுவத்தின் சில குழுக்கள் உள்பட குவைத்தில் அமெரிக்க ராணுவத்தினரின் எண்ணிக்கை 15 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
குவைத்தும்,அமெரிக்காவும் இதுத்தொடர்பாக
அதிகாரப்பூர்வமாக உறுதிச்செய்யவில்லை எனினும், இருநாடுகளுடன் தொடர்புடைய
வட்டாரங்கள் ஒப்புகொள்கின்றன. ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்காகத்தத்தான்
குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் அமெரிக்கா படையை குவித்து வருகிறது.
தற்போது வளைகுடா பகுதிகளில் 40 ஆயிரம் அமெரிக்க ராணுவத்தினர் உள்ளனர்.
குவைத்தில் நிரந்தரமாக ராணுவத்தினரை
அதிகரிக்க அமெரிக்காவிற்கு விருப்பமில்லை என நேற்று முன்தினம் பெண்டகனின்
செய்தித் தொடர்பாளரும், கடற்படை தளபதி ஜான் கர்பி தெரிவித்திருந்தார்.
ஆனால்,அது உண்மை அல்ல என கருதப்படுகிறது.
கடந்த மாதம் ஈராக்கில் இருந்து அமெரிக்க
ராணுவம் வாபஸ் பெற்றது அதிகாரப்பூர்வமாக பூரணமானபோது முதல் ப்ரிகேடின்
முதல் காவல்ட்ரி டிவிசன் நாடு திரும்பாமல் முற்றிலுமாக குவைத்தில்
தங்கியுள்ளது. 4500 ராணுவ வீரர்களை கொண்ட இக்குழு ஆயுதம் ஏந்தி தயார்
நிலையில் உள்ளனர்.
குவைத்தில் இப்படையினர் ‘மொபைல்
ரெஸ்பான்ஸ் ஃபோர்ஸ்’ ஆக தொடர்வார்கள் என ப்ரிகேட் கமாண்டர் கர்னல் ஸ்காட்
எஃப்எலாண்ட் கூறுகிறார். மேலும் மினஸோட்டாவில் இருந்து ஆகஸ்ட் மாதமே நேசனல்
கார்ட் ப்ரிகேட் படை குவைத்திற்கு வருகை தந்தது. டிசம்பர் மாதம் இன்னொரு
ப்ரிகேடும் வந்தது. மேலும் ஒரு ப்ரிகேட் உடனடியாக குவைத்திற்கு வருகை தரும்
என கருதப்படுகிறது.
குவைத்தில் ராணுவத்தின் இருப்பை
அதிகரிப்பதற்கான திட்டத்திற்கான அனுமதியை கடந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க
சென்ட்ரல் கமாண்டின் பொறுப்பில் உள்ள மரைன் காப்ஸ் தலைவர் ஜெனரல் ஜேம்ஸ்
மாட்டிஸ் பெற்றிருந்தார்.
ஈராக்கில் அவசர சூழலில் தேவைப்பட்டால்
உபயோகிப்பதற்கு குவைத்தில் ராணுவத்தினரின் எண்ணிக்கையை அதிகரிப்பதாக
முன்னர் அமெரிக்கா கூறியிருந்தது. ஆனால் இப்படை குவிப்பு ஈரானுக்கு எதிராக
சூழந்திருக்கும் போர் மேகத்தை கவனத்தில் கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை என
அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
கடந்த சில காலமாக அரபிக்கடலில் நிற்கும்
யு.எஸ்.எஸ் ஜான் சி.ஸ்டெனிஸ் விமானம் தாங்கி போர்க்கப்பலுடன் நேற்று
முன்தினம் யு.எஸ்.எஸ்.கார்ல் வின்ஸன் என்ற கப்பலும் வருகைத் தந்தது.
மூன்றாவது கப்பல் உடனடியாக வரும் என கருதப்படுகிறது. போர்க் கப்பல்களின்
எண்ணிக்கையை அதிகரித்தால் அரேபிய துணைக்கண்டத்தில் உள்ள எண்ணெய்க்
கப்பல்களின் முக்கிய பாதையான ஹோர்முஸ் ஜலசந்தியை மூடுவோம் என ஈரான்
எச்சரிக்கை விடுத்திருந்தது.

Similar topics
» அமெரிக்காவில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
» சிக்கிம் பூகம்பம்: பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு
» பிரிட்டனில் இஸ்லாத்தை தழுவுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
» மேற்கு வங்காள சட்டப்பேரவையில் முஸ்லிம் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
» அமெரிக்க ராணுவ வீரர்களிடையே பாலியல் அத்துமீறல் அதிகரிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum