தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பிரிட்டனில் இஸ்லாத்தை தழுவுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Go down

பிரிட்டனில் இஸ்லாத்தை தழுவுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு Empty பிரிட்டனில் இஸ்லாத்தை தழுவுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Post by முஸ்லிம் Thu Jan 06, 2011 3:35 pm

லண்டன்,ஜன.5:கடந்த பத்தாண்டுகளில் பிரிட்டனில் இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஃபைத் மேட்டர்ஸ் நடத்திய ஆய்வில்தான் இஸ்லாத்தை தழுவுபவர்களின் எண்ணிக்கை நினைத்தைவிட ஆச்சரியப்படத்தக்க வகையில் அதிகம் என தெரியவந்துள்ளது.

இஸ்லாத்தை பற்றிய தவறான பிரச்சாரம் பிரிட்டனில் பரப்பப்பட்டு வந்தாலும்
ஆயிரக்கணக்கான பிரிட்டன் மக்கள் இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக
ஏற்றுக்கொள்கின்றனர் என ஃபைத் மேட்டர்ஸ் நடத்திய சுதந்திர ஆய்வு
தெளிவுப்படுத்துகிறது.

பழைய புள்ளிவிபரங்களின் படி 14 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரையிலான நபர்கள் இஸ்லாத்தை தழுவுவதாக கணக்கிடப்பட்டிருந்தது. ஆனால், மக்கள் தொகை கணக்கெடுப்பில் மதமாறுபவர்களின் எண்ணிக்கையை குறிப்பிடாதது சிக்கலை ஏற்படுத்துகிறது.

ஒரு லட்சம் பேராவது இதுவரை இஸ்லாத்தை ஏற்றிருக்கலாம் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு பிரிட்டனின் தலைநகரில் மட்டும் 1400 பேர் இஸ்லாத்தை தழுவியுள்ளனர்.

பிரிட்டனில் தேசிய அளவில் வருடந்தோறும் 5200 பேர் இஸ்லாத்தை தழுவி வருகின்றனர்.ஜெர்மனியிலும், பிரான்சிலும் இஸ்லாத்தை தழுவுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 4000 ஆகும்.

கடந்த 2001 ஆம் ஆண்டில் பிரிட்டனில் 60,699 பேர் இஸ்லாத்தை தழுவியதாக
கணக்கிடப்பட்டுள்ளது.

நன்றி:times of India
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11137
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» குவைத்தில் அமெரிக்க படை எண்ணிக்கை அதிகரிப்பு
» அமெரிக்காவில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
» சிக்கிம் பூகம்பம்: பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு
» பிரிட்டனில் மீண்டும் ராணுவத்தினரின் எண்ணிக்கை குறைப்பு
» மேற்கு வங்காள சட்டப்பேரவையில் முஸ்லிம் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum