கோத்ரா தீ விபத்து: 10 ஆண்டுகள் நிறைவு!
Page 1 of 1
கோத்ரா தீ விபத்து: 10 ஆண்டுகள் நிறைவு!
அஹ்மதாபாத்:குஜராத்தில் ஆயிரக்கணக்கான
முஸ்லிம்களை கொடூரமாக படுகொலைச் செய்வதற்காக மோடி அரசு சதித்திட்டம் தீட்டி
நடைமுறைப்படுத்தியதாக குற்றம் சாட்டப்படும் கோத்ரா ரெயில் தீ விபத்து
நிகழ்ந்து 10 ஆண்டுகள் நிறைவுறுகிறது.
அயோத்தியில் இருந்து வந்துகொண்டிருந்த
சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயிலில் 5 மற்றும் 6 எண் பெட்டிகளில் பயணித்த 59
பயணிகள் 2002 பிப்ரவரி 27-ஆம் தேதி கோத்ராவில் தீவைத்துக் கொளுத்தப்பட்டு
பலியாகினர்.
இதனைத் தொடர்ந்து குஜராத்தின் பல்வேறு
பகுதிகளில் அரசு மற்றும் போலீசின் துணையுடன் சங்க்பரிவார ஹிந்துத்துவா
பயங்கரவாதிகள் இந்திய வரலாற்றில் முன்பு ஒருபோதும் நிகழாத அளவுக்கு
ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொடூரமாக கொலைச் செய்தனர்.
கோத்ரா தீ விபத்தின் 10-வது நினைவு
தினத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஏற்பாடுச்
செய்துள்ளன. குஜராத் இனப் படுகொலையை குறித்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு
நீதி கிடைப்பதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்தும் மீளாய்வு செய்வதற்காக 10
தினங்களை கொண்ட நிகழ்ச்சிக்கு 45 மனித உரிமை அமைப்புகள் கூட்டாக ஏற்பாடுச்
செய்துள்ளன.
பேரணிகள், சூஃபி இசை, கண்காட்சி,
பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடல், பிரார்த்தனை ஆகிய நிகழ்ச்சிகள்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முன்னாள் எம்.பி இஹ்ஸான் ஜாஃப்ரி உள்பட 68 பேர்
கொடூரமாக எரித்துக் கொலைச் செய்யப்பட்ட குல்பர்க் சொஸைட்டியில் ஒன்று கூடி
திருக்குர்ஆனை படிக்கப் போவதாக இவ்வமைப்புகள் அறிவித்துள்ளன.
கோத்ரா சம்பவத்தின் பின்னணியில் மோடியும்
அவருடைய அமைச்சரவை சகாக்களும்தான் காரணம் என்று பல்வேறு மனித உரிமை
அமைப்புகள் குற்றம் சாட்டியிருந்தன. கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்திற்கு
பிறகு நடந்த உயர் மட்ட கூட்டத்தில், ஹிந்துக்களை அவர்களிடன் கோபத்தை
வெளியிட அனுமதிக்க வேண்டும் என்று மோடி கூறியதாக கூட்டத்தில் பங்கேற்ற
முன்னாள் ஐ.பி.எஸ் மூத்த அதிகாரி சஞ்சீவ் பட் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்
பத்திரம் தாக்கல் செய்தார்.
ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொடூரமாக
படுகொலைச் செய்யப்பட்ட குஜராத் இனப்படுகொலை நிகழ்ந்து 10 ஆண்டுகள் கழிந்த
பிறகு ஒரு சில வழக்குகளில் மட்டுமே தீர்ப்பு வெளியாகியுள்ளன. இனப்
படுகொலையை குறித்து விசாரணை நடத்த குஜராத் அரசு நியமித்த நானாவதி கமிஷனின்
அறிக்கை இதுவரை வெளியாகவில்லை.
கோத்ரா ரெயில் தீ விபத்து குறித்து விசாரணை நடத்திய இரண்டு கமிஷன்கள் மாறுபட்ட கருத்தை வெளியிட்டன.
மத்திய ரெயில்வே அமைச்சகம் நியமித்த
யு.சி.பானர்ஜி கமிஷன் கோத்ரா ரெயில் எரிப்பு விபத்து என்றும், எரிபொருள்
ரெயிலுக்கு வெளியே இருந்து பயன்படுத்தப்படவில்லை மாறாக ரெயிலின்
உள்பகுதியில் இருந்துதான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கூறியது. ஆனால்,
மோடி அரசு நியமித்த கமிஷனின் இடைக்கால அறிக்கையில், முன்னரே திட்டமிட்ட
சதித்திட்டத்தின் ஒரு பகுதிதான் ரெயில் எரிப்பு சம்பவம் என்றும் கூறியது.

Similar topics
» போபால் விஷவாயு விபத்து:27 ஆண்டுகள் நிறைவு
» பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டு 19 ஆண்டுகள் நிறைவு: நீதியை எதிர்பார்த்து முஸ்லிம் சமூகம்
» சச்சார் கமிட்டி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவு – மாறியதா முஸ்லிம்களின் நிலைமை?
» ஈரானில் விமான விபத்து: 70 பேர் பலி!
» கோத்ரா வழக்கு - 11 பேருக்குத் தூக்கு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum