தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

சச்சார் கமிட்டி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவு – மாறியதா முஸ்லிம்களின் நிலைமை?

Go down

சச்சார் கமிட்டி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவு – மாறியதா முஸ்லிம்களின் நிலைமை?  Empty சச்சார் கமிட்டி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவு – மாறியதா முஸ்லிம்களின் நிலைமை?

Post by முஸ்லிம் Mon Nov 21, 2011 5:02 pm

சச்சார் கமிட்டி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவு – மாறியதா முஸ்லிம்களின் நிலைமை?  Sachar-270x170இந்தியாவில்
முஸ்லிம்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி ஆகியவற்றின் நிலை குறித்து
ஆராய்ந்து அறிக்கை தயார் செய்ய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் சச்சார்
கமிட்டி அமைக்கப்பட்டு அதன் தலைவராக முன்னாள் நீதிபதி திரு.ராஜேந்திர
சச்சார் நியமிக்கப்பட்டார். அவர் தனது அறிக்கையை கடந்த 2006 ஆம் ஆண்டு
நவம்பர் 17-ல் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அறிக்கையை சமர்ப்பித்தார். அதே
ஆண்டே அவ்வறிக்கை பாராளமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த அறிக்கை முஸ்லிம்களின் நிலை
குறித்தும் முஸ்லிம்களுக்கு வாழ்விட வசதி, வேலை வாய்ப்பு மற்றும் கல்வி
ஆகியவற்றில் சமத்துவமும், சம உரிமைகளும் அளிக்கப்பட வேண்டும் என்றும்
அவ்வாறு அளிக்கப்படும் சலுகைகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதையும்
அரசுக்கு தெளிவு படுத்தியது.

சச்சார் அறிக்கையில் முஸ்லிம்களின்
நிலைபற்றி கூறப்பட்டு இருந்தாவது; ‘சுதந்திரம் அடைந்த அறுபது
ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய சமூகமான முஸ்லிம்
சமூகம் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்களை விட மிகவும் பின்தங்கிய
நிலையில் உள்ளனர் என்று உறுதிபடுத்தியுள்ளது.’ மேலும் இந்த அறிக்கையானது பல
ஆண்டுகளாக சிறுபான்மைச் சமூகத்தை திருப்தி படுத்தவே அனைத்து அரசுகளும்
முயலுகின்றன என்று பிரச்சாரம் செய்துவரும் பா.ஜ.க மற்றும் வலதுசாரி
ஹிந்துத்துவா அமைப்புகளின் பிரசாரங்கள் அனைத்தும் கடைந்தெடுத்த பொய் என்று
நிரூபித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அனைத்திற்கும் மேலாக இந்த அறிக்கையின்
மூலம் முஸ்லிம் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது குறித்தான
புரிந்துணர்வுகள் நேர்மறையாக ஆக்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இத்துணை விளைவுகளை சச்சார் அறிக்கை
ஏற்படுத்தியிருந்தும் மேலும் காங்கிரஸ் அரசு சச்சார் கமிட்டியின்
பரிந்துரையை முழுவதுமாக ஆதரிப்பதாக அறிவித்தும் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த
அறிக்கையை தாமதப்படுத்தும் வேலைகளை மட்டுமே மத்திய அரசு செய்து
வந்துள்ளது. மேலும் மாநில அரசுகளிடமும் மத்திய அரசுகளிடமும் முஸ்லிம்
சமூகத்தார் சச்சார் அறிக்கையை உடனடியாக அமல் படுத்த வேண்டும் என்று
கோரிக்கை வைப்பதும் தொடர்ந்த வண்ணமே உள்ளது.

ஆனால், சிறுபான்மை நலத்துறை அமைச்சரான
சல்மான் குர்ஷித் கூறுகையில் “சச்சார் கமிட்டியின் அறிக்கையைத் தொடர்ந்து
பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அந்த அறிக்கை
சமர்பிக்கப்பட்ட அதே ஆண்டில் சிறுபான்மையினரின் நலனை கருத்தில் கொண்டு
மத்திய அரசு சிறுபான்மை நலத்துறை அமைச்சகத்தை ஏற்படுத்தி, அத்துறையின்
அமைச்சராக என்னை நியமித்தது. சிறுபான்மையினரின் நலனுக்காக 2011 முதல் 2012
ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் அரசு ரூபாய் 2830 கோடியளவு நிதி
ஒதுக்கியுள்ளது. எந்த மாவட்டத்தில் 25 சதத்திற்கும் அதிகமான முஸ்லிம்
மக்கள் தொகை உள்ளதோ அதனை சிறுபான்மையினர் அதிகம் வாழும் மாவட்டமாக கருதி
பல்துறை முன்னேற்ற திட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்றும்
முஸ்லிம்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் என்றும் அரசு
உத்தரவிட்டுள்ளது. பிரதமரின் 15 அம்ச திட்டத்தின் அடிப்படையில்
சிறுபான்மையினரின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை
முன்னேற்றவும் மேலும் அவர்களுக்கு எதிரான மதக் கலவரங்களை தடுக்கவும் பல
வழிகளை ஏற்படுத்தி வருகிறது” என்றார்.

மேலே குறிப்பிட்ட அனைத்து சலுகைகள்
மற்றும் அரசு திட்டங்களை அரசு நிறைவேற்றி வருவதாக சிறுபான்மையினர்
நலத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறினாலும் அரசு ஒதுக்கியுள்ளதாக
கூறும் அனைத்து நிதியும் முஸ்லிம் சமூகத்திற்கு வந்து சேருவதில்லை என்பது
குறித்து முஸ்லிம் சமூகம் மிகுந்த கோபத்தில் இருக்கின்றனர் என்பதை சச்சார்
அறிக்கை சமர்பிக்கப்பட்டு 5 ஆண்டுகள் கடந்த பிறகும் அதனை நிறைவேற்றக் கூறி
அவர்கள் நடத்தும் போராட்டங்களின் மூலம் நாம் அறிந்துகொள்ள முடியும்.

மேலும் மத்திய அரசு அறிவித்துள்ள அனைத்து
சலுகைகளும் நிதித்திட்டங்களும் உண்மையில் முஸ்லிம் சமூகத்திற்கு போய்
சேருகிறதா இல்லை அரசியல்வாதிகள் அதனை சுருட்டிவிடுகிறார்களா என்பதை மத்திய
அரசு கண்காணிக்க வேண்டும். மேலும் சச்சார் அறிக்கையை அமுல் படுத்துவதில்
என்ன பிரச்சனை? என்பதையும் மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்.


சச்சார் கமிட்டி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவு – மாறியதா முஸ்லிம்களின் நிலைமை?  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11136
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» கோத்ரா தீ விபத்து: 10 ஆண்டுகள் நிறைவு!
» போபால் விஷவாயு விபத்து:27 ஆண்டுகள் நிறைவு
» சச்சார் கமிட்டி திருக்குர்ஆன் அல்ல-சல்மான் குர்ஷிதின் அறிவீனமான அறிக்கைக்கு கடும் கண்டனம்
» பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டு 19 ஆண்டுகள் நிறைவு: நீதியை எதிர்பார்த்து முஸ்லிம் சமூகம்
» மோடிக்கு எதிராக அமிக்கஸ் க்யூரி உச்சநீதிமன்​றத்தில் அறிக்கை தாக்கல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum