தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

சச்சார் கமிட்டி திருக்குர்ஆன் அல்ல-சல்மான் குர்ஷிதின் அறிவீனமான அறிக்கைக்கு கடும் கண்டனம்

Go down

சச்சார் கமிட்டி திருக்குர்ஆன் அல்ல-சல்மான் குர்ஷிதின் அறிவீனமான அறிக்கைக்கு கடும் கண்டனம்   Empty சச்சார் கமிட்டி திருக்குர்ஆன் அல்ல-சல்மான் குர்ஷிதின் அறிவீனமான அறிக்கைக்கு கடும் கண்டனம்

Post by முஸ்லிம் Thu Jun 30, 2011 5:45 pm

புதுடெல்லி:இந்திய முஸ்லிம்களின் பிற்படுத்தப்பட்ட நிலைமையை வரைத்துக்காட்டிய சச்சார் கமிட்டி அறிக்கையை துச்சமாக மதித்து உரை நிகழ்த்திய மத்திய சிறுபான்மை அமைச்சர் சல்மான் குர்ஷிதிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சச்சார் கமிட்டியின் அறிக்கையில் விமர்சனங்கள் திருக்குர்ஆன் வசனங்களை போல பரிசுத்தமானது அல்ல எனவும் அதில் தவறுகள் இருக்கலாம் எனவும் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சல்மான் குர்ஷி கூறிய கருத்துக்கள் விவாதத்தை கிளப்பியுள்ளன.

அமைச்சரின் கருத்துக்களை கடுமையாக விமர்சித்த சச்சார் கமிட்டி செயலாளர் உறுப்பினராகயிருந்த பிரபல பொருளாதார வல்லுநர் அபூ ஸாலிஹ் ஷெரீஃப் சல்மான் குர்ஷிதிற்கு வெளிப்படையான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

ஏராளமான கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளிக்க வேண்டும் என அபூ ஸாலிஹ் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். சச்சார் கமிட்டி அறிக்கையில் சுட்டிக்காட்டியபடி முஸ்லிம்கள் சமூகத்தில் பின் தள்ளப்படுவதற்கு முக்கிய காரணம் காங்கிரஸ் கட்சி உள்பட மத்தியிலும், மாநிலங்களிலும் ஆட்சிபுரிந்த அரசுகளாகும் என அபூ ஸாலிஹ் குற்றம் சாட்டியுள்ளார். இடஒதுக்கீட்டில் கூட பாரபட்சத்தை காண்பித்த இந்த அரசுகள் முஸ்லிம்களை ஒதுக்கி தள்ளினர். பல்வேறு துறைகளில் 60 வருடங்களாக முஸ்லிம்களின் பங்களிப்பு இல்லாமைக்கு என்ன செய்தார்கள் என்பதை அரசுகள் விளக்க வேண்டும்.

அரசின் உண்மை முகம் இழிவுக்கு ஆளாகுமானால் பாரபட்சம் என்ற வார்த்தையை வேண்டுமானால் நீக்கலாம் என அபூஸாலிஹ் கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.
பொது இடங்களில் முஸ்லிம்கள் எவ்வாறு புறக்கணிக்கப்படுகின்றார்கள் என்பதை தெளிவுப்படுத்துவது தான் தனது புதிய ஆய்வு என அபூ ஸாலிஹ் கூறுகிறார். அரசு கல்வி நிலையங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் அரசு தொழில் நிறுவனங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்த கடந்த ஐந்து ஆண்டுகளாக ஐ.மு அரசு என்ன செய்தது? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.

சச்சார் கமிட்டி அறிக்கையை பழித்தூற்றும் சல்மான் குர்ஷித் ஏன் அதனை ஏற்றுக்கொண்டார்? என அபூஸாலிஹ் கேள்வி எழுப்புகிறார். இச்சர்ச்சையை குறித்து பதிலளித்த சல்மான் குர்ஷி, ‘முஸ்லிம்களை மட்டும் சிறுபான்மையினராக பார்ப்பதும், மற்றவர்களை காணாதிருப்பதையும் எதிர்ப்பவன் நான். முஸ்லிம்களுக்கு விமர்சிக்க முடியாத ஒன்று குர்ஆன் மட்டுமே. அதனால் தான் நான் இவ்வாறு கூறினேன்’ என அவர் தெரிவித்துள்ளார்.

சல்மான் குர்ஷித்தின் கருத்துக்களைக் குறித்து பதிலளித்த நீதிபதி ராஜேந்திர சச்சார் ஜூடிஸியல் தொடர்பான விஷயம் என்பதால் இதுக்குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார். சல்மார் குர்ஷித்தின் அரைவேக்காட்டுத்தனமான கருத்துக்கு பல்வேறு முஸ்லிம் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


சச்சார் கமிட்டி திருக்குர்ஆன் அல்ல-சல்மான் குர்ஷிதின் அறிவீனமான அறிக்கைக்கு கடும் கண்டனம்   Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11136
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» சச்சார் கமிட்டி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவு – மாறியதா முஸ்லிம்களின் நிலைமை?
»  ராகுல் கருத்துக்கு பா.ஜ.க. கடும் கண்டனம்!
» மும்பை குண்டுவெடிப்பு:கஷ்மீர் முஃப்தி கடும் கண்டனம்
» மோடிக்கு ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கடும் கண்டனம்!
» இஸ்ரேல்-இந்தியா ஒப்பந்தம்: பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum