தர்மபுரி பஸ் எரிப்பு: தூக்கு தண்டனையை ரத்து செய்ய கருணை மனு !
Page 1 of 1
தர்மபுரி பஸ் எரிப்பு: தூக்கு தண்டனையை ரத்து செய்ய கருணை மனு !
சென்னை: ஊழல் வழக்கொன்றில் அதிமுக தலைவர் ஜெயலலிதாவுக்கு கோர்ட் தீர்ப்பு வழங்கிய சமயத்தில் தர்மபுரி மாவட்டத்தில் வேளாண் பல்கலைமழக மாணவிகள் மூவர் அதிமுகவினரால் பேருந்தோடு சேர்த்து தீக்கிரையாக்கப்பட்டனர்.
மாணவிகள் உயிருடன் எரிக்கப்பட்ட இந்த வழக்கில் தூக்குதண்டணை பெற்ற அ.தி.மு.க.வினர் நெடுஞ்செழியன், முனியப்பன், ரவீந்திரன் ஆகியோர் தற்போது வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தூக்கு தண்டணை உறுதி செய்யப்பட்டதும் குடியரசு தலைவருக்கு கருணை மனு அனுப்பியுள்ளனர். இதனையடுத்து தற்காலிகமாக மூன்று பேருக்கும் தூக்குதண்டணை நிறுத்திவைக்கபட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று இவர்களின் வக்கீல் அண்ணாமலை ஜெயிலில்இவர்கள் மூவரையும் சந்தித்து பேசினார். அப்போது தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டணையை ரத்து செய்யகோரி கவர்னருக்கு கருணை மனு எழுதி அதில் கையெழுத்திட்டு அண்ணாமலையிடம் கொடுத்தனர். அந்த மனுக்கள் சிறையில் இருந்த அதிகாரிகளிடம் ஒப்படைக்கபட்டது. பின்னர் ஜெயில் சூப்பிரண்டு அறிவுடைநம்பி அந்த கருணை மனுக்களை கவர்னருக்கு அனுப்பி வைத்தார்.
இந்நேரம்
Similar topics
» தூக்குத் தண்டனையை ரத்து செய்: பாகிஸ்தானில் குரல் ஓங்குகிறது!
» அப்சல் குருவின் கருணை மனு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது!
» ஷார்ஜாவில் 17 இந்தியர்களுக்கு தூக்கு ?
» கோத்ரா வழக்கு - 11 பேருக்குத் தூக்கு!
» கோத்ரா ரெயில் எரிப்பு: சதித் திட்டமாக இருக்காது – சஞ்சீவ் பட்
» அப்சல் குருவின் கருணை மனு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது!
» ஷார்ஜாவில் 17 இந்தியர்களுக்கு தூக்கு ?
» கோத்ரா வழக்கு - 11 பேருக்குத் தூக்கு!
» கோத்ரா ரெயில் எரிப்பு: சதித் திட்டமாக இருக்காது – சஞ்சீவ் பட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum