தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தெஹ்ரான் தாக்குதல்களின் பின்புலத்தில் இருப்பது யார்?

Go down

 தெஹ்ரான் தாக்குதல்களின் பின்புலத்தில் இருப்பது யார்?  Empty தெஹ்ரான் தாக்குதல்களின் பின்புலத்தில் இருப்பது யார்?

Post by முஸ்லிம் Sat Dec 04, 2010 4:17 pm

அண்மைக் காலமாக தெஹ்ரானில் இடம்பெற்றுவரும் பயங்கரவாதத் தாக்குதல்களின் காரணமாக ஈரானியக் கல்வியிலாளர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், மேற்படி பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்களில் இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் பின்புலமாக இருப்பதாக ஈரானிய மார்க்க அறிஞர் ஆயதுல்லாஹ் செய்யித் அஹ்மத் கதாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

வெள்ளிக்கிழமை (03.12.2010) இடம்பெற்ற ஜும்ஆத் தொழுகைப் பிரசங்கத்தில் கூடியிருந்த பெருந்திரளான மக்களின் முன்னிலையில் உரை நிகழ்த்திய அவர், ஈரானியக் குடியரசு மீதுள்ள வன்மத்தைத் தீர்த்துக் கொள்ளுவதே இந்தத் தாக்குதல்களின் பிரதான நோக்கம் என்று கருத்துரைத்துள்ளார்.
கடந்த நவம்பர் 30 ஆம் திகதி காலையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் ஈரானியக் கல்வியிலாளரான மாஜித் ஸஹ்ரீரி படுகொலை செய்யப்பட்டதோடு அவரது மனைவி படுகாயமடைந்தார். மற்றொரு குண்டுவெடிப்புச் சம்பவத்தின் போது பல்கலைக்கழகப் பேராசிரியரான கலாநிதி ஃபரிதூன் அப்பாஸி படுகொலையுண்டார். அன்னாரின் துணைவியார் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏறத்தாழ 31 வருடகாலமாக உலகப் பொருளாதாரத் தடையினை எதிர்கொண்டும் சற்றும் தளர்வுற்று விடாமல் விடாமுயற்சியோடு போராடி அடுத்தடுத்துப் பல்வேறு துறைகளிலும் சாதனைகளைப் படைத்துவரும் ஈரானிய நாட்டின் அபிவிருத்தியைக் கண்டு மனம் பொறுக்க முடியாமல் பழிதீர்த்துக் கொள்ளுமுகமாகவே இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல்கள் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுகின்றன என்று ஆயதுல்லாஹ் செய்யித் அஹ்மத் கதாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


எத்தனையோ தடைகளைத் தாண்டி ஈரான் வளர்ச்சியடைந்துள்ளதைக் கண்டு அதன் எதிரிகளிடையே ஏற்பட்டுள்ள மனக்கிலேசமும் விரக்தியுமே இத்தகைய சூழ்ச்சித் திட்டங்களுக்கும் கோழைத்தனமான நடவடிக்கைகளுக்கும் காரணமாக அமைந்துள்ளன என ஈரான் தெரிவித்துள்ளது.

இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 11136
Points Points : 42
வயது வயது : 36
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
»  முஸ்லிம்களில் பலர் அடிப்படைவாதிகளாகவும் - பயங்கரவாதிகளாகவும் இருப்பது ஏன்?.
» ஜெர்மனி பேக்கரியில் குண்டு வைத்தது யார் ?
» தான் யார் என்பதையே மறந்துவிட்ட பலஸ்தீன் கைதி
»  திருக்குர்ஆன் அரபி மொழியில் இருப்பது ஏன்? அதற்கு ஏதேனும் சிறப்பு உள்ளதா?
» அமெரிக்க எதிர்ப்பு பிரச்சாரத்தில் உறுதியாக இருப்பது என்.டி.எஃப்: விக்கிலீக்ஸ் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum