அமெரிக்காவில் மிக வேகமாக வளரும் அரபி மொழி
Page 1 of 1

அமெரிக்காவில் மிக வேகமாக வளரும் அந்நிய மொழிகளில் அரபி மொழி முன்னணியில் உள்ளது. சென்ற கல்வி ஆண்டில் அதிகமான அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் அரபி மொழிக்கான வகுப்பில் இணைந்துள்ளனர். கடந்த 2006 ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் இது 46 சதவிகித வளர்ச்சியாகும் என்று ஓர் ஆய்வு அறிக்கை கூறுகின்றது.
ஆங்கிலத்தை தொடர்ந்து அதிகம் படிக்கும் மொழிகளின் பட்டியலில் லத்தின் மற்றும் ரஷ்ய மொழிகளை பின்னுக்கு தள்ளி எட்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியல் 1958 ம் ஆண்டிலிருந்து வெளியிடப்படும் நவீன மொழிகளுக்கான அமைப்பு Modern Language Association (MLA) வெளியிடும் 22 வது பட்டியலாகும்.
மேலும் இந்த பட்டியலில் கொரியன் 19 சதவிகிதமும், சைனீஸ் 18.2 சதவிகிதமும், அமெரிக்க சைகை மொழி 16.4 சதவிகிதமும் போர்சுகீசிய மொழி 11 சதவிகிதமும் வளர்ச்சியடைந்து முக்கிய இடத்தை பிடித்துள்ளன.
8,65,000 மாணவர்கள் சேர்க்கையை கொண்டு ஸ்பானிஷ் மொழி முன்னணியில் உள்ளது, 2006 ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் இது 5 சதவிகித வளர்ச்சியாகும், தொடர்ந்து பிரஞ்சு மொழி 2,16,000 சேர்க்கையுடன் 5 சதவிகிதமும் ஜெர்மன் மொழி 96,000 சேர்க்கையுடன் 2 சதவிகிதமும் வளர்ச்சியடைந்துள்ளன
1968 ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் கலவரம் நடந்த காலகட்டத்தில் பிரஞ்சு மொழி அதன் உச்சகட்டமாக 3,88,000 மாணவர்கள் சேர்க்கையை கொண்டிருந்தது ஆனால் 1980 ம் வருடம் 2,48,000 ஆக குறைந்தது. அதே போல் ரஷ்ய மொழி 1980 ம் ஆண்டு 24,000 எண்ணிகையில் இருந்து 1990 ம் ஆண்டு 45,000 ஆக அதிகரித்தது. பின் சோவியத் யூனியன் உடைந்த 5 வருட காலத்திற்குள் 25,000 ஆக குறைந்தது.
1998 ம் ஆண்டு 5,500 ஆக இருந்த அரபி மொழியின் சேர்க்கை 2002 ம் ஆண்டு ஈராக் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு பின் 10,584 ஆக உயர்ந்தது. இப்போது 2010-ல் இந்த எண்ணிக்கை 35,000 ஆக உயர்ந்து உள்ளது.
இந்த ஆய்வறிக்கை 2,514 அமெரிக்க பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆய்வு நடத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இது அமெரிக்காவின் உயர் கல்வி நிறுவனங்களில் 99 சதவிகிதமாகும்.
இந்நேரம்

Similar topics
» அமெரிக்காவில் பரவும் போராட்டம்!
» அமெரிக்க எதிர்ப்பை மூலதனமாக கொண்டு வளரும் இம்ரான் கான்
» பூமியை நோக்கி வேகமாக பாய்ந்து வரும் செயலிழந்த செயற்கைகோள்!
» இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் மற்றும் வளரும் நாடுகள்
» மிகவும் எச்சரிக்கைOrkut யில் வேகமாக பரவி வரும் வைரஸ்(" Bom sabado " அல்லது "Bomb Amungu" )எச்சரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum