பூமியை நோக்கி வேகமாக பாய்ந்து வரும் செயலிழந்த செயற்கைகோள்!
Page 1 of 1
பூமியை நோக்கி வேகமாக பாய்ந்து வரும் செயலிழந்த செயற்கைகோள்!
வாஷிங்டன்:
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் அனுப்பிய 6 டன் எடையுள்ள ஒரு
செயற்கைக் கோள் கடந்த 20 ஆண்டுகளாக பூமியைச் சுற்றிக் கொண்டிருந்தது அது
தற்போது செயலிழந்த நிலையில் பூமியை நோக்கி வேகமாக வந்து கொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின்
நாசா விண்வெளி ஆய்வு மையம் கடந்த 1991ம் ஆண்டு அப்பர் அட்மாஸ்பியர்
ரிசர்ச் சேட்டிலைட் என்ற செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது. ரூ.3,525 கோடி
செலவில் அனுப்பப்பட்ட இது ஓசோன் படலம் மற்றும் பூமியின் வளி மண்டலத்தைப்
பற்றி ஆராய்ந்து வந்தது. இது நாசா விஞ்ஞானிகளால் கடந்த 2005ம் ஆண்டு
செயலிழக்க வைக்கப்பட்டது. அதன் பிறகு அது பூமியை நோக்கி வந்து
கொண்டிருக்கிறது.
பேருந்து அளவில் உள்ள அந்த செயற்கைக்கோள் வரும்
வெள்ளிக்கிழமையன்று பூமியை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு நாள்
முன்னதாகவோ அல்லது பின்போ வரவும் வாய்ப்பு உள்ளது. பூமியை வந்தடையும்போது
26 பெரிய துண்டுகளாக அது உடையும்.
இவ்வாறு
உடைந்து வரும் பாகங்கள் பூமியின் மூன்றில் இரண்டு பகுதியை ஆக்கிரமித்துள்ள
கடல் பகுதியில் விழ அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி தவறும் பட்சத்தில் வடக்கு
கனடாவுக்கும் தென்அமெரிக்காவின் தென்பகுதிக்கும் இடையில் பூமியின் மீது
விழவும் வாய்ப்பு உள்ளதாகவும் அவ்வாறு விழும்போது மனிதர்கள் மீது விழுந்து
பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இந்நேரம்
Similar topics
» மிகவும் எச்சரிக்கைOrkut யில் வேகமாக பரவி வரும் வைரஸ்(" Bom sabado " அல்லது "Bomb Amungu" )எச்சரிக்கை
» பூமியை குடைந்து சென்று தாக்கும் அணுகுண்டு! அமெரிக்கா கண்டுபிடிப்பு
» அமெரிக்காவில் மிக வேகமாக வளரும் அரபி மொழி
» மோடி போன்ற நபர்களிடமிருந்து நாட்டை காப்பாற்ற வரும் வெள்ளியன்று உண்ணாவிரதம்
» ஐரோப்பிய பங்குசந்தை வீழ்ச்சியை நோக்கி
» பூமியை குடைந்து சென்று தாக்கும் அணுகுண்டு! அமெரிக்கா கண்டுபிடிப்பு
» அமெரிக்காவில் மிக வேகமாக வளரும் அரபி மொழி
» மோடி போன்ற நபர்களிடமிருந்து நாட்டை காப்பாற்ற வரும் வெள்ளியன்று உண்ணாவிரதம்
» ஐரோப்பிய பங்குசந்தை வீழ்ச்சியை நோக்கி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum