ஐரோப்பிய பங்குசந்தை வீழ்ச்சியை நோக்கி
Page 1 of 1
ஐரோப்பிய பங்குசந்தை வீழ்ச்சியை நோக்கி
லண்டன்:ஆசிய பங்குச் சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சியை தொடர்ந்து ஐரோப்பிய பங்குச் சந்தையும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
அமெரிக்காவின் க்ரெடிங் குறைந்ததும், சில ஐரோப்பிய நாடுகள் கடன் நெருக்கடியில் சிக்கியிருப்பதும் முதலீட்டாளர்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இது பங்குச் சந்தையில் பிரதிபலித்துள்ளது. டாலரின் மீதான நம்பிக்கையை இழந்த முதலீட்டாளர்கள் தங்கத்தை நோக்கி தங்களது பார்வையை திருப்பியதன் விளைவு மஞ்சள் உலோகத்தின் விலை பெருமளவில் உயர்ந்துள்ளது. தங்கம் அவுன்ஸிற்கு 1732.55 டாலராக உயர்ந்துள்ளது.
லண்டனின் பங்குச்சந்தை குறியீட்டு எண் எஃப்.டி.எஸ்.இ 100 நேற்று வர்த்தகத்தை துவங்கிய வேளையில் 3.5 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்தது. ஜெர்மனியில் டாக்ஸ் 5.5 சதவீதமும், பிரான்சின் பங்குச்சந்தை குறியீடு சி.எ.சி 3.3 சதவீதமும் நஷ்டத்தை பதிவுச்செய்தன. காலையில் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்திய டோக்கியோ குறியீடு சற்று தனது நிலையை மேம்படுத்தி 1.6 சதவீத நஷ்டத்தில் தனது வர்த்தகத்தை முடித்துக்கொண்டது.
ஹாங்காங்கில் ஹாங்செங் 5.66 சதவீதமும், தென் கொரியாவில் குறியிட்டு எண் 3.63 சதவீதமும் தாழ்ந்தது. கச்சா எண்ணெயின் விலை ஒரு வருடத்தின் மிகவும் குறைந்த விலையை சந்தித்துள்ளது. பேரலுக்கு 76 டாலராக நேற்றைய தினம் அதன் விலை அமைந்தது. சர்வதேச பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து கச்சா எண்ணெய்க்கான தேவை குறைந்துவிடும் என கருதி விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
சீனாவில் பணப்பெருக்கம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் கடன் பத்திரங்களை அதிகமாக வாங்கியது சீனாவாகும். ஜூலை மாத பணப்பெருக்க அளவை நேற்று சீனா வெளியிட்டது.

Similar topics
» ஐரோப்பிய பாராளுமன்ற தலைவராக ஷூல்ஸ் நியமனம்
» முஸ்லிம்களுடன் புரிந்துணர்வு நோக்கி நகர்கிறோம் - ஒபாமா
» ஈரான் எண்ணெய்க்கு ஐரோப்பிய யூனியன் தடை
» ஃப்ரீடம் புளோடில்லா-2 இல் இணையும் 12 ஐரோப்பிய நாடுகள்
» ஐரோப்பிய நாடாளுமன்றத் தலைவரின் காஸா விஜயம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum