சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் ஆம்புலன்ஸால் தப்பிய ஏ.டி.எம். எந்திரம்!
சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் ஆம்புலன்ஸால் தப்பிய ஏ.டி.எம். எந்திரம்!
இருங்காட்டுகோட்டை: சென்னை அருகே இருங்காட்டுகோட்டையில் காவலாளியை கட்டிப் போட்ட முகமூடி திருடர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை தூக்கிச் செல்ல முயன்றனர். ஆனால், அந்த நேரத்தில் சைரன் ஒலியுடன் ஆம்புலன்ஸ் வந்ததால் எந்திரத்தை போட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர்.
இருங்காட்டுகோட்டையில் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் ஏ.டி.எம். உள்ளது.
இங்கு நேற்றிரவு கிருஷ்ணன் (40) என்ற காவலாளி பணியில் இருந்தார். இன்று அதிகாலை 2 மணியளவில் முகமூடி அணிந்த 4 கொள்ளையர்கள் அங்கு வந்து கிருஷ்ணனை கத்தியால் குத்தினர். அவரை கை, கால்களை கட்டிப் போட்டுவிட்டு ஏ.டி.எம். எந்திரத்தையே பெயர்த்து எடுத்தனர்.
தாங்கள் வந்த வேனில் ஏ.டி.எம். எந்திரத்தை ஏற்ற முயன்றனர்.
அப்போது அந்த வழியாக ஒரு ஆம்புலன்ஸ் சைரன் ஒலி எழுப்பியபடி வந்தது.
அதைக் கேட்டதும் போலீஸார் வருவதாக நினைத்து ஏ.டி.எம். எந்திரத்தை ரோட்டிலேயே போட்டு விட்டு தப்பி சென்றுவிடடனர்.
இதையடுத்து கிருஷ்ணன் கட்டுகளை அவிழ்த்துக் கொண்டு போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
அந்த ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.27 லட்சம் பணம் இருந்தது குறிப்பிடத்தக்கது. கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தட்ஸ்தமிழ்
» நில மோசடி வழக்கு: எடியூரப்பா சரண்; பெங்களூர் சிறையில் அடைப்பு!
» குண்டு வெடிப்பிலிருந்து சென்னை இரயில் தப்பியது
» சென்னை மண்ணடியில் நடந்தது என்ன?
» சென்னை - அமெரிக்கத் தூதரகத்துக்கு மர்ம மின்அஞ்சல்