குண்டு வெடிப்பிலிருந்து சென்னை இரயில் தப்பியது
Page 1 of 1

அசாம் மாநிலம் கோக்ராக்கர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பிலிருந்து கவுகாத்தி- சென்னை இரயில் தப்பியதால், மிகப் பெரிய அசம்பாவித நிகழ்வு தவிர்க்கப்பட்டுள்ளது. இது பற்றிய செய்தியாவது:
அசாம் மாநிலம் கோக்ராக்கர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீராம்பூர் மற்றும் பகிராப்பூர் இரயில் நிலையங்களிடையிலுள்ள அலக்கார் என்ற இடத்திலுள்ள தண்டவாளத்தில் மிகுந்த சக்தியுடன் கூடிய குண்டு வெடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்பினால் தண்டவாளம் துண்டிக்கப்பட்டதோடு அந்த இடத்தில் 7 அடி நீளமும் 2 அடி ஆழமும் கொண்ட பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்ததும் இரயில்வே பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தியதில் கியாஸ் சிலிண்டர் மூலம் இந்த குண்டு வெடிப்பு நடத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இக்குண்டு வெடிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு கவுகாத்தி- சென்னை இரயில் அவ்விடத்தை கடந்து சென்றதால், மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இக்குண்டு வெடிப்பை போடோ தீவிரவாத அமைப்பிடமிருந்து பிரிந்து சென்று தனித்துச் செயல்படும் பிரிதொரு அமைப்பே செய்திருக்கும் என்று சந்தேகித்து காவல்துறை விசாரணையை தொடங்கியது. ஆனால் இச்சம்பவத்திற்கு ஆதிவாசி போராட்டக்குழு பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது விசாரணையின் போக்கை மாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நேரம்

Similar topics
» உலகிலேயே அதிவேக இரயில் சேவை தொடக்கம்!
» சென்னை மண்ணடியில் நடந்தது என்ன?
» சென்னை - அமெரிக்கத் தூதரகத்துக்கு மர்ம மின்அஞ்சல்
» அத்வானி, மோடி இன்று சென்னை வருகை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum