அமெரிக்க இராணுவத்தால் கந்தஹாரில் 100 மில்லியனுக்கு மேல் சேதம்
Page 1 of 1
அமெரிக்க இராணுவத்தால் கந்தஹாரில் 100 மில்லியனுக்கு மேல் சேதம்
கடந்த ஆறு மாத காலமாக கந்தஹாரில் அமெரிக்க இராணுவத்தினால் வீடுகள், பண்ணைகள் முதலானவற்றுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள உடைமைச் சேதங்களின் மொத்தப் பெறுமதி சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களைவிட அதிகமாகும் என ஆப்கானிய கமிஷன் தெரிவித்துள்ளது.
இந்நேரம்
கடந்த வியாழக்கிழமை (13.01.2011) நிவ்யோர்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் இந்தப் புதிய கணிப்பீடு, இதற்கு முன்னர் அமெரிக்க இராணுவம் வெளியிட்டிருந்த புள்ளிவிபரத்திலிருந்து (1.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) பெரிதும் வேறுபடுவதாகக் குறிப்பிட்டுள்ளது. இந்தப் புள்ளிவிபரத்தை வெளியிட்டவர் கந்தஹார் பிராந்தியத்துக்குப் பொறுப்பாக இருந்த கமாண்டர் மேஜர் ஜெனரல் ஜேம்ஸ் டெர்ரி என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிய கமிஷனின் அறிக்கையில் 900 இற்கும் அதிகமான ஆப்கானிய வீடுகள் அமெரிக்கத் துருப்பினரால் வேண்டுமென்றே இடித்துத் தகர்க்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடுகள், பழத்தோட்டங்கள், பெருந்தெருக்கள் என்பவற்றின்மீது இடையறாது மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்கள், புதைக்கப்பட்ட கண்ணிவெடிகள் என்பவற்றினாலேயே பெருமளவு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக கந்தஹாரின் ஆளுநர் கூறியுள்ளார்.மேற்படி ஆப்கானிய கமிஷனின் தலைவர் முஹம்மத் ஸாதிக் அஸீஸ் கருத்துரைக்கையில், 'கந்தஹார் பிராந்தியத்தைச் சேர்ந்த மூன்று மாவட்டங்களில் வயல்வெளிகளை அடுத்திருந்த 800-900 வீடுகளும், ஒரு லட்சத்திற்கும் அதிகமான மரங்களும் நிர்மூலமாக்கப்பட்டுள்ளன என்று நம்முடைய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நேரம்
Similar topics
» மே 2011: ஆக்கிரமிப்பு இராணுவத்தால் 370 பலஸ்தீனர்கள் கைது
» ஆக்ராவில் குண்டுவெடிப்பு: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் இல்லை
» பத்தாண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்க! ஜவாஹிருல்லாஹ்
» 1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கு: உச்சநீதிமன்ற மேல் முறையீடு மனு மீதான விசாரணை தொடங்கியது
» அப்சல் குருவை தூக்கிலிட கூடாது என்று சொல்வதில் என்ன தவறு ? – பாஜக மேல் ஐக்கிய ஜனதா தளம் காட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum